[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 11:28.40 AM GMT ]
நாயாறு பாலத்துடன் அண்டிய பிரதேசத்தில் ஒரு மேலதிக இராணுவ முகாம் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் சமாதானத்தையும் இன நல்லிணக்கத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கும் போதும், மேலதிக இராணுவ முகாம் அமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.
மேற்படி காணிகள் ஏற்கனவே இப்பிரதேசத்தில் வசித்த பெருமளவு தமிழ் மக்களுக்கும் ஒரு சில சிங்கள குடும்பங்களுக்கும் ஆட்சிக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட காணிகளாகும் என தற்போது தான் அறிந்துகொண்டதாக வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.
இதுவரை காலமும் இராணுவம் எமது மக்களை போகவிடாது தடுத்துவிட்டு இன்று தமது ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.
மக்களை இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ஊக்குவிக்கும் இந்த அரசுடன் எப்படி இன நல்லிணக்கத்தை பற்றி பேசுவது?
எமது முதலமைச்சர் அவர்கள் வட மாகாண காணி அமைச்சராக உள்ள போது அரசியல் யாப்பின் படி, அவரின் ஊடக மத்திய அரசுக்கு செய்யப்படும் காணிகள் மட்டுமே இராணுவம் தனது தேவைக்கு பாவிக்க முடியும். அப்படியிருக்க அடாவடித்தனமாக காணி அபகரிப்பில் ஈடுபடும் இராணுவத்தை கண்டிக்கின்றேன் என்றார்.
மேலும் இது விடயம் தொடர்பில் கறைதுறைப்பற்று பிரதேச செயலருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடிய போது சுமூகமான முறையில் மேற்படி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.
இருப்பினும் அவரது அனுமதியை கூட பெறாது அடாவடியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் கேள்விக்குரியே? தொடரும் இந்த நில ஆக்கிரமிப்புக்கள் வடக்கில் இராணுவ ஆட்சிக்கான ஒரு சான்றாகும் என்றார்.
வடக்கு மாகாணசபையின் 13ம் அமர்வு நாளை - இரு நியதிச் சட்டங்கள் முன்மொழிவு
வடக்கு மாகாணசபையின் 13ம் அமர்வு நாளைய தினம் வடக்கு மாகாணசபை பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நாளைய அமர்வில் மாகாணசபையின் மிக முக்கியமான இரு நியதிச் சட்டங்கள் அங்கீகாரத்திற்காக முன்மொழியப்படவுள்ளதாக மாகாணசபை பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நிதி நியதிச் சட்டம் மற்றும் முத்திரைவரி கைமாற்றுச் சட்டம் ஆகியன உள்ளடங்கலாக மூன்று நியதிச் சட்டங்கள் ஆளுநரின் சிபாரிசுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் முத்திரைவரி கைமாற்றுச் சட்டத்திற்கு ஆளுநர் சிபார்வு வழங்கியுள்ளார்.
மற்றைய நிதி நியதிச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளார். அவற்றின் அடிப்படையில் சில திருத்தங்களை செய்வதற்கு எமக்கு உடன்பாடு இல்லாதபோதும், இந்தச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில், நாளைதினம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறித்த நியதிச் சட்டங்களை முன்மொழியவுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிணறுகளில் எண்ணெய் கசிவு!- குடிநீரைப் பெற அவதியுறும் மக்கள்
யாழ். சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவு ஒயில் மற்றும் கழிவு திரவங்களினால் அப்பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு உண்டாகியிருப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் மக்கள், தாம் குடிப்பதற்கும் இதர தேவைகளுக்கும் சுத்தமான நீரை பெற்றுக் கொள்ள முடியாமலிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
குறித்த மின் உற்பத்தி நிலையத்தினால் கழிவு எண்ணெய் நிலத்தடி நீருடன் கலப்பது தொடர்பாக முன்னர் மக்கள் மற்றும் பொது அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த பிரச்சினை சமகாலத்தில் பூதாகரமானதாக மாறியிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றன.
வலி.தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து நாள்தோறும் வெளியேற்றப்படும் கழிவு எண்ணை நிலத்தில் தேங்கி நிற்கின்றன.
கடந்த பல வருடங்களாக இடம்பெறும் குறித்த செயற்பாட்டினால். மின் நிலையத்திற்கு அருகில் உள்ள கிணறுகளில் எண்ணை கசிவு ஏற்பட்டமை கடந்தவருடம் கண்டறியப்பட்டது
பின்னர் நடத்தப்பட்ட நீர் சோதனையின்போது இதன்போது சுன்னாகம் கிழக்கு பகுதியில் உள்ள மலப் பை, சூறாவத்தை ஆகிய கிராமங்களில் நீரில் எண்ணை கலந்துள்ளமை கண்டறியப்பட்டது.
இதனால் மக்கள் தண்ணீரை குடிக்க முடியாத நிலை உருவாகியிருக்கின்றது. குறித்த கிணறுகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டு மேலதிக ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது இந்தக் கிராமங்களுக்கு வலி.தெற்கு பிரதேச சபை தண்ணீர் பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை காரநைகர் போன்ற குடிதண்ணீர் தட்டுப்பாடான பிரதேசங்களுக்கும் சுன்னாகத்திலிருந்தே குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது.
