[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 04:21.00 AM GMT ]
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கத்தேய நாடுகளின் பகடைக் காய்களாக மாறியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு அதிதியாவசிய தேவைகளை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தாம் அரசோச்சும் வகையில் வடக்கு கிழக்கு இணைந்த தனிநாட்டைக் கோருகின்றது.
இலங்கை சுயாதீனமான நாடாகும். எனவே வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு நாம் இடமளிக்க முடியாது.
இருந்தும் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை உணர்ந்து யதார்த்தமாக செயற்படுபவர்.
எனவே அவர் மீது முழு நம்பிக்கை இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfs6.html
கூட்டமைப்பினர் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும்: ஜனாதிபதி சீற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 05:22.15 AM GMT ]
இது குறித்த தனது கடும் அதிருப்தியை பிரதிநிதி ஒருவர் மூலமாக ஜனாதிபதி, சம்பந்தனிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இந்த விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படாதது குறித்த தனது கடும் ஏமாற்றத்தை ஜனாதிபதி தனது பிரதிநிதி ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.
'தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் என்னையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளுவதை நோக்கமாக கொண்டது. கூட்டமைப்பினர் அரசாங்கத்தை மாற்ற விரும்புகின்றனர். அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான முறுகல் நிலைக்கு இதுவும் ஒரு காரணம்.
வட மாகாண சபை அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதாலேயே நான் ஆளுநரை மாற்றவில்லை. சம்பந்தனும் அவரது கட்சியினரும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும். என்னிடம் வராவிட்டால் அவர்களால் தீர்வுகள் குறித்து பேச முடியாது' என தன்னுடைய பிரதிநிதி ஊடாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
'நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாங்கள் அரசியல் தீர்வொன்றிற்காக பாடுபடுகிறோம், இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக நாங்கள் அங்கு செல்கிறோம்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfs7.html
தற்காலிக விசா இன்றி தஞ்சம் கோரும் சிறுவர்களை தடுப்பிலிருந்து விடமுடியாது ஆஸி.அமைச்சர் மொரீசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 05:27.49 AM GMT ]
சிறுவர்களைத் தடுத்து வைத்திருப்பது தொடர்பில் அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், தற்காலிக விசா பெறுபேறுகள் இல்லாத நிலையில் கடந்த ஆண்டு ஜுலை 19 ஆம் திகதிக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவை வந்தடைந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் மொரீசன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfty.html
ஹிருணிகா மூலம் ஹரினுக்கு வலைவீச்சு! ஜனாதிபதியின் அரசியல் தந்திரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 05:35.40 AM GMT ]
ஊவா மாகாண ஐ.தே.க. வின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோவுக்கும், ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கும் இடையில் மிக நெருக்கமான அந்தரங்கத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதிக்கு உளவுப் பிரிவின் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகளான ஹிருணிக்கா தற்போது மேல் மாகாண சபை உறுப்பினராக உள்ளார். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த காலத்தில் இவர் நாமல் ராஜபக்ஷவினால் தீவிரமாக காதலிக்கப்பட்டவர் என்பது பகிரங்கமான அரசியல் ரகசியமாகும்.
எனினும் மஹிந்த ஜனாதிபதியானவுடன், ஷிரந்தி ராஜபக்ஷ இந்தக் காதல் தொடர்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார். ஹிருணிக்கா தங்கள் குடும்ப கௌரவத்துக்கு ஒத்துவராத சேரிப்புற யுவதி என்றும் அவர் வர்ணித்திருந்தார்.
இதற்கிடையே ஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்பிருந்ததை விட செல்வாக்கு அதிகரித்துள்ளது. அங்கு போட்டியிடும் ஹரின் பெர்னாண்டோ பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரரின் மகனுமான சஷீந்திர ராஜபக்ஷ மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். இங்கு ஆளுங்கட்சியை விட ஜே.வி.பி. செல்வாக்குப் பெற்றுள்ளது. இதனால் ஆளுந்தரப்பு மாவட்டத்தை வெற்றிகொள்வதற்குப் பதிலாக சஷீந்திரவையேனும் வெற்றிபெற வைக்க கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் தங்களால் ஒதுக்கப்பட்ட ஹிருணிக்காவைப் பயன்படுத்தி, ஹரின் பெர்னாண்டோவை ஆளுந்தரப்புக்கு இழுக்க ஜனாதிபதி வலை வீசியுள்ளார். இதன் மூலம் ஐ.தே.க.வை தோற்கடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக ஹிருணிக்காவை அலரி மாளிகைக்கு வரவழைத்துள்ள அவர், ‘‘ ஹரின் ஏற்கெனவே திருமணமானவர். அதுவுமில்லாமல் இன்னொருவரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர். உனக்கு அவர்தான் தேவையா? ’’ என்று கடுமையான குரலில் கண்டித்துள்ளார்.
இதற்கு ஹிருணிக்கா பதிலளிக்காது சிரித்துக் கொண்டிருந்ததைக் கண்ட ஜனாதிபதி, ‘‘சரி. அப்படியானால் ஹரினை ஆளுங்கட்சிக்கு அழைத்து வா. அப்போது நானே உங்கள் காதலுக்கு உதவி செய்கிறேன்’’ என்று வாக்களித்துள்ளார். இதன் மூலம் ஹரினை ஆளுங்கட்சிக்கு இழுத்து, தன் சகோதரர் மகனின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி காய் நகர்த்தியுள்ளார்.
எனினும் இது தொடர்பில் ஹிருணிக்கா எதுவித பதிலும் அளிக்கவில்லை என்று அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdftz.html
Geen opmerkingen:
Een reactie posten