தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 augustus 2014

பிரித்தானிய வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு கடவுச்சீட்டை திரும்ப வழங்கும் திட்டம் அறிமுகம்!!!



ஒன்றுகூடலுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: இலங்கையிடம், ஐ.நா கோரிக்கை
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 09:16.01 AM GMT ]
அமைதியான அமர்வுகளுக்குள்ள உரிமையை பாதுகாக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
அண்மையில் அரசசார்பற்ற அமைப்பு ஒன்றினால் காணாமல் போனோரின் உறவினர்களை கொண்டு, மருதானையில் நடத்திய கூட்டம் குழப்பப்பட்டமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உரிய தகவல் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை. எனினும் உலகெங்கிலும் ஒன்றுகூடுவதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் சபை உறுதியாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் உதவிப்பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே உதவிப் பேச்சாளர் இந்தக் கருத்தினை வெளியிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த ஹக், இலங்கை தொடர்பான போர்குற்ற விசாரணையின் போது சாட்சியாளர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ஏற்கனவே இதற்கான உறுதிப்பாட்டை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வழங்கியுள்ளதாக ஹக் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnt3.html

ஏ 9 வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு...!
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 09:48.36 AM GMT ]
மீசாலை ஏ 9 வீதியில் இருவர் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டுச் சுவருடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர்.
நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் உடுவில் மேற்கு மானிப்பாயைச் சேர்ந்த தனநாயகம் தனப்பிரகாஸ் (வயது 25) என்பவரே உயிரிழந்தவராவார்.
சுன்னாகம் தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த சதாசிவம் சர்வானந்தன் (வயது 31), சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த யோகராசா ஆரோக்கியநாதன் (வயது 39) ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த தனநாயகம் தனப்பிரகாஸ் கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnt4.html
பிரித்தானிய வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு கடவுச்சீட்டை திரும்ப வழங்கும் திட்டம் அறிமுகம்
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 10:10.30 AM GMT ]
இலங்கையில் இருந்து பிரித்தானியா வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்காக இன்று புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இது கடவுச்சீட்டை திரும்ப வழங்கும் ( passport-back service) சேவை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
புதிய அறிமுகத்தின்படி வீசாவுக்காக ஆவணங்களை சமர்ப்பிப்போர் வீசா தயாரிப்பு நடைபெறும் பெரும்பாலான காலத்தில் தமது கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருக்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி சுற்றுலா, வியாபாரம் உட்பட அடிக்கடி பிரித்தானியாவுக்கு சென்று திரும்புவோரும் இதில் உள்வாங்கப்படுவார்கள். இதேவேளை இந்த திட்டத்துக்காக 9400 ரூபா மேலதிக கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnt5.html

Geen opmerkingen:

Een reactie posten