தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 augustus 2014

இங்கிலாந்தில் வசிக்கும் நபருக்கு அடையாள அட்டை பெற உதவிய கிராம உத்தியோகத்தர் விளக்கமறியலில்!



கிளிநொச்சியில் வாகனம் குடை சாய்ந்ததில் மூவர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 07:40.49 AM GMT ]
கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இன்று காலை வாகனம் குடை சாய்ந்ததில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வாகனங்கள் ஒன்றையொன்று விலத்திச் செல்ல முற்பட்டவேளை இந்த பாரிய விபத்து ஏற்பட்டது.
வீதியோரத்தில் அமைந்துள்ள கடையொன்றுடன் விபத்துக்குள்ளான வாகனம் மோதிச் சரிந்துள்ளது.
கிளிநொச்சியில் கரடிப்போக்கு சந்திக்கும் கந்தசாமி கோவிலுக்குமிடையில் கடந்த இரு மாதங்களுக்குள் மூன்று பாரிய விபத்துக்கள் இடம்பெற்றதுடன், வாகனங்கள் குடைசாய்ந்து பாரிய சேதங்களுக்குள்ளானமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnxz.html
இங்கிலாந்தில் வசிக்கும் நபருக்கு அடையாள அட்டை பெற உதவிய கிராம உத்தியோகத்தர் விளக்கமறியலில்!
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 08:02.17 AM GMT ]
இங்கிலாந்தில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக கிராம உத்தியோகத்தர் சான்றிதழை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிராம உத்தியோகத்தர் ஒருவரையும் மற்றுமொரு சந்தேக நபரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்சை மேலதிக நீதவான் ரங்கஜீவ விமலசேன உத்தரவிட்டுள்ளார்.
தெஹிவளை களுபோவில பகுதியை சேர்ந்த யு. ஆரியரத்ன என்ற கிராம உத்தியோகத்தர் மற்றும் ராஜூ தினேஷ்குமார் என்ற நபருமே இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராஜூ தினேஷ்குமார் மற்றும் அவரது மனைவி நாகராசா பத்மாவதி ஆகியோர் இங்கிலாந்தில் வசிக்கும் சுதாகரன் என்ற புலிகளின் உறுப்பினருக்கு தேசிய அடையாள அட்டை பெற்று கொடுப்பதற்காக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்து, அவர் தெஹிவளை ஆசிரி மாவத்தையில் வசிப்பதாக போலி வீட்டு இலக்கம் ஒன்றை கொடுத்து கிராம சேவகரிடம் சான்றிதழ் ஒன்றை பெற்றுள்ளனர்.
அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட போது தெஹிவளை ஆசிரி மாவத்தையில் அப்படியான இலக்கம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து தபால்காரர் அறிவித்ததை தொடர்ந்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியதுடன், மேலதிக விசாரணைகளை கல்கிஸ்சை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், சந்தேக நபர்கள் ஏற்கனவே 90 நாள் தடுப்பு காவலில் விசாரிக்கப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகள் முடிவடைந்துள்ளதால், அவர்களை நிபந்தனை பிணையில் விடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் பிணை வழங்குவது குறித்து ஆராய்வதாக கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnx0.html

Geen opmerkingen:

Een reactie posten