[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 08:26.34 AM GMT ]
இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு மாகாணசபை உறுப்பினர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்சமயம் தோன்றியுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நீர்த்தட்டுப்பாடு, தொற்றுநோய் அபாயம், யானைகளின் அனர்த்தம், விலைவாசி உயர்வு, மத்திய அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பு செயற்பாடு, மாகாண அரசின் பாரபட்சமான கொள்கைகள், யுத்தப் பாதிப்புக்கள் போன்றவற்றால் கல்வி, தொழில் முயற்சி, வறுமை, சமுதாய சீரழிவு, வேலை இல்லாத் திண்டாட்டம், அரச உத்தியோகஸ்தர்களின் வருமானப் பற்றாக்குறை, விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு, மீனவர்கள், கால்நடைப் பண்ணையாளர்கள், தினக் கூலிக்காரர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை கிழக்கு மாகாணசபையின் கீழ் நீண்டகாலமாகத் தற்காலிக, ஒப்பந்தம் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்த பலர் 45 வயதைக் கடந்தும் கல்வித்தராதரம் இல்லை என்னும் காரணத்தைக் காட்டி நிரந்தர நியமனம் வழங்குவதில் நழுவல் போக்கினைக் கடைப் பிடிக்கின்றமை போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்து கிழக்கு மாகாணசபை பாதிப்படைந்துள்ள மக்களுக்கு உரிய பரிகார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளின் பின் எழுந்துள்ள வறட்சியான காலநிலை மாற்றம், கடுமையான காற்றுக் காரணமாக நீர் நிலைகள் வற்றிவருவதுடன், கடுமையான வெப்பநிலை நிலவுகிறது.
அதன் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளதுடன், குடிநீர்த் தட்டுப்பாடும் அன்றாடப் பாவனைக்குரிய நீர் இன்மைப் பிரச்சினையும் அதிகளவான கிராமங்களில் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகத் தொற்றுநோய் அபாயங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சூழ ஆரம்பித்துள்ளது.
மேலும், நெற்செய்கை, சிறுதோட்டச் செய்கை, சேனைப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன. அன்றாட கருமங்களைச் செய்ய முடியாத அளவுக்கு வெப்பநிலை கடுமையான காற்று மக்களை வதைக்கின்றது. மீன்பிடித் தொழில் மிகமோசமான அளவில் பாதிப்படைந்துள்ள சூழ்நிலையில் விவசாயப் பயிர்ச் செய்கைகள் அழிவடைந்துள்ளன.
இதனால் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் அன்றாட வாழ்வாதாரத்ததைச் சீர்குலைத்துள்ளது. மீன் உணவு வகை, மரக்கறி உணவு வகைகளின் அதிகரித்த விலையேற்றம் அன்றாட வேதனத்தை விஞ்சிய அளவிற்கு அதிகரித்துள்ளது.
காட்டு மிருகங்களின் தொல்லைகள் குறிப்பாக யானைகளினால் ஏற்படும் அனர்த்தம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. தினமும் யானைத் தாக்குதல் காரணமாகப் பல வீடுகள் இம் மாவட்டத்தில் பல பகுதிகளில் சேதமடைவதுடன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெல், தானிய வகைகள், பயன்தரும் மரங்கள், யானைகளினால் துவசம் செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக மக்கள் ஊண், உறக்கமின்றி, பொருளாதார வசதியின்றி பெரும் உளஉடல் உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களின் உயிர்ப் பாதிப்பைத் தவிர ஏனையவை ஒன்றுக்கும் நஸ்ட ஈடு வழங்கப்படவில்லை.
இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை, தரம் ஐந்து புலைமைப் பரிசில் பரீட்சை, கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வி நிலையும் பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக எல்லைப்புறக் கிராம மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வறுமை காரணமாகவும் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக இடம் பெயரக் கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளன.
