தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 augustus 2014

சாட்சியாளர்களுக்கு பணக் கொடுப்பனவு: ஜீ.எல் பீரிஸின் கருத்துக்கு கிளம்பிய விமர்சனங்கள்

பெறுமதிமிக்க காணிகளில் கைவைக்கும் கோத்தபாய! சுளையாக கிடைக்கும் இலாபம்!
[ சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2014, 11:42.24 PM GMT ]
நாடெங்கிலும் உள்ள பெறுமதிமிக்க காணிகளை முறைகேடாக கைப்பற்றி விற்பனை செய்வதன் மூலம் கோத்தபாய ராஜபக்ச பெருந்தொகைப் பணம் உழைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடெங்கிலும் உள்ள இவ்வாறான காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் பேரால் சுவீகரித்து, பின்னர் அதனை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது தற்போது கோத்தபாயவின் பிரதான நடவடிக்கையாக உள்ளது.
இதன் பிரகாரம் அண்மையில் 2014.07.28ம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 14/1041/503/093 இலக்க அமைச்சரவைப் பத்திரம் மூலம் கண்டி சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் ஒரு காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. பின்னர் அக்காணி ஆசிரி மருத்துவமனை நிர்வாகத்துக்கு விற்பனை செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2014/07/28 ம் திகதி 14/1054/503/097 இலக்கம் கொண்ட அமைச்சரவைப் பத்திரம் மூலம் ராஜகிரிய, மாதின்னாகொடையில் ஒரு காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. அக்காணி தற்போது அரலிய கிராண்ட் கொழும்பு ஹோட்டல் என்னும் நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது.
2014/07/31 ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 14/1052/503/095 இலக்கமுடைய அமைச்சரவைப் பத்திரம் மூலம் கொள்ளுப்பிட்டியில் ஒரு காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இக்காணியும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்படவுள்ளது.
இவ்வாறாக விற்பனை செய்யப்படும் காணிகள் தொடர்பில் தெளிவான விபரங்களோ, காணியின் அளவோ குறிப்பிடப்படாமலேயே இந்த கொடுக்கல் வாங்கல் நடைபெறுகின்றது. இதன் மூலம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பெருந்தொகைப் பணத்தை முறைகேடான வழியில் உழைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRXLdfrz.html

