[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 02:37.58 AM GMT ]
இராஜதந்திர விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொள்ள விசேட நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமிக்கத் தீர்மானித்துள்ளார்.
இராஜதந்திர சேவையில் நிபுணத்துவம் பெற்ற மூன்று பேரும், இரண்டு பல்கலைக்கழக பேராசிரியர்களும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்க உள்ளனர்.
விசேட நிபுணர் குழுவிற்கான பிரதிநிதிகளை ஜனாதிபதி விரைவில் நியமிக்க உள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரம் குறித்த பேராசிரியர் ஒருவரும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்க உள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் ஒரு சில நடவடிக்கைகள் குறித்து ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த எதிர்ப்பினை சமாளிக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ்வாறு விசேட நிபுணர் குழு ஒன்றை நியமிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfs3.html
தமிழினத்தை ஓரம்கட்ட அரசிற்கு முட்டுக் கொடுக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்: கலையரசன் சீற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 03:27.56 AM GMT ]
நாவிதன்வெளி 11ம் கிராம கிரீன் லைட் விளையாட்டு கழகத்தின் 38ம் நிறைவை கொண்டாடும் விழா கடந்த 17ம் திகதி நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.குணரெட்ணம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகம் சென்றவர்களையும் 5 ம் ஆண்டுபுலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களையும் பாராட்டி பரிசில்கள் வழங்கப்பட்டன.
இதன் போது தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன்,
குறிப்பிட்ட காலத்தில் சம்மாந்துறையில் இருந்து பிரிந்து 2006ல் தனியான பிரதேச சபையாக வந்ததன்பின்னர் இந்தக் கிராமம் உட்பட எமது பிரதேச சபைக்கு உட்பட்ட பல கிராமங்கள் அபிவிருத்தியில் முன்னேற்றங்களை கண்டுள்ளது.
எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் இந்த நாவிதன்வெளி பிரதேச சபை இருப்பதனாலேயே அரசசார்பற்ற நிறுவனங்களான நெல்சிப், ஜெக்கா போன்ற நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டினால் பாரிய வீதிகளை எமது பிரதேசத்தில் புனரமைக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
2013ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடித்ததன் காரணமாக கடந்த 6 மாதங்களாக எமது நாவிதன்வெளி பிரதேச சபையினால் எந்த அபிவிருத்திகளையும் செய்ய முடியாதிருந்தது.
இது யாரால் ஏன் என்பவற்றிற்கான பதிலும் இதற்கு பின்னால் இருந்து செயற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த எடுத்த முயற்சியும் தற்போது அது வெளிச்சமாகியுள்ளதையும் இங்குள்ள மக்கள் அறிவர்.
எமது கட்சி அபிவிருத்தியை இலக்காக கொண்டு அரசியல் செய்வதில்லை. எமது இலக்கு மக்களின் உரிமையை பெற்று சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்காகபேவ பல அகிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
ஆனாலும் எமது பிரதேசங்களில் அடிப்படை தேவைகளாக இருக்கும் அத்தனை தேவையான அபிவிருத்திகளையும் எம்மால் முடிந்தவரை செய்துகொண்டுதான் வருகின்றோம்.
சிறுபான்மை இனத்தவருக்காக கொண்டுவரப்பட்ட மாகாண சபைகளை அரசு தன் ஆதிக்கத்தை கொண்டு அடக்கி ஆளவேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றது.
இன்று சர்வதேசத்தின் பார்வை எம் பக்கம் திரும்பியுள்ளது. இதற்கு காரணமான லட்சக்கணக்கான உயிர்களை தியாகம் செய்தவர்களை என்றும் எம்மால் மறக்க முடியாது. அரசு சர்வதேசத்திற்கு ஒருமுகமும் இங்கே ஒருமுகமும் காட்டிக் கொண்டு இருக்கின்றது.
