தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 augustus 2014

எது முதலில்?- அரசாங்கத்திற்குள் குழப்பம் (செய்தித் துளிகள்)!!!

நாமலின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்த பெண் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 06:25.49 AM GMT ]
தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவரை தங்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் செயலாளர் ஊடாக தொழில் வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, குறித்த பெண் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பொலியத்தை விதாரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி பணம் பெற்றமை சம்பந்தமாக 7 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சந்தேக நபரான இந்த பெண் 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் பணத்தை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
பெலியத்தை பிரதேசம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdft0.html
எது முதலில்?- அரசாங்கத்திற்குள் குழப்பம் (செய்தித் துளிகள்)
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 06:51.40 AM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதா என்பது குறித்து அரசாங்கத்திற்குள் இன்னும் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்தி விட்டு பொதுத் தேர்தலை நடத்தலாம் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு மாறான நிலைப்பாட்டை சில அமைச்சர்கள் அண்மையில் முன்வைத்துள்ளனர்.
சில அமைச்சர்கள் தமது தனிப்பட்ட வெற்றி தொடர்பாக சிந்தித்து வருவதால், முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ,
நாங்கள் ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களுக்கு சென்று பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
எனினும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தமது கிராமங்களுக்கு சென்று பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர் என அருந்திக்க பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,
அடுத்த ஒரு வருடத்தின் பின்னர் கூட பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களை புறக்கணித்து வரும் அமைச்சர்களை எச்சரிக்கும் வகையில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தல் இறுதிப் போட்டியை போன்றது - ரணில்
இளைஞர்களும், வயது வந்தவர்களும் இணைந்து ஜனாதிபதித் தேர்தலை இறுதிப் போட்டியாக கருதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் முன்னணியின் கொழும்பு மாவட்ட பிரிவு ஒழுங்கு செய்துள்ள 6 பேர் கொண்ட அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த வளாகத்தில் ஆரம்பமானது.
இதில் கலந்து கொண்டு பேசும் போதே ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டு அரசியல் மயப்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் எனவும் 17வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்தி, அவற்றின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையாளருக்கும் ஜே.வி.பி. கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பு
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் ஜே.வி.பி. கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.
ஜே.வி.பி. பிரதிநிதிகள் குழுவிற்கு கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமை தாங்கவுள்ளார்.
தேர்தல் சட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பில் இந்த சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன.
எதிர்வரும் 29ம் திகதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
அரச சொத்துக்கள் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றமை, அரச உத்தியோகத்தர்கள் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றமை போன்றன குறித்து தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 29ம் திகதி நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜே.வி.பி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டில் 100 கைதிகள் சிறைச்சாலைகளிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்
இந்த ஆண்டின் இதுவரையில் 100 கைதிகள் சிறைச்சாலைகளிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 
சிறைச்சாலை திணைக்களமே இந்த தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சம்பவங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களே அதிகளவில் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
வழக்குகளுக்காக கைதிகளை அழைத்துச் செல்லும் போதும் இவ்வாறு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற கைதிகளை கைது செய்ய பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdft1.html

Geen opmerkingen:

Een reactie posten