[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 06:06.52 AM GMT ]
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மகாநாம, இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
குறைந்த பட்ச அதிகாரப் பிரயோகம் என்ற திரைக்குப் பின்னால் மறைந்து கொண்டு பொலிசார் தம் இஷ்டப்படி என்கவுண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட உயிர் பறிப்புகளில் பெரும்பாலானவை தவறான நடவடிக்கைகள் என்பது எமது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். நேரடி நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ரைட் டு லைப் அமைப்பின் பிரதிநிதிகள், பொலிசாரின் என்கவுண்டர் நடவடிக்கை தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
என்கவுண்டர் தொடர்பில் நியாயமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய மாஜிஸ்திரேட் நீதவான்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் சரியான முறையில் தங்கள் கடமைகளைச் செய்வதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnw5.html
அமெரிக்கத் தூதரகம் முன்பாக ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 06:07.42 AM GMT ]
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
பலஸ்தீனம் மீதான தாக்குதல்களைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி - காலி வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnw6.html
மருதானை கூட்டத்தை குழப்பிய சம்பவத்துடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லை: கெஹெலிய
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 06:19.52 AM GMT ]
வெளிநாட்டு அரச தலைவருக்கு சுதந்திரமாக பயணம் செய்ய பாதுகாப்பு வழங்க முடியாத நாடுகள் இலங்கையின் ஜனநாயகம் பற்றி எதற்காக கேள்வி எழுப்புகின்றன என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
கொழும்பு மருதானை பிரதேசத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட கூட்டத்தை குழப்பிய சம்பவத்துடன் அரசாங்கத்திற்கு எந்த தொடர்பும் இல்லை.
இந்த பிரச்சினையை அடிப்படையாக கொண்டு எந்த நாடாவது இலங்கையின் ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்புமாயின் அந்த நாடுகளின் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் தற்போது அங்கு செயற்படும் விதத்தை ஜனநாயக சுதந்திரம் என காட்ட அந்நாடு தயாராகி வருகின்றனவா என்று நாம் பதிலளிக்க வேண்டியேற்படும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnw7.html
நிரோஷனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 06:33.16 AM GMT ]
கொழும்பு மருதானையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜீத் இந்திக இதனைக குறிப்பிட்டுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவரை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம் நடத்திய சில மாணவர்களுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரான தமயந்த சம்பத் மற்றும் நளின் நிரோஷன் ஆகிய மாணவர்களுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
அத்துடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மஹேஷ் பெலபத்வல என்ற மாணவரது வீட்டுக்கு சென்று அவரை அச்சுறுத்தியுள்ளனர் எனவும் நஜீத் இந்திக குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnxy.html
Geen opmerkingen:
Een reactie posten