தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 augustus 2014

கோத்தபாயவின் நரித்தனம் அம்பலம்!

பிர­தமர் மோடி இனியும் வாய் மூடி இருக்­க­லா­காது!- ஹிந்து நாளிதழ் ஆசிரியர் தலை­யங்கம்
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 06:00.08 AM GMT ]
இந்தியாவே என்றைக்கும் இலங்கையின் முதல் ஆபத்பாந்தவன் என்பதையும், இந்த உறவுச் சங்கிலியின் முக்கியமான கண்ணி தமிழகம் என்பதையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு உணரவைக்க வேண்டும். இவ்வாறு `ஹிந்து' நாளிதழ் தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான அவதூறுக் கட்டுரை, தனிப்பட்ட ஒருவரின் கருத்து என்கிற இலங்கையின் விளக்கமெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று தெரிவித்துள்ள அந்நாளிதழ், இலங்கை அரசின் ஆசியின்றி நடக்கக் கூடிய காரியமா இது? என கேள்வியும் எழுப்பியுள்ளது.
ஹிந்து நாளிதழ், நேற்று வெளியிட்ட தலையங்கத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழக மீனவர்களிடம் இலங்கைக் கடற்படை நடந்து கொள்ளும் அணுகுமுறை, உலகில் வேறு எந்த இரு நாடுகளுக்கு இடையிலும் காண முடியாதது.
நெருக்கமான கடல் எல்லையைக் கொண்ட இரு நாடுகளிடையே கடலோடிகள் எல்லை தாண்டிச் செல்வது எங்கும் நடக்கக் கூடியது. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், இந்தப் பக்கம் எப்படி மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செல்கிறார்களோ, அதேபோன்று, அந்தப் பக்கம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வதும் நடக்கத்தான் செய்கிறது.
ஆனால், இலங்கை அரசைப் போன்று பாகிஸ்தான் அரசு கொடூரமாக நடந்து கொள்ளவில்லை. அதேபோல், இந்திய எல்லைக்குள் தவறி வரும் எந்நாட்டு மீனவர்களையும் நாம் கண்ணியமாகவே கையாள்கிறோம்.
இலங்கை அரசின் அத்துமீறல்கள், சமீப காலமாக அதிகரித்திருக்கின்றன. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் அவர்களுடைய வலைகள், தளவாடப் பொருட்கள் சேதப்படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளன.
இதுதவிர, பறிமுதல் என்ற பெயரில் படகுகளைப் பறித்துக் கொள்ளும் செயலிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர் இலங்கைக் கடற்படையினர்.
இத்தகைய சூழலில், ஒரு மாநிலத்தின் முதல்வராக பிரதமருக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியிருக்கிறார் ஜெயலலிதா.
இதை அநாகரிகமான வார்த்தைகளில் அர்ச்சித்து, அருவருக்கத் தக்க சித்திரங்களை உடன் இணைத்துத் தன்னுடைய உத்தியோகபூர்வ இணையதளத்தில் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடுகிறது என்றால், என்ன அர்த்தம்? அரசின் ஆசியின்றி நடக்கக் கூடிய காரியமா இது?
இன்றைக்கு அல்ல; பல ஆண்டுகளாக இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
போர்க் காலகட்டத்தில், தமிழக அரசியல்வாதிகளைக் கேவலமான முறையில் சித்தரித்து, இலங்கைத் தரப்பில் வெளியிட்ட படங்களையெல்லாம் தமிழகம் இன்னும் மறந்துவிடவில்லை.
ஜெயலலிதா மீதான அவதூறுக் கட்டுரை, தனிப்பட்ட ஒருவரின் கருத்து என்கிற இலங்கையின் விளக்கமெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இந்த விவகாரத்தில், தமிழகக் கட்சிகளிடையே எழுந்துள்ள ஒற்றுமை அரிதானது. முக்கியமாக, தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, தமிழக முதல்வருக்குத் தெரிவித்திருக்கும் தார்மிக ஆதரவு முக்கியமானது.
தமிழக அரசியல் கட்சிகளிடம் இதுபோன்ற ஒருமித்த செயற்பாட்டைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்கள் என்ற முறையில், இப்படியான ஆக்கபூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டிய கடமை முதல்வர் ஜெயலலிதாவுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் உண்டு.
அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை ஏனையோருக்கு உண்டு.
தமிழக அரசியல்வாதிகளைக் கிள்ளுக்கீரையாகப் பிறர் அணுகக் காரணம், நம்மவரிடையே காணப்படும் ஒற்றுமையின்மைதான்.
இன்றைக்கும்கூட சட்டசபையில் நிலவும் ஆரோக்கியமற்ற சூழலை மக்கள் கவலையோடுதான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கான தொடக்கப் புள்ளியாக, ஒரு படிப்பினையாக இந்த விவகாரம் அமையட்டும்.
பிரதமர் மோடி இனியும் வாய் மூடி இருக்கலாகாது. இந்தியாதான் என்றைக்கும் இலங்கையின் முதல் ஆபத்பாந்தவன் என்பதையும் இந்த உறவுச் சங்கிலியின் முக்கியமான கண்ணி தமிழகம் என்பதையும் இலங்கைக்கு உணரவைக்க வேண்டும்.
என்றவாறுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITaLcex5.html
ஹிருணிகா மற்றும் சேனால் வெல்கம இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தளங்களில்
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 06:08.17 AM GMT ]
அமைச்சர் குமார் வெல்கமவின் மகன் சேனால் வெல்கம மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரின் புகைப்படம் ஒன்று இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மேல் மாகாண சபை உறுப்பினர்களான இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அத்துடன் அமைச்சர் குமார் வெல்கம, ஹிருணிகா தனது எதிர்கால மருமகள் என பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
மாகாண சபையில் அடுத்தடுத்து அமரும் சேனால் மற்றும் ஹிருணிகா ஆகியோர் நேற்று நடைபெற்ற மாகாண சபையின் குழுக்கூட்டத்தில் கையடக்க தொலைபேசியில் சுயமாக படம் எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படமே இணைய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITaLcex6.html
கோத்தபாயவின் நரித்தனம் அம்பலம்
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 06:43.22 AM GMT ]
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் பொறுப்பின் கீழ் இருக்கும் நீர் வழங்கல் சபையை மிகவும் தந்திரமான முறையில், நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.
நிதியமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செலுத்த முடியாத பெருந்தொகை பணத்தை தேசிய வங்கிகளிடம் இருந்து பெற வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்ட சபையின் தலைவர், மில்லியன் அல்லது பில்லியன் தொகையான கடன் சுமையை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சமாளிக்க முடியாது என கூறியுள்ளார்.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்புச் சபையின் தலைவர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரான ஆர். டப்ளியூ. ரஞ்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருப்பதுடன் அந்த அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின்படி இயங்கி வருகின்றது.
இந்த நிலையில், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையும் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின்படி செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்ட பிரதிபலனாகவே கொழும்பில் அண்மையில் 72 மணிநேர நீர் விநியோகம் தடைப்பட்டதாக பேசப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnoz.html

Geen opmerkingen:

Een reactie posten