இலங்கையில் புகலிடம் கோரியுள்ள வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பிரஜைகளை நாடு கடத்தும் திட்டத்தை கைவிடுமாறு புகலிடக் கோரிக்கையாளர் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதனை தடுத்து நிறுத்தும் நோக்கில், புகலிடக் கோரிக்கையாளர் ஆர்வலர்கள் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். இலங்கையின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நிமால்கா பெர்னாண்டோ, குருகுலசூரிய மரியாஸ் ருக்ஷான், மினாலி மானேல் பெரேரா, மாரிமுத்து சத்திவேலு, பியர் ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரபாத் சுதர்சனா ஆகியோர் புகலிடக் கோரிக்கையாளர்களின் சார்பில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினரே இவ்வாறு அடைக்கலம் கோரி வருவதாகத் தெரிவித்துள்ளனர். மத ரீதியாக தாம் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். |
Geen opmerkingen:
Een reactie posten