மேலும் மக்களைச் சீரழிக்கும் வகையில் மதுபானசாலைகள் அதிகம் திறக்கப்பட மத்திய அரசு அனுமதி வழங்குகிறது. இதனால் மதுபாவனைப் பழக்கங்கள், பொருளாதார அழுத்தங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணசபையின் கீழ் பல ஆண்டுகாலமாக அதிகமான தமிழர்கள் வேலை செய்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக உள்ளூராட்சித் திணைக்களம், விவசாய சிறுகைத்தொழில் திணைக்களம், கல்வி, சுகாதாரத் திணைக்களங்களில் வேலை பார்க்கும் இவர்களுக்கு ஆளணி அனுமதி கிடைக்காததன் காரணமாக நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
தற்சமயம் அனுமதி கிடைத்த நிலையில் 45வயது கடந்ததையும் கல்விதாராதரக் குறைவையும் காரணம் காட்டி நிரந்தார நியமனம் வழங்காமல் இழுத்தடிப்புச் செய்து வருகிறது. இச் செயலானது கிழக்கு மாகாண சபையால் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை எடுத்துக்காட்டுகின்றது.
பல அரச உத்தியோகஸ்தர்களின் சம்பள நிலுவைகள், கொடுப்பனவுகள், பதவி உயர்வுகள் தொடர்பான விடயங்களில் தாமதப்போக்கு கடைப் பிடிக்கப்படுவதால் அரச உத்தியோகஸ்தர்கள் விரக்தி நிலைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.
மத்திய அரசின் திட்டமிட்ட செயற்பாடுகள் காரணமாக இம்மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் உள்ள தமிழர்களின் பிரதேசத்துக்குரிய குறிப்பாக மாதவணை, கதிரைக்கல்மலை, மங்களகம, மாவிலாறு, கெவிளியாமடு புணாணை, மையிலந்தணை, போன்ற கிராமங்களில் உள்ள காணிகளைக் கையகப்படுத்த மறைமுகமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்விடயங்கள் தொடர்பாகக் கிழக்கு மாகாண அரசு பாராமுகமாக இருந்து வருகின்றது. குறிப்பாக பாரபட்ச இனவாதச் சிந்தனை காரணமாக இம் மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இதைத் தவிர்க்க மேற்குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசு சார்ந்த விடயங்களுக்கும், மாகாண அரசு சார்ந்த விடயங்களுக்கும் ஏற்ற நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnx1.html
பச்சிளம் குழந்தையை 30 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் - சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 08:51.11 AM GMT ]
இந்த சம்பவம் சபுகஸ்கந்த, ஹங்வெல்ல மிதுன் உயன என்ற பிரதேசத்தில் நடந்துள்ளது.
குழந்தையின் தாய், குழந்தையை 30 ஆயிரம் ரூபாவுக்கு மற்றுமொரு பெண்ணிடம் விற்பனை செய்துள்ளார்.
குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய மாகொல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது
பொகவந்தலாவ பொகவான தோட்டத்தில் 15 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 24 வயது இளைஞனை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த இரண்டாம் திகதி இடம் பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து பொதுமக்களால், சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகப்பு அதிகார சபைக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த திணைகளத்தின் ஊடாக பொகவந்தலாவ
பொலிஸாருக்கு தகவலை வழங்கபட்டது. இதனையடுத்து குறித்த சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு தகவலை வழங்கபட்டது. இதனையடுத்து குறித்த சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமிக்கும் சந்தேக நபரான 24 வயது இளைஞர் ஆகிய இருவருக்கும் காதல் உறவு இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பாதிக்கபட்ட சிறுமி மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக நாவலபிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார்.
சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அஜர்படுத்தபட்டு நிலையில், எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வாரம் பொகவான தோட்டத்தில் பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறபடும் 29 வயதான சந்தேநபர் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnx2.html
வேலாயுதம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 08:58.12 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வந்த ஹரின் பெர்னாண்டோ அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி முன்னிலையில் வேலாயுதம் இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வேலாயுதம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnx3.html
கொழும்பு கோட்டே தொகுதியின் அமைப்பாளராக கோத்தபாய?
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 09:11.12 AM GMT ]
கோத்தபாய கொழும்பு மாவட்டத்தின் கோட்டே தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட உள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர் கோட்டே தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கோத்தபாயவின் அரசியல் வருகைக்கான பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான பிரிவு ஒன்றும் இயங்கி வருகிறது.
அமைச்சுக்கள் பலவற்றில் இருந்து அமைச்சர்கள் நியமித்துள்ள பணிக்குழுவில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களே இந்த பிரசாரப் பிரிவில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnx5.html
Geen opmerkingen:
Een reactie posten