தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 augustus 2014

உறுதி வேண்டும்! அஞ்சும் அளவுக்கு நடவடிக்கைகள் கடுமையாக வேண்டும்! ஆனந்த விகடன்!

157 பேரில் இந்தியர்கள் இருந்தால் ஏற்றுக் கொள்ளத் தயார்: இந்தியா அறிவிப்பு (செய்தித் துளிகள்)
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 02:51.02 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ளதாக கூறப்படும் 157 தமிழர்களில் இந்தியர்கள், இருந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள தயார் என்று இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவின் பாண்டிச்சேரியில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாக கூறப்படும் இந்த 157 பேரையும் ஏற்றுக்கொள்ளத்தயார் என்று இந்தியா ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனினும் தற்போது இந்தியர்கள் அதில் இருந்தால் என்ற வசனத்தை பயன்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்திய அதிகாரிகள் படகில் இருந்து இறக்கப்பட்ட அகதிகளை விசாரணை செய்ய முற்பட்டவேளையில் அகதிகள் அதற்கு இடம்தரவில்லை.
இதனையடுத்தே இந்திய அரசாங்கம் தமது நாட்டவர் குறித்து மாத்திரம் கருத்தை வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அக்பருதீன் இதனை நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியர்களை தவிர்ந்த ஏனையவர்கள் தொடர்பில் அகதிகள் சாசனத்தில் கையொப்பமிட்ட நாடு என்ற வகையில் இந்திய சட்டங்களுக்கு உட்பட்ட விதத்தில் இருப்பார்களானால் அவர்களையும் ஏற்றுக்கொள்ளத்தயார் என்று அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அதிகாரியின் உளவு நடவடிக்கை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- இந்தியா
இந்தியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்த சம்பவம் தொடர்பில் இந்திய உரிய பொறிமுறையை கடைப்பிடிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அக்பருதீன் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் குற்றச்சாட்டை அடுத்து இலங்கையில் செயற்பட்டு வந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அதிகாரி சுபைர் சித்தீக் பாகிஸ்தானுக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால் இந்தியா உரிய மார்க்கத்தில் விடயத்தை கையாளும் என்று அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்.
கடன் அட்டை முறைகேடு! மூன்று வெளிநாட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
கடன் அட்டை முறைக்கேடு தொடர்பில் மூன்று வெளிநாட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு துருக்கியர்கள் மற்றும் ஒரு உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஆகியோருக்கு எதிராகவே நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்கள் மூவரும் கடந்த மாதம் கொழும்பு 7 இல் உள்ள தன்னியக்க கருவியில் முறைகேடான கடன் அட்டைகளை பயன்படுத்திப பணம் பெற்ற போது கைது செய்யப்பட்டனர்.
இதன்போது அவர்களில் சுமார் 12.4 மில்லியன் ரூபாய்கள் இருந்து மீட்கப்பட்டன.
வாஸ் குணவர்தனவின் சிறை அறையில் இரண்டு சிம் அட்டைகள்
கொலை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் சிறை அறையில் இருந்து இரண்டு சிம் அட்டைகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வெளியில் உள்ள நபர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என்ற தகவல் நீதிமன்றத்தில் தெரியவந்ததை அடுத்து, சிறை அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இந்த சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சிறை அறையில் வாஸ் குணவர்தனவும் அவரது மகன் ரவிந்து ஆகியோர் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடைகளுக்கு மத்தியில் இந்த சிம் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கைப்பற்றிய சிம் அட்டைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnr7.html
கோத்தபாயவின் மேற்பார்வையில் திட்டமிட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் படையினர்
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 10:11.20 AM GMT ]
பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் இலங்கை படையினர் திட்டமிட்டு தனது பிடியை அதிகரித்து வருவதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் காய்கறி பயிரிடுவது முதல் கொழும்பு நகர அழகுபடுத்துதல் உட்பட பல செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபட்டு வருகிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மேற்பார்வை மற்றும் அறிவுரையின்படி சுற்றுலாத்துறையின் ஹொட்டல் வர்த்தகத்தில் விமானப் படையினரின் பங்கு அதிகரித்துள்ளது.
முப்படைகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை குறைந்த ஊதியத்தில் ஊழியர்களாக பயன்படுத்தி இந்த சுற்றுலா ஹொட்டல்களின் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அது தனியார் துறையினருக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.
திருகோணமலை, சீனன்குடா, திருகோணமலை துறைமுகம், அனுராதபுரம், அத்திட்டிய, கட்டுநாயக்க போன்ற இடங்களில் விமானப் படையினர் சுற்றுலா ஹொட்டல் மற்றும் விடுதிகளை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் விமானப் படையினருக்கான செல்லப்பிராணிகள் சேவை நிலையத்தையும் விமானப் படையினர் நடத்தி வருகின்றனர்.
விமானப் படையினரை தவிர இராணுவத்தினரும் சுற்றுலா ஹொட்டல்களை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா ஹொட்டல் மற்றும் விடுதிகளை தவிர, விமானப் படையினர் கொழும்பு பொரள்ளை பிரதேசத்தில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் உள்ளூர் வர்த்தகத்தில் படையினர் ஈடுபட்டு வருவதால், அதே துறைகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnt6.html

