தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 augustus 2014

இலங்கையில் தமிழர்கள் மீது சித்திரவதை மற்றும் சட்டப் புறக்கணிப்பு: ஏபிசி ஊடகம் ஆய்வு!

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்லும் 65 வீதமானோர் தொழில் தேர்ச்சியற்றவர்கள்: டளஸ் அழகப்பெரும
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 12:17.15 PM GMT ]
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பணியாளர்களில் 65 வீதமானோர் தொழில் தேர்ச்சியற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இலங்கையின் சனத்தொகையில் 10வீதமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் இணைந்துள்ளனர்
அவர்கள் மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கின்றன.
கடந்த வருடத்தில் மாத்திரம் 44 வீதமானோர் வீட்டுப்பணியாளர்களாக தொழில் செய்ய சென்றுள்ளனர்.
இந்த தொகை நடைமுறை வருடத்தில் குறைக்கப்பட்டு தொழில் தேர்ச்சியுடையோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmt4.html
இலங்கையில் தமிழர்கள் மீது சித்திரவதை மற்றும் சட்டப் புறக்கணிப்பு: ஏபிசி ஊடகம் ஆய்வு
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 12:05.28 PM GMT ]
இலங்கையில் தமிழர்கள் மீதான சித்திரவதைகள் மற்றும் சட்டப் புறக்கணிப்பு தொடர்பில் கடந்த வருடங்களில் வாதப்பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் அவை இலங்கையில் தற்போதும் உள்ளனவா? அல்லது அங்கு என்ன இடம்பெறுகிறது என்பதை அவுஸ்திரேலிய ஏபிசி ஊடகம் ஆராய்ந்துள்ளது.
இதற்காக இலங்கை அரசாங்கத்தரப்பினரையும் அவுஸ்திரேலிய அந்த ஊடகம் செவ்விக்கண்டுள்ளது.
இதன்படி இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையர்கள் அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று திரும்பிய பின்னர் இலங்கையில் சித்திரவதைகளுக்கு உள்ளாவதாக எவ்வித சான்றுகளும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சர்வதிகார ஆட்சி இடம்பெறுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
எனினும் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 70 வீதமான வாக்குகளை பெற்றதன் மூலம் இந்த கருத்துக்கு இடமில்லாமல் போயுள்ளது.
எனினும் தமிழ் மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் அரசாங்கத்தின் மீது அதிருப்தி உணர்வை கொண்டிருக்கிறார்கள் என்பதை ஜயதிலக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன்காரணமாகவே தமிழர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கான எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று தயான் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவ விஜேசிங்க, அவுஸ்திரேலிய தமிழ் சம்மேளன தலைவர் விக்டர் ராஜகுலேந்திரன் வெளியிட்டுள்ள கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் போரில் வெற்றி பெற்றதாக கூறும் இலங்கை இராணுவம் இன்னும் அதிக எண்ணிக்கையில் வடக்கில் குவிந்திருக்கிறது.
இது தமிழர்களின் நாளாந்த வாழ்க்கையில் பாதிப்பை உண்டு பண்ணியிருக்கிறது.
தமிழர்கள் தமது நிலங்களில் விவசாயம் செய்யும் உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இலங்கை அதிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறது. எனினும் இரண்டாம் தலைமுறையினருக்கு வருமானத்தை ஈட்டவோ அல்லது உயர்க்கல்வியை பெறக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை.
எனவேதான் அவர்கள் அவுஸ்திரேலியாவை நோக்கி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் வடக்கில் அதிக இராணுவம் நிலை கொண்டிருப்பதை விஜேசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்காரணமாக நாட்டில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் சித்திரவதைகள் காரணமாகவே தமிழர்கள் நாட்டில் இருந்து தப்பிச் செல்கின்றனர் என்ற வாதத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmt3.html

Geen opmerkingen:

Een reactie posten