தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 augustus 2014

பிரதமரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கும் முயற்சியில் ராவணா பலய!

தங்காலை பிரதேசசபைத் தலைவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மேலும் அதிகரிக்குமாறு கோரிக்கை!
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 12:34.44 AM GMT ]
தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் விதான பத்திரன உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தண்டனை மேலும் அதிகரிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் கோரியுள்ளது.
இது தொடர்பில் நேற்று மேன்முறையீடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரஜை குராம் ஷெய்க் கொலை மற்றும் அவரது ரஷ்ய காதலி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியன உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேருக்கு 20 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், இந்த தண்டனை போதுமானதல்ல என சட்ட மா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தண்டனையை அதிகரித்து தீர்ப்பளிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம், மேன்முறையீட்டு நீதிமன்றிடம் கோரியுள்ளது.
கடந்த மாதம் 18ம் திகதி உயர் நீதிமன்றினால் குறித்த நபர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து, சட்ட மற்றும் சித்தாந்த அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
பிரதிவாதிகளுக்கு எதிராக 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.
சட்ட ரீதியான அனுமதியின்றி தன்னியக்க துப்பாக்கியொன்றை வைத்திருந்தமை அதில் ஓர் குற்றச்சாட்டாகும்.
இந்தக் குற்றச்சாட்டு நான்காம் பிரதிவாதிக்கு எதிராக மட்டுமே சுமத்தப்பட்டுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டுக்காக 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், சட்டவிரோத ஆயுத பயன்பாடு மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டக்கள் அனைத்து பிரதிவாதிகளுக்கும் சுமத்தப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென சட்ட மா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை,  உயர் நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்ட சம்பத் விதான பத்திரண உள்ளிட்டவர்களும் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcer5.html
ஹரின் பெர்னாண்டோவின் வெற்றிடத்திற்கு வேலாயுதம்!
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 12:55.09 AM GMT ]
ஹரின் பெர்னாண்டோவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் கே. வேலாயுதம் நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் ஹரின் பெர்னாண்டோ, இன்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளார்.
ஹரின் பெர்னாண்டோ பதவியை இராஜினாமா செய்வதனால் ஏற்படக் கூடிய வெற்றிடத்திற்கு, பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மூன்றாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்ட வேலாயுதம் நியமிக்கப்பட உள்ளார்.
ஹரின் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2010ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது வேலாயுதம் 25,056 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலாயுதம் தேசிய பெருந்தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcer6.html
பிரதமரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கும் முயற்சியில் ராவணா பலய
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 01:30.38 AM GMT ]
பிரதமர் டி.எம். ஜயரட்னவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கும் முயற்சியில் ராவணா பலய அமைப்பு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் டி.எம். ஜயரட்ன பௌத்த சாசன அமைச்சுப் பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதமரை, பௌத்த சாசன அமைச்சுப் பதவியலிருந்து நீக்கி செயற் திறன் மிக்க ஒருவரை பதவியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அந்த அமைப்பு கோரியுள்ளது.
மாநாயக்க தேரர்களின் ஊடாக ஜனாதிபதிக்கு இது குறித்து தெளிவுபடுத்த ராவணா பலய திட்டமிட்டுள்ளது.
பிரதமரை பணி நீக்குவது குறித்து அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளுடன் இன்று ராவணா பலய பிரதிநிதிகள் சந்திப்பு நடத்த உள்ளனர்.
பௌத்த சாசன அமைச்சின் நடவடிக்கைகளினால் பாடசாலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் அழைப்பாளர் இத்தேகந்தே சந்தேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
மாநாயக்க தேரர்களின் ஒத்துழைப்புடன் பிரதமரை பௌத்த சாசன அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcer7.html

Geen opmerkingen:

Een reactie posten