கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை
கிளிநொச்சி வைத்தியசாலையில் சத்திர சிகிக்சைக்காக சிறுவர்கள் இருவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் 3 வயது சிறுவனுக்கு தவறான சத்திரசிகிச்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறுவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
யோகேஸ்வரன் சுபாஸ் என்ற 3 வயது நிரம்பிய சிறுவன் கேணியா சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில் குறித்த சிறுவனுக்கு சிறுநீரகப் பிரச்சினை தொடர்பான சத்திரசிகிச்சையை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யோகேஸ்வரன் சுபாஸ் என்ற 3 வயது நிரம்பிய சிறுவன் கேணியா சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில் குறித்த சிறுவனுக்கு சிறுநீரகப் பிரச்சினை தொடர்பான சத்திரசிகிச்சையை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மா.சச்சிதன் என்ற ஒன்றரை வயது சிறுவன் சிறுநீரகப் பிரச்சினை தொடர்பான சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த சிறுவனுக்கு கேணியா சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்தபோது, அது பெற்றோர்களால் அறிவிக்கப்பட்டு தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அதிகாரிகளை நியுஸ்பெஸ்ட் தொடர்பு கொள்வதற்கு பல தடவைகள் முயற்சித்த போதும், அவர்கள் அதற்கு உரிய பதிலை அளிக்காமல் தொடர்பைத் துண்டித்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/78907.html
வவுனியா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களுக்கான புதிய விடுதி
வடமாகாண சபையால் குறித்தொதுக்கப்பட்ட 22 மில்லியன் ரூபா கொடை நிதியில் இந்த மூன்றுமாடி விடுதிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சந்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜா, வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் மற்றும் வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர். 
http://www.jvpnews.com/srilanka/78904.html
கொச்சிக்கடை ரயில் நிலையத்தில் ரயில் பாகங்கள் திருட்டு
பழைய ரயில் பெட்டியின் மூன்று கதவுகள் மற்றும் மிதி பலகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் கைதான சந்தேகநபர்கள் கொச்சிக்கடை மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/78901.html
உண்மையை வெளியிட்ட BBC பொறுப்பாசிரியர் பதவியை இழந்தார்
இது குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிடும் முயற்சியில் லண்டன் பி.பி.சி நிறுவனத்தின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பொறுப்பாசிரியர் ஜெராமிபவன் (வயது 54) ஈடுபட்டார். அதில் ஹமாஸ் இயக்கத்தினர் குழந்தைகளையோ பாலஸ்தீன அப்பாவி பொதுமக்களையோ மனித கேடயங்களாக பயன்படுத்தவில்லை. இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழந்தை பலியாகும் அவலம் நேர்ந்து வருகிறது என கள நிலவரம் குறித்த உண்மை தகவல்களை வெளியிட்டார். தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை எடுத்து வரும் பி.பி.சி செய்தி நிறுவனத்தால் இதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளின் பொறுப்பாசிரியர் ஜெராமிபவன் ஹமாஸ் இயக்க ஆதரவாளராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறி அவரை பொறுப்பாசிரியர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளின் நடவடிக்கைகளை ஜெராமி பவன் 2005ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கண்காணித்து வருபவர்.
இதனாலேயே பி.பி.சி செய்தி நிறுவனத்தில் இவருக்கு அப்பிராந்தியத்தின் பொறுப்பாசிரியர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும் ஆர்.டி.எஸ்.தொலைக்காட்சியின் சிறந்த ஊடகவியலாளர் விருதை கடந்தாண்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி நீக்கத்திற்கு பின்னணியில் இஸ்ரேல் ஆதரவு அரசியல் இருப்பதாக உலக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே இங்கிலாந்து அரசின் இஸ்ரேல் ஆதரவு நிலைக்கு எதிராக அந்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. அந்நாட்டின் பெண் அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் ஆதரவு நிலைக்கு கண்டனம் தெரிவித்து தனது பதவியையும் ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
http://www.jvpnews.com/srilanka/78897.html
Geen opmerkingen:
Een reactie posten