தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 augustus 2014

பாதுகாப்பு அமைச்சு வெட்கப்படக்கூடிய செயலை செய்துள்ளது! - சாட்சியின் மரணம் சந்தேகத்துக்குரியது!- ஐக்கிய தேசியக்கட்சி!

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு பாரிய குற்றம் ஒன்றை இழைத்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி கூறியுள்ளது.
இந்திய பிரதமரையும் தமிழக முதல்வரையும் முன்னிலைப்படுத்தி பாதுகாப்பு இணையத்தளத்தில் வெளியிட்ட கட்டுரையானது, பொறுப்பற்ற கண்மூடித்தனமான செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்புக்கும் அதன் நோக்கங்களுக்கும் துணையாக நிற்கவேண்டிய பாதுகாப்பு அமைச்சு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டுரை ஒன்றை வெளியிட்டமை ஏற்கத்தக்க செயலல்ல.
இந்தநிலையில் இந்திய அரசாங்கம் குறித்த விடயத்தை தீவிரமாக நோக்கிய நிலையில் இலங்கை அரசாங்கம் 24 மணித்தியாலங்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கோரியமை வெட்கத்துக்குரிய நிலையை அடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
அதிகாரபூர்வமற்ற நிலையில் குறித்த கட்டுரை தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியாகிவிட்டது என்று கூறும் அளவுக்கு பாதுகாப்பு அமைச்சு பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளது.
போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள போது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மற்றும் ஒரு விவேகமற்ற செயல் இது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தளம் எப்போதும் இராஜதந்திர மட்டத்தில் இனவாத மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களை தாக்கியும் அடிப்படையற்ற ஆக்கங்களை பிரசுரித்து வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
சாட்சியின் மரணம் சந்தேகத்துக்குரியது!-  ஐக்கிய தேசியக் கட்சி
ஆசிரியை ஒருவரை முழந்தாளிடச்செய்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் தொடர்பான வழக்கின் சாட்சியின் கொலை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஆசிரியை முழந்தாளிடப்பட்ட செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் சம்பவத்துக்கு காரணமாக ஆளும் கட்சி உறுப்பினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்தின் பிரதான சாட்சி கடந்த வாரம் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை இயற்கையான மரணமாக காட்ட முனைவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
தமது பிள்ளையை வகுப்பறையில் தண்டித்த குற்றத்துக்காகவே வடமேல் மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் குறித்த ஆசிரியையை முழந்தாளிடச் செய்து தண்டனை விதித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfs2.html

Geen opmerkingen:

Een reactie posten