எனவே சுன்னாகத்திலுள்ள கிணறுகள் மாசுபடுமானால், எதிர்காலத்தில் சுன்னாகம் பிரதேச மக்கள் மட்டுமல்லாமல், காரைநகர் பிரதேசம் போன்ற குடிதண்ணீர் தட்டுப்பாடுள்ள குடாநாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தவிடயம் குறித்து வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceq4.html
அபிவிருத்தியின் போது பல முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்: வட மாகாண முதலமைச்சர்
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 12:06.49 PM GMT ]
இன்றையதினம் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்டச் செயலகத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுரை நிகழ்த்துகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சட்டத்திற்குப் புறம்பான பல நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு, அரச வளங்களைப் பாவித்து, ஆளுநரைத் தமது தேர்தல் கூட்டங்களில் தம் சார்பாகப் பேச வைத்து, இராணுவப் பயமுறுத்தல்களை ஏற்படுத்தி அவற்றின் மத்தியில் தான் வடமாகாண சபைத் தேர்தல் சென்ற செப்ரம்பர் மாதம் நடத்தப்பட்டது.
அப்படியிருந்தும் 38 பிரதிநிதிகளில் எம்மவர்கள் 30 பேர் மிகப் பெருவாரியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே மகிந்த சிந்தனை உள்ளடங்கிய அரசாங்கக் கொள்கைகளை எமது மக்கள் நிராகரித்து எமது கூட்டமைப்பின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதில் சந்தேகம் எதுவும் எழத்தேவையில்லை.
ஆனால் தேர்தலின் பின்னர் ஒரு சில வாரங்களினுள் மாகாண மக்கள் நலம் கருதாது ஆளும் கட்சி நலன் கருதியே நடவடிக்கைகள் எடுத்துச் செல்லப்படுவது எம்மால் புரிந்து கொள்ளப்பட்டது. மத்திய அரசாங்க ஆளும் கட்சி தாம் தருவதை மாகாண மக்கள் ஏற்றே தீர வேண்டும் என்ற பாணியில் தான் நடவடிக்கைகள் எடுத்துச் செல்லப்படுவதை அவதானித்தோம்.
அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கென சில விடயங்களும், மத்திய அரசாங்கத்திற்கென சில விடயங்களும், இருவற்றிற்கும் பொதுவான சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன் காரணத்தினால் தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கூட்டப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் ஊடாக சட்டத்தால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன் வசப்படுத்த இடமளிக்க முடியாது.
எமது மாகாண மக்கள் மற்றைய மாகாண மக்கள் போலல்ல. அவர்கள் போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டு வந்துள்ளார்கள். அவர்களின் பிரச்சினைகளும் தேவைகளும் விசேடமானதும் தனித்துவமானதுமாவன.
எல்லோருக்கும் ஒரே அளவுப் பாதணிகள் பொருந்தும் என்று நினைப்பது முறையாகாது என்பதை அன்று ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் காட்டினேன். இன்றும் கூறி வைக்கின்றேன்.
எல்லா மாகாணங்களையும் ஒரேவாறாக நடத்துவோம் என்று அரசாங்கம் கூறுவது கேலிக்கிடமாக அமைகின்றது. கிழக்கையும் எங்களையும் விட வேறெந்த மாகாண மக்கள் போரின் உக்கிரத்தைக் அருகிலிருந்து தொடர்ந்து முகங்கொடுத்து வந்துள்ளார்கள்?
வட கிழக்கு மக்களின் விடிவிற்காகத்தான் 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப் போய் எமக்குத் தந்துதவப் போன சமச்சீர்மையற்ற அதிகாரப் பகிர்வானது கவனத்திற்கு எடுக்கப்படாமல் போயுள்ளது.
தற்பொழுது மத்திய அரசாங்கத்தின் கீழ் சகல அதிகாரங்களையும் உள்ளிழுக்கவே நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்தால் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கு திவிநெகும சட்டம் ஒரு உதாரணம். மாகாண சபைகளின் சுதந்திரத்திலும் அதிகாரங்களிலும் கை வைப்பதாகவே மேற்படிச் சட்டம் அமைந்துள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டை இவ்வாறான எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே நாங்கள் காண்கின்றோம். மத்திய அரசாங்கத்தின் கை மாகாண சபையின் நடவடிக்கைகளில் மேலோங்கும் வண்ணமாகவே ஜனாதிபதி செயலணி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. ஜனாதிபதி செயலணியை வாபஸ் பெற்ற பின்னர் கூட மத்தியின் கையை ஓங்குவிக்க சதிகள் நடைபெறுகின்றன என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceq5.html
தாக்குதலுக்கு உள்ளான யாழ் மாணவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 12:16.44 PM GMT ]
சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிகள் பீடத்தில் முதலாம் ஆண்டில் பயிலும் தமிழ் மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானார்.
இது தொடர்பாக பலாங்கொட பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதுடன் விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட மோதலே சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளதாகவும் இந்த சம்பவம் இனவாத அடிப்படையிலானது அல்ல எனவும் உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் விடுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வெளியில் இருந்து வந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பதை எந்த விதத்திலும் நம்ப முடியாது.
பல்கலைக்கழகத்தில் 500 மாணவர்கள் தற்போது பயின்று வருகின்றனர். சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிகள் பீடத்தில் 10 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கடந்த 18 வருடங்களாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒன்றாக கல்வி கற்று வருவதுடன் அவர்கள் மத்தியில் எவ்விதமான இனவாத மோதல்களும் இல்லை எனவும் உபவேந்தர் உடவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் தமிழ் மாணவர் மீதான தாக்குதுலுக்கு மாணவர்கள் இடையிலான மோதல் காரணமல்ல எனவும் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவின் பிரதிநிதி ரசிது ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சிலரது அரசியல் நோக்கங்களுக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceq6.html
Geen opmerkingen:
Een reactie posten