தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 augustus 2014

ஜெனிவா தீர்மானத்திற்கும் நிபுணர்கள் நியமனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை: ஜீ.எல். பீரிஸ்!

இலங்கை ஆசியாவின் நரகம்: அமெரிக்காவின் கைப்பாவை ஐ.நா! ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 05:02.55 AM GMT ]
இலங்கை ஆசியாவின் ஆச்சரியமன்றி, ஆசியாவின் நரகமாகவே மாறிவருவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் செய்தியாளர் சந்திப்பொன்று கொழும்பில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கட்சியின் பிரச்சார செயலாளர் நிஷாந்த -ஸ்ரீ வர்ணசிங்க மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே நடைபெறுகின்றன. லஞ்சம், ஊழல் எங்கும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது.
இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலை குறித்து நாங்கள் பலமுறை உரத்த குரலி்ல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளோம்.
ஆயினும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதே நிலை நீடித்தால் அரச நிறுவனங்களின் நட்டங்களை திறைசேரி பொறுப்பேற்க நேரிடும்.
அதன் மூலம் பொதுமக்களுக்கு அநாவசியமான வரிச்சுமைகள் விதிக்கப்படலாம்.
இவ்வாறான பின்னணியில் இலங்கை தற்போது ஆசியாவின் ஆச்சரியத்தை நோக்கிப் பயணிக்கவில்லை.
மாறாக இலங்கையின் தற்போதைய நிலை ஆசியாவின் நரகம் என்று வர்ணிக்கக் கூடிய நிலையிலேயே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கைப்பாவை ஐ.நா- ஜாதிக ஹெல உறுமய
ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு சரியான கொள்கைகள் இல்லை எனவும் அது அமெரிக்காவின் கைப்பாவை என்பதால், அதனை உலகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் ஐ.நா அமைப்பின் இரட்டை நிலைப்பாடும் அவற்றின் மனித உரிமை தொடர்பான போலியான நடவடிக்கைகளும் நிர்வாணப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் முள்ளிவாய்க்கால் மீது ஷெல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து தேட அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சீசன், அமெரிக்காவின் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் தூதுவர் ஸ்டீவன் ரெப் மற்றும் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகியோரிடம் கேட்கும் இந்த நியாய, தர்மமற்ற இந்த இரட்டை கொள்கை என்ன?
அமெரிக்காவின் கைப்பாவையாக கொள்கை இல்லாத ஐ.நா அமைப்பின் செயற்பாடுகள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தெளிவுப்படுத்தலை இலங்கை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையின் தூதரக இருக்கும் மிச்சேல் ஜே. சீசன் தூதுவர் பதவியில் இருந்து ஐ.நா பாதுகாப்புச் சபையின் பிரதித்தூதுவராக பதவியேற்க உள்ளார்.
இலங்கையை போர்க்குற்ற பொறியில் சிக்கவைப்பதே அவரது ஒரே நோக்கம். அவரது இந்த நியமனம் இலங்கைக்கு சாதகமானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி நந்திக்கடல் களப்பில் கொல்லப்பட்டதும் 23 ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வந்தார்.
காஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் போது அவர் அறிக்கையை மாத்திரமே வெளியிட்டார்.
அமெரிக்கா இஸ்ரேலின் போர் தாக்குதல்களை நியாயப்படுத்தும் போது உலகம் முழுவதும் சமாதானத்தை விரும்பும் மக்கள் பாலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்படும் மனித கொலைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த குற்றங்களையும் அநீதியை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இலங்கை பாலஸ்தீன மக்களுக்கு என்றும் ஆதரவை வழங்கி வரும் நாடு.
எனினும் இஸ்ரேல் என்ற நாட்டை உலக வரைப்படத்தில் இருந்து அழிக்கும் முஸ்லிம் அடிப்படைவாதிகள், பழைமைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் போராளிகளின் செயல்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை எனவும நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnw2.html
வெளிநாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்கும் இலங்கை
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 05:40.19 AM GMT ]
வெளிநாடுகளைச் சேர்ந்த இராணுவ உயரதிகாரிகளுக்கு இலங்கையில் பயிற்சியளிக்கும் செயற்திட்டமொன்று இந்த வருடம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் வெற்றியை தனது இராணுவத்தின் கடினமான பயிற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாக இலங்கை பிரச்சாரப்படுத்தி வருகின்றது. இது உலக நாடுகள் மத்தியில் இராணுவத்தின் மீதான மதிப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
மறுபுறத்தில் இலங்கை இராணுவத்தினருக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிப்பதில் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. இந்தியாவில் பயிற்சிக்கு அனுப்பவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைகளைக் கருத்திற்கொண்டு வெளிநாட்டு இராணுவ உயர் அதிகாரிகளுக்கு, இலங்கை ராணுவ பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி வழங்கும் செயற்திட்டமொன்றை அரசாங்கம் வகுத்துள்ளது.
இதன் அடிப்படையில் இந்த ஆண்டு முதற்கட்டமாக சுமார் 23 பேர் கொண்ட வெளிநாட்டு ராணுவ உயரதிகாரிகள், இலங்கையில் மேலதிக இராணுவ பயிற்சிக்காக வருகை தரவுள்ளனர்.
அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சீனா, இந்தியா, மாலைதீவு, நேபாளம், மலேசியா, பாக்கிஸ்தான், உகண்டா, செனகல், சூடான், சிங்கப்பூர், இந்தோனேசியா, ஓமான், வியட்னாம், துருக்கி போன்ற 16 நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளே முதற்கட்டப் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக இன்னும் பல நாடுகளிலிருந்து இராணுவப் பயிற்சி தொடர்பான வேண்டுகோள்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnw3.html
ஜெனிவா தீர்மானத்திற்கும் நிபுணர்கள் நியமனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை: ஜீ.எல். பீரிஸ்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 04:52.45 AM GMT ]
ஜெனிவா மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கும், காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நிபுணர்கள் நியமிக்கப்பட்டமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர்கள் உலக பிரசித்தி பெற்ற நபர்கள்.
அவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுமா? எந்தளவு தொகை அவர்களுக்கு கொடுப்பனவாக வழங்கப்படும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சரியாக கூறமுடியாது.
ஆலோசனைகள் எப்போது தேவைப்படும் என்பதை கூறமுடியாது. தேவையான வகையில் அது மேற்கொள்ளப்படும்.
இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் கேட்கின்றார்.
பயங்கரவாதத்தை ஒழிக்க பணத்தை ஒதுக்கியது போல், இதற்கும் பணம் ஒதுக்கப்படும். தேவையானவற்றுக்கு பணத்தை செலவிடுவது குறித்து மக்கள் கேள்வி எழுப்ப மாட்டார்கள் எனவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnw1.html

Geen opmerkingen:

Een reactie posten