உறுதி வேண்டும்! அஞ்சும் அளவுக்கு நடவடிக்கைகள் கடுமையாக வேண்டும்! ஆனந்த விகடன்
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 03:26.01 AM GMT ]
இலங்கை அரசின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் இணையதளத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இருவரையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து வெளியானது ஒரு கட்டுரை.
தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதங்களைக் கொச்சைப்படுத்தியிருக்கிறது இலங்கை அரசின் அந்த இணையதளம்.
கொதித்து எழுந்த எதிர்ப்புகளால், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டு, கட்டுரையை நீக்கியிருக்கிறார்கள்.
எனினும் நிகழ்ந்தது, சாதாரணத் தவறா என்ன?
இந்தியாவை இலங்கை எந்த அளவுக்கு உதாசீனமாகக் கருதுகிறது என்பதற்கான உதாரணம் இது.
இலங்கை அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியான கருத்தை, அந்த நாட்டின் அதிகாரபூர்வக் கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
கட்டுரையைத் திரும்பப் பெற்றிருக்கலாம்; ஆனால், விஷக் கருத்து பரப்பப்பட்டு விட்டதே!
தன் அண்டை நாட்டுத் தலைவர்களை அநாகரிகமாகச் சித்திரிக்கும் மனத்துணிவு இலங்கைக்குத் திடீர் என்று வரவில்லை.
அநாகரிகமாக நடந்துகொண்ட முந்தைய தருணங்களில் கறாராகக் கண்டிக்காமல், மென்மையாகக் கையாண்டதன் விளைவு தான் இது.
அதனால்தான் பிரதமரையும் முதலமைச்சரையுமே போகிற போக்கில் இழிவுபடுத்தி உள்ளனர்.
மனித உரிமை அமைப்புகளின் கள ஆய்வு, ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை... என அனைத்தையும் ஆணவத்துடன் புறக்கணிக்கும் இலங்கை, அதே அணுகுமுறையுடன் இந்தியாவையும் கையாள்கிறது.
சீனாவை ஒரு கேடயம் போல முன்வைத்து இந்தியாவைப் பயமுறுத்துகிறது.
இந்தப் பூச்சாண்டிக்கு அஞ்சினால், இத்தகைய குயுக்தியான வழிமுறையைத் தொடர்ந்து அனுமதித்தால், இந்தியாவின் இறையாண்மை கேலிக்கு உள்ளாகும்,  தெற்காசியப் பிராந்தியத்தில் அதன் ஆளுமையும் கேள்விக்கு உள்ளாகும்.
இலங்கையுடனான அயலுறவுக் கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டிய தருணம் இது.
கச்சதீவு திரும்பப் பெறப்படுவதில் இருந்து, கூலிப்படையைப் போல செயல்படும் இலங்கைக் கடற்படையைத் தடுத்து நிறுத்துவது வரை அனைத்தும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஒப்பந்தங்களில் மட்டுமல்ல... நடைமுறையிலும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
 'இந்திய மீனவன் மீது கை வைத்தால், இலங்கையின் மீது பொருளாதாரத் தடையே வந்துவிடும்’ என்று அஞ்சும் அளவுக்கு நடவடிக்கைகள் கடுமையாக வேண்டும்.
இலங்கையின் மன்னிப்பும், இந்தியாவின் பெருந்தன்மையும் இராமேஸ்வர மீனவனின் காயங்களுக்கு மருந்து போடாது.
அவர்களுக்குத் தேவை, அமைதியான வங்கக் கடல். அதைச் சாத்தியப்படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு!
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnsy.html

Geen opmerkingen:

Een reactie posten