கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனையில் அகப்பட்டார்
நீண்டகாலமாக இந்த கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட இவர், நாட்டின் பல இடங்களில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்றும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவர் நேற்று இரவு அம்பாறையில் இருந்து சாய்ந்தமருது பிரதேசத்துக்கு வந்தபோதே கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவரைக் கஞ்சாவுடன் கைதுசெய்தனர்.
கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை பிரதேசங்களில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக இவர், கஞ்சா கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட இவர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 
http://www.jvpnews.com/srilanka/78885.html
தொண்டைமானாறில் இளைஞர் மீது தாக்குதல்
நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத குழுவினரே தாக்குதல் மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. கழுத்திலும் கால்களிலும் காயமடைந்த இவர், வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இது தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/78888.html
மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
தமிழக மீனவர்களும் 20 பேரும் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிவான் இவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 
http://www.jvpnews.com/srilanka/78891.html
Geen opmerkingen:
Een reactie posten