தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 augustus 2014

அரசின் இரு முக்கிஸ்தர்களை கொலை செய்ய சதி! நால்வர் கைது!

9 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் அந்நிய செலாவணி!- மத்திய வங்கி
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 09:44.15 AM GMT ]
இலங்கையின் அதிகாரபூர்வ அந்நிய செலவாணி கையிருப்பு 9 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்திருப்பது இதுவே முதல் முறையாகும் என இலங்கை அரசாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது இலங்கையின் பொருளாதார பலத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சி எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
இந்த அந்நிய செலாவணி கையிருப்பானது 6 மாதங்களுக்கு இறக்குமதிகளை செய்ய போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdms5.html

நாடெங்கிலும் வாழ்ந்த தமிழர்கள் கடைசியில் வடக்கு கிழக்கிற்கு தள்ளப்பட்டார்கள்: சீ.வி.விக்னேஸ்வரன்
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 10:12.01 AM GMT ]
முதியோர்களை ஏனோ தானோ என்று நடத்தினால் அவர்கள் மனங்கள் புண்படும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, தேவிபுரம் ஆகிய பகுதிகளில் மூத்த பிரஜைகளுக்கான இல்லம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் குறித்த இல்லக் கட்டிடங்களை திறந்துவைத்து மேலும் அவர் உரையாற்றுகையில்,
இன்று உலகத்தின் முதியோர் தொகை அதிகரித்து வருகின்றது. காரணம் எமது வைத்திய சேவைகள் பலவிதத்திலும் எம்மைக் காப்பாற்றி நீண்ட ஆயுளை ஊர்ஜிதப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு நவீன மாற்றுவழி இணைப்புச் சத்திர சிகிச்சையானது (Bypass Surgery) அவ்வாறான அறுவை மருத்துவத்தின் பின்னர் ஒரு மனிதனை பல வருடங்கள் இளைமை எய்தியவராக இருந்து வாழ வழி வகுக்கின்றது.
மேலைநாடுகளில் மேற்படி சத்திரசிகிச்சைகள் பலதின் பின்னர் மலை ஏறுவோரும் உளர். அடுத்து மலேரியா போன்ற நோய்கள் இளைமைப் பருவத்தில் பலரின் உயிர்களைப் பலியெடுத்தது. இன்று மலேரியா சில காலம் மறைந்திருந்த பின்னர் மீண்டும் தலையெடுக்க எத்தனித்தாலும் மரணங்கள் அதன் பொருட்டு ஏற்படுவது மிகக் குறைவே. ஆகவே முதியோர்கள் தொகை கூடக் கூட அவர்களைப் பற்றிய சமூக சிந்தனைகளும் கடப்பாடுகளும் கூடிக் கொண்டு செல்கின்றன.
எமது தமிழ் பேசுஞ் சமுதாயமானது பாரிய சமூக மாற்றத்தினுள் அகப்பட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கின்றது. என்னைப் போன்ற முதுமை அடைந்தவர்களுக்கு அது தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது. எமது இளைமை நாட்களில் நாம் இலங்கை எங்கும் சென்று வந்தோம். உதாரணத்திற்கு திஸ்ஸமகாராம என்ற தென்பகுதிக் கிராமத்தில் இருந்த வயல் நிலங்களில் பெரும்பான்மையானவை தமிழர்களுக்கே சொந்தமாக இருந்தன.
அங்கு வசிக்கையில் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள் அவர்கள். ஆனால் போதிய வருமானம் பெற்றார்கள். சிங்கள மக்களுடன் மிகவும் சுமுகமான உறவினை வைத்திருந்தார்கள். சரளாமாகச் சிங்களம் பேசினார்கள். சிங்கள மக்கள் பலருக்குப் பலவிதமான உதவிகள் செய்தார்கள்.
1958ம் ஆண்டு நடந்த கலவரத்தின் பின்னர் அவர்கள் யாவரும் வடகிழக்கை நோக்கிப் பயணிக்க நேர்ந்தது. பலரின் காணிகள் இன்னும் அவர்களின் பெயர்களில் இன்றும் உள்ளன. ஆனால் வேற்றார் ஆக்கிரமித்து விட்டார்கள். படிப்படியாக நாடெங்கும் பரந்து வாழ்ந்த தமிழ் பேசுஞ் சமூகம், முள்ளிவாய்க்காலுக்கு மக்கள் போரின் கடைசிக் கட்டத்தில் தள்ளப்பட்டது போன்று வடக்கு கிழக்கிற்குத் தள்ளப்பட்டார்கள்.
பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி இன்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நாம் இருக்கின்றோம். போரைச் சாட்டாக வைத்து வடகிழக்கை பலவிதத்திலும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. பயத்தின் காரணத்தால் மக்கள் ஆயுதம் ஏந்தியவரை அணைத்துச் செல்ல வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள்.
ஜனநாயகம் துளிர் பெற்றிருந்த இந்த நாட்டில் ஆயுத கலாச்சாரம் படம் எடுத்து ஆடத் தொடங்கி இன்று விசித்திரமான விதங்களில் விதை போட்டுப் பயிராகிக் கொண்டிருக்கின்றது.
 வீட்டில் இருந்து வந்து அளவளாவிவிட்டுத் திரும்பவுந் தத்தமது வீடுகளுக்கே செல்லவிருந்தாலுங் கூட அவர்கள் இங்கிருக்கும் போது ஏதேனும் சுகக் குறைவு ஏற்பட்டால் உடனே அவர்களைப் பார்த்துப் பராமரிக்கக் கூடிய வைத்திய சேவை, தாமதம் இன்றிக் கிடைக்க வழி வகுக்கப்பட வேண்டும். மேலும் முதியோர் கூட தமது வாழ்க்கை முடியுந் தறுவாயில் இருக்கின்றது என்ற எண்ணத்தில் எல்லாவற்றையும் கைவிட்ட ஒரு மனோ நிலைக்குச் செல்லாது “எம்மால் இந்த ஊருக்கு எதனைச் செய்து கொடுக்கலாம்?” என்ற கேள்விக்குப் பதில் காண முனைய வேண்டும்.
உதாரணத்திற்கு அழிந்து போய்க் கொண்டிருக்கும் எமது பாரம்பரிய விவசாய, மீன்பிடி, மற்றைய தொழில்கள் சார்ந்த அறிவினை எமது பின்வருவோருக்கு அறிவுறுத்தும் வகையில் சிறு சிறு கைநூல்களாக நீங்கள் வெளிக் கொண்டுவரலாம்.
இறுவெட்டுக்களில் வடித்து வைக்கலாம். சிறு சிறு கைத்தொழில்களில் சேர்ந்து ஈடுபடலாம். முக்கியமாக ஒரு கேள்வியை எங்களிடமே நாங்கள் கேட்க வேண்டும். உங்களுக்கு சமூகம் தந்ததை அந்த சமூகத்திற்கு ஏதாவதொரு வழியில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கடப்பாடே அது என விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdms6.html

