தாய் ஒருவரும் அவரின் இரண்டு பிள்ளைகளும் கனடாவின் ஸ்காபுரோ ஏரியாவில் காணாமல் போயுள்ளதாக அறிவித்துள்ள ரொறன்ரோ பொலிஸார் அவர்களை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியினையும் நாடி உள்ளனர்.
34 வயதான Rebekha Isaac மற்றும் அவரது 7 வயது மகனான Jonathan, 5 வயது மகளான Joylin ஆகியோரே காணாமல் போனவர்களாவர்.
ரொறன்ரோவின் Sheppard Avenue East and Progress Avenue area பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு இவர்கள் கடைசியாக காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதன் பின் என்ன ஆனார்கள் என்ற விபரம் இதுவரை இல்லை.
தாயாரான Rebekha Isaac ஐந்து அடி ஆறு அங்குல உயரம் உடையவர் என்றும், நீண்ட கருமையான கூந்தலை உடையவர் என்றும், கடைசியாக மஞ்சள், மண்ணிறம் கலந்த ஆடையினை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவலை கொண்டுள்ள ரொறன்ரோ பொலிஸார். இவர்கள் பற்றிய தகவல் ஏதாவது தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2ஆம் இணைப்பு
ரொரன்ரோவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த பெண் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் பாதுகாப்பான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலையில் இவர்கள் மூவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், அவர்கள் எங்கே எவ்வாறு காணாமல் போயினர் என்பது தொடர்பிலோ, எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டார்கள் என்பது தொடர்பிலோ மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
Missing-woman-and-2-children
http://allthecanadianpolitics.tumblr.com/post/95601851799/toronto-mom-and-her-two-children-are-missing
http://www.thestar.com/news/crime/2014/08/23/toronto_mom_and_her_two_children_are_missing.html