தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 augustus 2014

இலங்கை மீது சரியான முடிவு எடுக்கப் படும் இந்தியா

ஜெயா மோடியிடம் மன்னிப்புக் கோரியது தாய் நாட்டிற்கு அவமானம் JVP குமுறல்

“அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அரசியல் தேவைக்காக ஐ.நா. சபையையும் யுத்த நடவடிக்கைகளுக்காக நேட்டோவையும், பொருளாதாரத் தேவைப்பாடுகளுக்காக சர்வதேச நாணயநிதியத்தையும் பயன்படுத்துகின்றன. இவ்வாறான சூழ்நிலையில், அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். வெளிவிவகார அமைச்சு முக்கியத்துவமிக்க துறையாகும்.
எனினும், எமது நாட்டு வெளிவிவகார அமைச்சு, சுதந்திரக் கட்சியின் ஒரு கிளையாக மாறியுள்ளது. அரசியல் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, 49 வெளிநாட்டுத் தூதுவர்களுள் 11 பேர் மட்டும்தான் துறைசார்ந்த நிபுணர்கள்.
ஏனைய நியமனங்கள் அரசியல் ரீதியாக வழங்கப்பட்டவையாகும். இதுவா வெளிவிவகாரக் கொள்கை? 1994ஆம் ஆண்டு முதல் இற்றைவரை அமைச்சராகவே வலம்வரும் அமைச்சர் பீரிஸ் தனது சட்டத் திறமையாலும், ஆங்கிலப் புலமையாலும் விடயங்களைச் சப்பி விழுங்குகின்றார் உண்மைகளை மூடி மறைக்கின்றார். சர்வதேச மட்டத்தில் நாட்டை சிக்க வைத்துள்ளார்.
அதேவேளை, ஜனவரி 6ஆம் திகதி பலஸ்தீனத்துக்குச் சென்ற ஜனாதிபதிக்கு பலஸ்தீன நட்சத்திர விருது வழங்கப்பட்டது. பலஸ்தீன மக்களுக்காகக் குரல் கொடுப்பார் எனக் கூறிய ஜனாதிபதி 8ஆம் திகதி இஸ்ரேலுக்குச் சென்றார். இது வெட்கக்கேடான செயலாகும். பலஸ்தீன மக்களைப் பற்றிப் பேசும் அரசு இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஏன் பிரேரணையயான்றைக் கூட கொண்டுவரவில்லை? பலஸ்தீன் – இஸ்ரேல் விவகாரத்தில் உங்கள் கொள்கை என்ன?
தற்போது தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. ஜெயலலிதாவையும், பிரதமர் மோடியையும் அவமானத்துக்குட்படுத்தும் வகையில் காதல் படத்துடன் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது வெட்கக்கேடான செயலாகும். தற்போது இதற்காக இந்தியப் பிரதமரிடமும், தமிழக முதல்வரிடமும் இலங்கை அரசு மன்னிப்புக் கோரியுள்ளது.
இது அரசுக்கு அவமானமல்ல. இந்தச் செயலினூடாக இலங்கைத் தாய்நாட்டையே அரசு தலைகுனிய வைத்துள்ளது. அத்துடன், பொதுநலவாய மாநாட்டின் தலைவராகச் செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணத்தைக் காட்டி அரசு தரப்பிலிருந்து சமாளிப்பு வார்த்தைகள் பிரயோகிக்கப்படுகின்றன” – என்றார்.
http://www.jvpnews.com/srilanka/78751.html

கோட்டாபய மீது அமெரிக்கா வழக்கா? பதறுகிறார் இராணுவப் பேச்சாளர்!

பாதுகாப்பு அமைச்சின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொள்ளுப்பிட் டியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்குப் பின்னர், “இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமெரிக்க ஆங்கில ஊடகமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் பேச்சாளரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “ஒரு நபரை கைதுசெய்ய அல்லது விசாரணைக்குட்படுத்த வேண்டுமெனில் விசாரணை செய்யும் தரப்பிடம் அந்நபருக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருத்தல் அவசியமாகும். அதை விடுத்து ஒருநபரை எவ்வித ஆதாரங்களுமின்றி கைது செய்வதானது சட்டத்திற்குப் புறம்பான காரியமாகும்.
அதேபோல்தான், இந்த விவகாரமும் காணப்படுகிறது. கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அவருக்கெதிராக சாட்சியங்களும், ஆதாரங்களும் நிச்சயமாக இருக்க வேண்டும். ஆகவே, அமெரிக்காவால் இவருக்கெதிராக வழக்குத் தொடர முடியாது” என்றார்.
அதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பாதுகாப்பு இணையத்தளத்தில் வெளியான இந்தியாவுக்கு எதிரானது என்ற சர்ச்சையை ஏற்படுத்திய கட்டுரைக் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பியக் கேள்விக்கு, அக்கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டுள்ள கிராபிக்ஸ் படமே சர்ச்சைக்குரியதென்றும், அக்கட்டுரையானது மீனவர் மற்றும் இனப்பிரச்சினைப் போன்ற வழமையான பிரச்சினைகளையே பதிவு செய்துள்ளதாகவும் அவர் பதிலளித்தார். மேலும், இவ்விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சு தனது விசாரணைகளை தற்போது மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
http://www.jvpnews.com/srilanka/78754.html

கோத்தாவின் மிதக்கும் சந்தைக்காக கொழும்பு முழுவதும் நீர் வெட்டு!


கோட்டாபயவின் திட்டத்தின் கீழ் கொழும்பு பிரதான பேருந்து நிலையத்துக்கு பின்புறமாக இந்த மிதக்கும் சந்தை உருவாக்கப்படுகிறது. இந்த சந்தைக்கான நீரை நிரப்புவதற்காக, கொழும்பில் 72 மணித்தியாலங்களுக்கு குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தது. தமது வேலைத்திட்டம் ஒன்றுக்காக மக்களின் அத்தியாவசிய தேவை ஒன்றுக்கு தடை விதிக்கும் பாதுகாப்பு அமைச்சு, தமது சர்வாதிகாரத்தனத்தை வெளிப்படுத்தி இருப்பதாக அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
Market_Colombo
http://www.jvpnews.com/srilanka/78759.html

இலங்கை மீது சரியான முடிவு எடுக்கப் படும் இந்தியா

புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்களைத் தாக்குவதற்கு ஐஎஸ்ஐயுடன் இணைந்து சதி செய்ததாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், “இந்தியாவும், சிறிலங்காவும் ஒன்று மற்றையதன் கவலைகளைத் தீர்ப்பதற்கு நிறைய வழிமுறைகளைக் கொண்டிருக்கின்றன.  அவை எப்போதுமே பகிரங்கப்படுத்தப்படாதவையாக இருக்கலாம்.
இராஜதந்திரிகள் முன் கதவுகளையே பயன்படுத்துகின்றனர். ஏனையவர்களும் கூட அதனைப் பயன்படுத்துகின்றனர்.  எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான உணர்வுபூர்வமான சூழலில், அவற்றைத் தீர்ப்பதற்கு பொருத்தமான வழிமுறைகைள் கையாளப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பரஸ்பர சட்ட உதவி உடன்பாட்டுக்கு அமைய, கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக நுழைவிசைவுப் பிரிவு அதிகாரியான அமீர் சுபைர் சித்திக் பற்றிய விபரங்களை, இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா அரசிடம் கோரிய நிலையில், குறித்த அதிகாரி இஸ்லாமாபாத்துக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
http://www.jvpnews.com/srilanka/78762.html

Geen opmerkingen:

Een reactie posten