அனுராதபுரத்தில் வீதி விபத்து - பிரான்ஸ் பெண் காயம்
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 10:20.38 AM GMT ]
அனுராதபுரம் - புலன்குளம் பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டு பெண்ணொருவர் விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.
டிப்பர் வாகனம் ஒன்றில் மோதியதில் காயமடைந்த அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண்ணும் மற்றுமொரு 26 வயதான பிரான்ஸ் பெண்ணும் அனுராதபுரம் -கட்டுகெலியாவ பிரதேசத்தில் இருந்து லங்காராம தாகேப நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்தனர்.
புலன்குளம் கும்பிய பிரதேசத்தில் வளைவு அருகில் முன்னால் சென்ற டிப்பர் வண்டி திடீரென நிறுத்தப்பட்டதால், பிரான்ஸ் பெண் ஓட்டிச் சென்ற துவிச்சக்கர வண்டி டிப்பர் வாகனத்தில் மோதியுள்ளது.
மட்டக்களப்பு மீறாவோடையில் கைக்குண்டொன்று மீட்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மீறாவோடையில் கைக்குண்டொன்று இன்று காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மீறாவோடையைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவரது வீட்டில் இருந்தே M4 ரக கைக்குண்டு -1 மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வழக்கம் போல் வீட்டின் வளவினை துப்பரவு செய்யும் பணியில் திருமதி அப்துல் மஜீத் ஈடுபட்டிருந்த போது, வீட்டின் அத்திவார பின் புற ஓரப்பகுதியில் இருந்து மர்மப் பொருளொன்று தகரப் பேனியினுள் அடைக்கப்பட்ட நிலையில் கண்டுள்ளார்.
குறித்த பொருள் என்னவென்று பார்பதற்காக தகரப்பேனியினை உடைத்துப் பார்த்த பொழுது, வெடிப்பொருள் என அறிந்து வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
வாகரையில் கடும் காற்று - பல வீடுகள் சேதம்
வாகரை பிரதேசத்தில் காற்றுக்காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வாகரை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாகரை பிரதேசம் கிருமிச்சை கிராமசேவகர் பிரிவில் நேற்றிரவு வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையினால், பல வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தெரிவித்தார்.
இதன்போது காற்றின் வேகத்தினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் 32 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதினால் மின்சாரம் இல்லாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டோர் தங்களது வீட்டில் இருக்க முடியாத காரணத்தினால் கிருமிச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் உறவினர், நண்பர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு இது தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdms7.html
அரசின் இரு முக்கிஸ்தர்களை கொலை செய்ய சதி! நால்வர் கைது
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 11:10.54 AM GMT ]
அரசாங்கத்தின் இரண்டு முக்கியஸ்தர்களை கொலை செய்யும் நோக்கில் திட்டம் ஒன்றை முன்னெடுத்த நால்வரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தள்ளனர்.
இவர்களில் ஒருவர் முன்னாள் இராணுவ கெப்டன் எனவும் ஏனையோர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என திவயின தகவல் வெளியிட்டுள்ளது.
மேற்படி நான்கு பேரும் இந்த திட்டத்தை செய்படுத்த புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளிடம் நிதி கோரியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கெப்டன் யான்ஜீ என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுபவர் என புலனாய்வு பிரிவின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த நான்கு பேரும் வெளிநாடு ஒன்றில் கைது செய்யப்பட்டு உடனடியாக இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவர்கள் தமது ரகசிய திட்டத்தை செயற்படுத்த இலங்கைக்கு வர திட்டமிட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் சர்வதேச பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் திவயின கூறியுள்ளது.
மலேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் பற்றியே திவயின இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmty.html

Geen opmerkingen:

Een reactie posten