அமைச்சர் அதாவுல்லா, ரவூப் ஹக்கீம் போன்றவர்களுக்கு, மக்கள் நண்பன் ஒருவர் விடுக்கும் கார மிளகாய் சவால்!
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 02:04.39 AM GMT ]
ஐஸ் வாளி சவால் - Ice Bucket Challenge இனைப் போன்று மக்கள் நண்பனாகிய நான் அம்பாறை மாவட்ட ஒரு சில முக்கிய அரசியல்வாதிகளிடத்தில் ஒரு சவாலை விடுக்கின்றேன். அதுதான் Hot chilli challenge அதாவது மிகவும் காரமான 2 மிளகாய்களை சாப்பிடுவது.
ஐஸ் வாளி சவால் - Ice Bucket Challenge ஆனது நரம்பியல் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிக்கும் பொருட்டு ஒரு தொண்டு நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த ஐஸ் வாளி சவாலில் தண்ணீரை வீண்விரயம் செய்கிறார்கள் என்பதற்காக நான் அவ்வாறு அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக எனது சவாலை விடுக்கின்றேன்.
நான் இந்த சவாலினை உள்ளுராl;சி சபைகள் கௌரவ அமைச்சர் அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ உதுமாலெப்பை, கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஹரீஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் முஸ்லிம் காங்ரஸ் தலைவரும், நீதியமைச்சருமான கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களிடத்திலும் விடுக்கின்றேன்.
இவர்கள் அனைவரும் இன்னும் 48 மணித்தியாலத்துக்கு இடையில் நான் இந்த வீடீயோவில் செய்வது போன்று இரண்டு காரமான மிளகாய்களை எடுத்து அதனை பகிரங்கமாக உண்டு காட்ட வேண்டும் அவர்கள் தவறும் பட்சத்தில் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதனை நிறைவேற்றித் தர வேண்டும்.
என்னுடைய கோரிக்கை என்னவென்றால் மாவடிப்பள்ளிப் பாலத்தினை அவிவிருத்தி செய்வதாகும்.
இந்த மாவடிப்பள்ளி பாலத்தினால் மக்கள் நாளாந்தம் படும் அவதிகள் சொல்லில் அடங்காதவை. மழை காலம் வந்தால் அந்த வீதியினுாடக நடைபெறும் அத்தனை போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விடும். அம்பாறைக்குச் செல்வதாக இருந்தாலும் சரி, கல்முனைக்குச் செல்வதாக இருந்தாலும் சரி அந்தப் பாதை மக்களுக்கு மிகவும் பிரயோசனமானதாக இருக்கின்றது ஆனால் அந்தப் பாலத்தின் அவலம் மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது.
மழை காலத்தில் பலபேரது உயிர்களையும் காவு கொண்ட அந்தப் பாலத்தை இன்னும் அரசியல்வாதிகள் யாரும் கண்டு கொள்ளாது இருக்கின்றார்கள், பல தடவைகள் அது சம்பந்தமாக முறையிட்டும் எதுவித பலனும் இன்னும் கிட்டவில்லை. நானே இது பற்றி பலமுறை பதிவிட்டிருக்கின்றேன்.
என்னுடைய Hot chilli challenge யின் நோக்கமே அந்த மாவடிப்பள்ளிப் பாலத்தினை அபிவிருத்தி செய்வதற்கான விளிப்புணர்வை உண்டு பண்னுவதே ஆகும்.
மிளகாய் சாப்பிடுவதென்பது ஒரு சாதாரணமான விடயமாக இருந்தாலும் இந்தப் பாலத்தினை அபிவிருத்தி செய்து தரும்படி அரசியல்வாதிகளுக்கு வித்தியாசமான முறையில் விளிப்புணர்வூட்ட நான் மேற்கொள்ளும் ஒரு சிறிய முயற்சியே இதுவாகும்.
ஆகவே நண்பர்களே..!!! நீங்கள் எனக்குச் செய்வதெல்லாம் இந்த வீடியோவை அத்தனை பேருக்கும் செயார் செய்யுங்கள் இது சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் எட்டி அதன் மூலம் இந்தப் பாலத்திற்கு ஒரு விமோசனம் கிடைத்தால் அந்த நன்மை உங்களையும் வந்தடையும் இன்சா அல்லாஹ்.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை.
kmansar14gmailcom
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfs0.html

சாட்சியாளர்களுக்கு பணக் கொடுப்பனவு: ஜீ.எல் பீரிஸின் கருத்துக்கு கிளம்பிய விமர்சனங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 02:21.52 AM GMT ]
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், பணம் கொடுத்து சாட்சியங்களை பெறுவதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கூறிய கருத்துக்கு பலரும் தமது விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இந்த கருத்தை முட்டாள்தனமாக கருத்து என்று குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு நடந்திருந்தால் ஜீ.எல் பீரிஸ் அதற்கான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
விசாரணைக்குழு நிதி வழங்கி சாட்சியங்களை பெறவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் சாட்சியாளர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருப்பதாக சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
சாட்சியங்களுக்காக பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட கருத்து தொடர்பில் தகவல் வழங்கியுள்ள தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா, கூட்டங்களுக்கோ அல்லது அமர்வுகளுக்கோ வருபவர்களுக்கு போக்குவரத்து செலவுகள் மற்றும் சிறிய கொடுப்பனவுகள் வழங்கப்படுவதுண்டு.
இது அரசசார்பற்ற அமைப்புக்களுக்கு மாத்திரம் அல்ல. அரசாங்க நிறுவனங்களுக்கும் பொதுவான விடயமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இடம்இல்லை என்று ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், சாட்சியங்கள் பதிவு செய்யப்படுமானால் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.
அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க இது தொடர்பில் கருத்துரைக்கையில், இவ்வாறான பணம் வழங்கும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் தாம் சாட்சியங்களை பெற்றுக்கொள்வதற்காக பணக் கொடுப்பனவுகளை செய்யவில்லை என்று மனிதஉரிமைகள் நடவடிக்கையாளர் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
எனவே இந்தக்குற்றச்சாட்டை முடியுமானால் அரசாங்கம் நிரூபித்துக்காட்டட்டும் என்று நிமல்கா சவால் விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfs2.html

Geen opmerkingen:

Een reactie posten