தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 augustus 2014

மூடத்தனம் செய்வதும் அதை பாராட்டுவதும் காட்டுமிராண்டிகளாக சொல்லப்படும் தமிழனே!!

டென்மார்கில் இன்று களமிறங்கிய தமிழீழ அணி !

[ Aug 01, 2014 01:04:33 AM | வாசித்தோர் : 21000 ]
டென்மார்கில் இன்று(31.07.2014) Vildbjerg Cup என்னும் சர்வதேச தரம் வாய்ந்த உதைபந்தாட்ட போட்டி இடம்பெற்றது. சுமார் 40,000 ஆயிரம் ரசிகர்கள் புடை சூழ 15 க்கும் மேற்பட்ட உதைபந்தாட்ட கழகங்கள் இதில் விளையாடியுள்ளார்கள். இங்கே 16 வயதுக்கு உற்பட்டவர்களுக்காக நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில், தமிழீழ அணி களமிறங்கியுள்ளது. தமிழீழ தேசிய கொடிகளை தாங்கிய வாறு அடுத்த தலைமுறைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் ஈழத் தமிழ் இளைஞர்கள் விண்ணை பிளக்கும் கரகோஷங்களோடு விளையாட்டு மைதானத்திற்குச் சென்றார்கள். டென்மார்கில் உள்ள பலர் இதனை பார்த்து அசந்து போனார்கள். இச் இறுவர்களுக்கு அவர்களது பெற்றோர் பெரும் ஆதரவு வழங்கியிருந்தார்கள்.
ஒரு நாட்டுக்குரிய கொடிபோல தமிழீழ தேசிய கொடி பறக்கவிடப்பட்டு, அனைத்து இன மக்களாலும் அது கெளரவிக்கப்பட்டது உணர்ச்சி பொங்கும், விதத்தில் அமைந்திருந்தது. எங்கே அடுத்த தலைமுறையினர் போராட்டத்தை கைவிட்டு விடுவார்களோ என்று, பலர் உணர்வாளர்கள் ஏங்கித் தவிக்கும் இக் காலகட்டத்தில், 3ம் தலைமுறை ஈழத் தமிழ் சிறுவர்கள் தமிழ் தேசியம் பால் கொண்டுள்ள பற்றையும், வீரத்தையும் பார்த்து பல நாட்டில் உள்ள தமிழர்கள் சொக்கிப்போனார்கள் என்று தான் கூறவேண்டும். டென்மார்கில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு சபாஷ் போடத்தான் வேண்டும்.
தற்போது களமிறங்கியுள்ள தமிழீழ தேசிய அணி வெற்றியடையவேண்டும் என்று, உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். அதிர்வு இணையமும் இவர்களை வாழ்த்துவதில் பெருமையடைகிறது.









Geen opmerkingen:

Een reactie posten