அதுவிரைவில் ஒருமுகமாக மாற்றமடையும் அதுவரை எம் மக்கள் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பக்கபலமாக இருப்பதோடு, எமது கல்வி கலாசாரத்துடன் விளையாட்டிலும் முன்னேற்றமடைவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
வடகிழக்கு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புவதில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு அளப்பெரியது
வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பல வழிகளிலும் பல தசாப்த காலங்களாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறான பாதிப்புக்களில் இருந்து விடுபட வைப்பதற்காக புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பல அமைப்புக்களின் மூலம் உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
அன்பே சிவம் அமைப்பானது மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்களும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வானது கல்முனை விபுலானந்தா வித்தியாலயத்தில் மாலை நேர இலவச கல்வியகத்தில் திருமதி உதயன் தம்பதிகளின் செல்வப்புதல்வி வீனா அவர்களின் 3வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கரையரசன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன்,
இந்நிகழ்வானது வெறுமனே களியாட்ட நிகழ்வாக இராமல் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எமது உறவுகளுக்கான வாழ்வாதார திட்டங்களுக்கு உதவுவதுடன், குடிநீர் வழங்கள் திட்டங்களையும் இந்நாளிலே செய்து கொண்டிருக்கின்றோம்.
எமது மக்களுடைய உடனடித் தேவையான எதுவென இனங்கண்டு அவர்களுக்கு உதவி செய்து கொண்டு வருகின்றது அந்த வகையில் குடிநீர் தெரிவினை பார்க்கும் போது உண்மையில் உரிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள மத்திய முகாம்-1, ஆலையடி வேம்பு கண்ணகி கிராமம், துறைவந்தியமேடு, சேனைக்குடியிருப்பு, ஆகிய கிராமங்களுக்கான குடிநீர் கிணறுகள் அமைப்பதற்காக வேண்டி நிதியுதவிகள் அன்பே சிவம் அமைப்பினூடாக செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வமைப்புக்கள் போன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள ஏனைய அமைப்புக்களும் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும் அவ்வாறு முன்வரும் பட்சத்தில் எமது மக்களின் அடிப்படைத் தேவைகள் ஓரளவாவது பூர்த்தியடையும்.
அம்பாறை மாவட்டத்தினை பொறுத்த வரையில் மூன்று இனங்கள் வாழும் ஒரு மாவட்டமாகும். அந்த அடிப்படையிலே மிகவும் துன்பத்துடன் கஸ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமென்றால் அது எமது தமிழச் சமூகமேயாகும்.
இன்று இலங்கையிலே ஒரு சாதாரண சூழ்நிலை என்று அரசாங்கம் கூறினாலும் யுத்த சூழலில் இருந்ததைப்போன்றே அரசியல் ரீதியாகவோ, அபிவிருத்தி ரீதியாகவோ புறக்கணிக்கப்பட்டபவர்களாகவே எமது இனம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
தமிழர்களினது ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டதன் காணமாகவே இந்த நாட்டிலே அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அதே போன்றுதான் இன்றும் சர்வதேச ரீதியாக பல மட்டங்களிலே பல போராட்டங்களை அகிம்சை ரீதியாக நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்திலே தமிழ் மக்களாகிய எங்களுக்கு எந்தவிதமான நம்பகத்தன்மையும் ஏற்படவில்லை. காரணம் அவர்களது செயற்பாட்டில் எமது மக்கள் தொடர்பாக எந்தவிதமான மாற்றங்களும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இதன்காரணமாகத்தான் இன்று சர்வதேச மட்டத்திற்குச் சென்று எமது பிரச்சினைகளை முன்வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. (சர்வதேச விசாரணை தொடக்கம் 13வது திருத்தச் சட்டம் வரைக்கும்) இதற்கு முழுப்பொறுப்பும் இந்த அரசாங்கமே என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfs4.html
தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இந்தியப் பிரதமர் துணை போகமாட்டார்!- ஞானசார தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 04:21.00 AM GMT ]
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கத்தேய நாடுகளின் பகடைக் காய்களாக மாறியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு அதிதியாவசிய தேவைகளை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தாம் அரசோச்சும் வகையில் வடக்கு கிழக்கு இணைந்த தனிநாட்டைக் கோருகின்றது.
இலங்கை சுயாதீனமான நாடாகும். எனவே வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு நாம் இடமளிக்க முடியாது.
இருந்தும் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை உணர்ந்து யதார்த்தமாக செயற்படுபவர்.
எனவே அவர் மீது முழு நம்பிக்கை இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfs6.html
Geen opmerkingen:
Een reactie posten