தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 augustus 2014

காரைதீவில் த.தே.கூட்டமைப்பு முக்கியஸ்தரின் வீட்டில் நள்ளிரவில் பாய்ச்சல்:அச்சுறுத்தலா!- மாவை பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிப்பு



ஜெனீவா திடல் தான் எமது இன்றைய போர்க்களம்!- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் ஜெனிவாவுக்கான அழைப்பு
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 12:15.53 AM GMT ]
நாம் தொடர்ந்து எமது விடுதலையை தோள்களில் சுமந்து செல்ல ஐநா பேரணி ஆணிவேராக அமையும். எமது விடுதலையை வென்றெடுக்க எமது துணிச்சலை, உறுதியை, ஓர்மத்தை, வேட்கையை, நம்பிக்கையை நாம் பெற இப்படியான பேரணி ஒரு தளமாக அமையும். இவ்வாறு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐரோப்பிய புலம்பெயர் மக்களை இப் பேரணியில் பெருந்திரளாக கலந்துகொள்ளும் படியும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


http://www.tamilwin.com/show-RUmsyIRbLdew5.html

காரைதீவில் த.தே.கூட்டமைப்பு முக்கியஸ்தரின் வீட்டில் நள்ளிரவில் பாய்ச்சல்:அச்சுறுத்தலா!- மாவை பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிப்பு
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 01:08.56 AM GMT ]
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உப தலைவருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் திங்கள் நள்ளிரவு அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட பணிமனை அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவால் முக்கியஸ்தர் ஜெயசிறிலின் வீட்டில்தான் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் கட்சி முக்கியஸ்தர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கோ கட்சிப் பெயர்ப்பலகைக்கோ எவ்வித சேதமும் இடம்பெறவில்லை.
திரு.ஜெயசிறில் கடந்த கிழக்கு மாகாணசபை மற்றும் காரைதீவு பிரதேசசபை தேர்தல்களில் வேட்பாளராக போட்டியிட்டவராவார்.
இதுபற்றி முக்கியஸ்தர் ஜெயசிறில் கூறுகையில்
நேற்று முன்தினம்(திங்கள்) நள்ளிரவு 11.40 மணியளில் மோட்டார் சைக்கிள் சத்தம் வீதியில் கேட்டது. மறுகணம் எமது வெளிகேற் தட்டப்படும் சத்தம் கேட்டது. நான் விழித்துக்கொண்டேன். பிறகு மதில்மேலால் பாயும் சத்தம் கேட்டது. நான் துவாரத்தால் பார்த்தேன் சிவப்புநிற ரீசேட் அணிந்த ஒருவர் வளவுக்குள்ளே வருவதைக் கண்டேன். வெளியில் இரண்டு அல்லது மூவர் இருந்திருக்கக்கூடும்.
உடனே நான் வெளியில் போக முற்பட்டபோது மனைவி என்னைத் தடுத்தார். மறுகணம் கைத்தொலைபேசியில் 119 பொலிசாருக்கு தகவல் கொடுத்தேன். நான் ஹலோ என்றதும் உள்வந்தவன் பாய்ந்து வெளியே போகும் சத்தமும் மறுகணம் மோட்டார் சைக்கிள் இரண்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றதையும் கேட்க முடிந்தது.
சற்றுநேரத்தில் 119 பொலிஸ் அதிகாரிகள் வீட்டுக்கு வந்து சகல தடங்களையும் பார்த்தார்கள். பயப்பட வேண்டாம் என்றார்கள். விடிய விடிய அவர்கள் எனது வீதியால் ரோந்து சென்றதைக் கேட்க முடிந்தது. அவர்களது சேவையை நன்றியுடன் பார்க்கிறேன். என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
நள்ளிரவில் என்னை அச்சுறுத்தவே இப்பாய்ச்சல் இடம்பெற்றுள்ளதாக கருதுகிறேன். யாரென்று கூறுவதற்கில்லை. ஆனால் இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சியொன்றில் மாவட்ட தலைமைப் பணிமனை எனது வீட்டில் இருப்பது பிழையா? நாம் தமிழர்கள். தமிழ்த் தேசியத்திற்காக உழைப்பவர்கள். என்றார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதுபற்றிக் கூறுகையில்
இந்தியாவிலிருந்து வந்த கையோடு இத்தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. நான் தற்சமயம் யாழ்ப்பாணத்திலுள்ளேன். தமிழ்த் தேசியத்தின்பால் உயிர்பபாக செயற்படுபவர்கள் மீது கடந்த காலங்களில் இத்தகைய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவந்துள்மை யாமறிந்ததே.  ஆனால் சமாதானம் வந்தவிட்டதாகக் கூறும் இக்காலகட்டத்திலும் இத்தகைய செயற்பாடு இடம்பெறுவது கண்டனத்திற்குரியது.
திரு ஜெயசிறில் நல்லதொரு கட்சி விசுவாச உறுப்பினர். பொதுமக்கள் சேவையாளன். எமது கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கிய புள்ளி.அவருக்கு இவ்வச்சுறுத்தல் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாமலுள்ளது.இதனைத் தொடர்ந்து அனுமதிக்கமுடியாது. இன்றே நான் பொலிஸ் மாஅதிபரிடம் தெரிவிக்கவுள்ளேன். என்றார்.
நேற்று பிரதிநிதிகள் விஜயம்
இது இவ்வாறிருக்க சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகணசபை உறுப்பினர் த.கலையரசன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் கே.விஜயரெத்தினம் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் யோ.கோபிகாந் உப தவிசாளர் கே.தட்சணாமூர்த்தி உறுப்பினர் சு.பாஸ்கரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் ஜெயசிறிலுக்கு ஆறுதல் கூறினர்.
மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கருத்துரைக்கையில், இது தமிழ் தேசியத்திற்காக பாடுபடும் உண்மையான தொண்டனுக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். இது கண்டனத்துக்குரியது. நான் என்றும் காரைதீவை மதிப்பவன். ஜெயசிறில் போன்ற உண்மையான கட்சி விசுவாசிகள் நிறைந்த ஊர். அங்கு இச்சம்பவம் அதுவும் நள்ளிரவில் இடம்பெற்றிருப்பதை அனுமதிக்க முடியாது. என்றார்.
தவிசாளர் கோபிகாந் கூறுகையில் இது தமிழத் தேசியத்திற்கெதிராக விடுக்கப்படும் சவாலாகும். இதற்கெல்லாம் நாம் மசிந்துவிடப் போவதில்லை. இது கண்டனத்திற்குரியது என்றார்.
தமிழரசுக்கட்சிக் காரியாலய திறப்பு விழா படங்கள் -
http://www.tamilwin.com/show-RUmsyIRbLdew7.html

Geen opmerkingen:

Een reactie posten