25 Aug 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1408954135&archive=&start_from=&ucat=1&
இந்தியா இலங்கையின் இறைமையை மதித்து செயற்பட வேண்டும் - மகிந்தவின் ஆலோசகர் அவ்டேஸ் |
இந்தியா இலங்கையின் இறைமையை மதித்து செயற்பட வேண்டுமென காணமற்போனார் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய மனித உரிமை பணியாளர் அவ்டேஸ் கவுசல் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரிவினைவாதிகளுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டால் இந்தியாவின் உணர்வுகள் எவ்வாறிருக்கும், தமிழர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து தம்மை இலங்கையர்களாக கருதி அந்த நாட்டின் அரசமைப்பு, சட்டங்களிற்கு கட்டுப்பட வேண்டும், அவர்கள் வட மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை கோர கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: இந்தியா இலங்கையுடன் பேச்சுக்களை மேற்கொள்ளலாம், ஆலோசனை வழங்கலாம், ஆனால் அந்த நாடு எப்படி நடந்துகொள்ளவேண்டும் என உத்தரவிட முடியாது. இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றயைவர்களின் இறைமையை மதித்து செயற்பட வேண்டும் இந்திய பிரிவினைவாதிகளுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டால் இந்தியாவின் உணர்வுகள் எவ்வாறிருக்கும், நாங்கள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற கூடாது,
பேரியண்ணண் மாதிரி செயற்பட்டு அழுத்தங்களை கொடுக்க கூடாது, எமது நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும், 13வது திருத்தத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பாராட்டவேண்டும். எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறைமைக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும் - அவ்தாஸ் கௌசால் இலங்கையின் இறைமைக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டுமென இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர் அவ்தாஸ் கௌசால் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவாகள் மற்றும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்குழுவில் கௌசால் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனைகளை வழங்க முடியுமே தவிர, ஏதேனும் ஒன்றைச் செய்யுமாறு வலியுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் பரஸ்பர இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும் எனஅவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது எனவும், பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடுகளின் மீது இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிலிருந்து சென்றோம் என்பதனை மறந்து இலங்கையர்கள் எனக் கருதிக்கொள்ள வேண்டுமெனவும், இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டுமெனவும் அவர் வலிறுயுத்தியுள்ளார். |
25 Aug 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1408956181&archive=&start_from=&ucat=1& |
|
Geen opmerkingen:
Een reactie posten