தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 augustus 2014

இலங்கைக்கு கண்காணிப்புக் கப்பல்கள் வழங்க ஜப்பான் முடிவு?

இலங்கையின் ஆட்சிமுறை மாற்றப்பட வேண்டும்!- புத்திஜீவிகள், கலைஞர்கள் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 03:35.21 PM GMT ]
இலங்கையின் தற்போதைய ஆட்சிமுறை மாற்றப்பட வேண்டும் என்று சுமார் 100 புத்திஜீவிகளும், கலைஞர்களும் சமூக நடவடிக்கையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கலாநிதி தர்மதாஸ பத்திராஜா, கலைஞர் தர்மஸ்ரீ பண்டாரநாயக்க, உட்பட்டவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
அபிவிருத்தி என்ற பெயரில் பாரிய கடன்களை பெற்று மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பொதுமக்கள் மீது பாரிய கடன்சுமையை ஏற்படுத்துகின்றன. இது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்
தற்போதைய நிலையில் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் முரண்பாட்டை ஏற்படுத்தும் நிலை தொடர்கிறது.
போர் முடிவடைந்து 5வருடங்களாகியும் வடக்குகிழக்கின் மக்கள் இன்னும் அடிப்படை உரிமைகள் இன்றி உள்ளனர். அத்துடன் பாரிய இராணுவகட்டுக்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அளுத்கமை சம்பவத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் கல்வி முறையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
நாட்டின் தற்போதைய ஆட்சிமுறையால் குற்றங்கள் மிக்க நாடு ஒன்று தீவிரமாக உருவாகி வருகிறது.
மனித உரிமைகள் நிலவரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தற்போதைய ஆட்சிமுறையால் நாட்டின் சமூக அமைப்பு ஒழுங்கற்ற ரீதியில் சென்று கொண்டிருப்பதாக புத்திஜீவிகளும் கலைஞர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfv3.html

இலங்கைக்கு கண்காணிப்புக் கப்பல்கள் வழங்க ஜப்பான் முடிவு?
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 04:24.09 PM GMT ]
இலங்கையின் கடலோரப் பாதுகாப்பினைப் பலப்படுத்தும் நோக்கில் கண்காணிப்புக் கப்பல்களை ஜப்பான் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டு அதிகாரியொருவர் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் விஜயம் செய்யவுள்ள ஜப்பானிய பிரதமர் இது குறித்து இலங்கை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திர கடற்பாதையூடாகவே ஜப்பானிலிருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் செல்கின்றன.
எனவே அவற்றின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்தக் கண்காணிப்புக் கப்பல்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் பின்னரே எத்தனை கப்பல்களை வழங்குவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிய கப்பலா? அல்லது பயன்படுத்தப்பட்ட கப்பலா வழங்குவது என்பது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfv4.html

Geen opmerkingen:

Een reactie posten