தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 augustus 2014

சுயமாக நாடுதிரும்பும் அகதிகளுக்கு டோனியின் அரசாங்கம் 3 மில்லியன் டொலர்கள் செலவிட்டுள்ளதாம்!!

போர்க்குற்றச்சாட்டு சாட்சியங்களை தடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கம்
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 03:46.51 PM GMT ]
இலங்கையின் உள்நாட்டு போர் தொடர்பிலான சாட்சியங்களை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் திட்டமிட்டு தடுக்கிறது என்று சிவில் சமூக குழுக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர் அரசாங்கத்தின் மீது ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் கடந்த மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சர்வதேச விசாரணைக்கு ஒப்புதல் வழங்கியது.
எனினும் விசாரணையாளர்களுக்கு விசா வழங்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது.
இதன் அடிப்படையிலேயே இலங்கையில் இருந்து சாட்சியங்கள் சென்று விடக்கூடாது என்ற விடாப்பிடியில் இலங்கை அரசாங்கம் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையிலேயே அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்து வருகிறது என்று சமூக ஜனநாயக நிலையத்தின் பணிப்பாளர் குசல் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியங்களை வெளியிடக் கூடியவர்கள் என்ற வகையில் ஊடகவியலாளர்களை பாதிக்கப்பட்ட தமிழர்கள் கருதுவதன் காரணமாக அவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதை அரசாங்கம் தடுத்து வருவதாக ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் அமைப்பின் பணிப்பாளர் வெலியமுனே சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnq3.html
சுயமாக நாடுதிரும்பும் அகதிகளுக்கு டோனியின் அரசாங்கம் 3 மில்லியன் டொலர்கள் செலவிட்டுள்ளதாம்!
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 04:35.41 PM GMT ]
அதிகாரத்துக்கு வந்தபின்னர் டோனி அபோட்டின் அரசாங்கம் சட்டவிரோத அகதிகளை எனப்படுவோரை அவர்களின் நாடுகளுக்கு திருப்பியனுப்புவதற்காக 3 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் குடிவரவு திணைக்களத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகள் சுயமாகவே நாடு திரும்பும் போது அவர்களுக்காக கடந்த செப்டம்பர் முதல் இந்த வருடம் ஜூலை 16 ஆம் திகதிவரை 3 மில்லியன் டொலர்களை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்படி குறித்த காலப்பகுதியில் 1151 அகதிகள் சுயமாகவே நாடு திரும்பியுள்ளனர்.
இவர்களில் 102 இலங்கையர்களும் அடங்குகின்றனர். இந்தியர்கள் 32 பேர் இதில் உள்ளடங்கியிருந்தனர்.
இந்தநிலையில் இது ஒரு அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் வழங்கப்படுவதாக அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை சட்டவிரோத அகதிகளை தடுப்பதற்காக குறித்த கொடுப்பனவுகளை அதிகரித்திருப்பதாக கடந்த மாதம் அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இதன்படி சுயமாக நாடு திரும்பும் ஒருவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 3300 டொலர்கள் முதல் 10 ஆயிரம் டொலர்களை வரை வழங்குகிறது.
இதில் லெபனானியர்களுக்கே 10000 டொலர்கள் என்ற அதிக பணம் வழங்கப்படுகிறது.
எனினும் அவுஸ்திரேலியாவில் தொழிலாளி ஒருவருக்கு 1500 முதல் 4000 டொலர்கள் வரையிலேயே கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnq5.html

Geen opmerkingen:

Een reactie posten