தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 augustus 2014

நாமல் ராஜபக்ஷ 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாம்?

எபோலா வைரஸ் தாக்கம்: லைபீரியாவில் தொழில் புரியும் இலங்கையர்கள் திருப்பி அழைக்கப்படுகின்றனர்
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 12:01.23 PM GMT ]
எபோலா வைரஸ் பரவி வருதன் காரணமாக லைபீரியாவில் உள்ள சுமார் 200 இலங்கைத் தொழிலாளர்களை நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆபிரிக்க கண்ட நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் காரணமாக அந்த கண்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
ஏற்பட்டுள்ள இந்த நிலைமையால் அங்குள்ள இலங்கையர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் லைபீரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பி வைப்பதையும் அமைச்சு இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmt2.html
நாமல் ராஜபக்ஷ 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாம்?
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 01:05.03 PM GMT ]
இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்படுவார் என பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை ஒரு போதும் ஆட்சிக்கு வர இடமளிக்க போவதில்லை. நாட்டின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்துள்ளோம்.
நாட்டின் எதிர்கால தலைவராக நாமல் ராஜபக்ஷ தெரிவாகும் வரை இந்த பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் முத்துஹெட்டிகம குறிப்பிட்டுள்ளார்.
ஜே. ஆர். ஜெயவர்தன இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச மக்களால் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர் கொல்லப்பட்டதை தொடர்ந்தும் பிரதமராக இருந்த டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.
அவரை தொடர்ந்து மகிந்த ராஜபக்ஷ நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmt5.html

Geen opmerkingen:

Een reactie posten