[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 11:24.12 AM GMT ]
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட்டு, வேட்புமனுவை கோருவது தொடர்பில் ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தில் இடம் உள்ளதா என்பதை அறிய உயர்நீதிமன்றத்தை நாட அரசாங்கத்தில் உள்ள சிலர் தயாராகி வருகின்றனர்.
இதனடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிய அதனை ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் படி தேர்தல் அறிவிக்கப்பட்டு 35 முதல் 65 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அவரது வருகைக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என அரசாங்கம் எண்ணுகிறது.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் நான்காவது ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பூர்த்தியாகிறது.
இதன் பின்னர் தேர்தலை அறிவித்தால், தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு தேர்தலை நடத்த நாட்கள் குறைவாக இருந்தால் சிக்கல்கள் ஏற்படக் கூடும். இதற்கு தீர்வாக முன்கூட்டியே தேர்தலை அறிவிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டாலும் வேட்புமனு கோரல் மற்றும் தேர்தல் நடைபெறும் தினம் ஆகியவற்றை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmtz.html
ஆவணங்களை எம்மூடாகவும் வழங்கலாம்: கூட்டமைப்பு அறிவிப்பு
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 11:36.04 AM GMT ]
இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
இறுதி யுத்தம் தொடர்பில் விசாரணை செய்ய ஐ.நா. நியமித்துள்ள நிபுணர் குழுவினர் மேற்கொண்டுவரும் விசாரணையை நாம் வரவேற்கிறோம்.
அந்த குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதுவரையில் மின் அஞ்சல் முகவரி ஒன்று மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த முறை மூலம் சாட்சியங்களை அனுப்பிவைக்க முடியாதவர்கள் தமது முறைப்பாட்டு ஆவணங்களை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்தால், அவற்றை ஐ.நா. விசாரணைக் குழுவிடம் நாம் கையளிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmt0.html
Geen opmerkingen:
Een reactie posten