தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 augustus 2014

இலங்கை பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் ஜெயலலிதாவை விமர்சித்த கட்டுரை நீக்கம்! இலங்கை மன்னிப்புக் கோர வேண்டும்: ஜெ

அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்தது பாதுகாப்பு அமைச்சின் விவேகமற்ற செயல்!– தயான் ஜயதிலக
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 09:06.38 AM GMT ]
அமெரிக்கத் தூதரகம், அண்மையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மறுப்பு விவேகமற்ற செயல் என்று முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். 
குற்றச்செயல்களுக்குப் பொறுப்புக்கூற  இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அண்மையில் அமெரிக்கத் தூதரகம் குற்றஞ்சாட்டியிருந்தது. இக்குற்றச்சாட்டுக்கே பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி இராணுவப் பேச்சாளர் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அல்லது அமெரிக்கத் தூதரகத்தின் கருத்தை வெளிவிகார அமைச்சே மறுத்திருக்க வேண்டும்.
அவ்வாறு மறுக்கக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சுக் கருதும் பட்சத்தில், இன்னொரு அமைச்சு அத்தகைய மறுப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கக் கூடாது.
அரசாங்க ஊடகம் ஒன்றில் ஆசிரியர் கருத்தில் அதனை குறிப்பிட்டாலே போதுமானது.
பாகிஸ்தான் நீண்டகாலம் இராணுவ ஆட்சியில் இருந்த போதும் கூட, இன்னொரு நாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில், இத்தகைய அறிக்கைகள் வெளிவந்ததில்லை.
இதுபோன்ற விவகாரங்கள், வெளிவிவகார அமைச்சிடமே விடப்பட்டன.
இராணுவம் மீது நேரடியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் சூழ்நிலையின் போதே, அனைத்துலக விவகாரங்களுக்கு இராணுவப் பேச்சாளர் பதிலளிக்கலாம்.
உதாரணத்துக்கு, தென்கொரிய விமானத்தை சுட்டு வீழ்த்தினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது, சோவியத் ஜெனரல் நிகொலய் ஒர்காகோவ் செய்தியாளர் மாநாட்டை நடத்தினார்.
தூதரகங்களின் அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு அல்லது சீருடையணிந்த அதிகாரிகள் மறுப்பது, இராணுவ சர்வாதிகார ஆட்சியின் போது மட்டுமே நடக்கின்ற விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgv0.html

சர்வதேச பொலிஸாரால் தேடும் போதைப்பொருள் வர்த்தகர்: மனைவி மற்றும் மாமி கைது (செய்தித் துளிகள்)
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 09:13.04 AM GMT ]
முக்கிய போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவராகக் கருதப்படும் வெலே சுதாவின் மனைவி மற்றும் மாமியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜயவர்தனபுர மாதிவெல பிரதேசத்தில் வைத்து இருவரையும் கைது செய்துள்ளனர்.
வெலே சுதாவின் முக்கிய சகா ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 12ம் திகதி களனி பிரதேசத்தில் வைத்து 85 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்களை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
கம்பல விதானகே சமன் குமார எனப்படும் வெலே சுதா தற்போது பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பும் நாடப்பட்டுள்ளது.
வெலே சுதாவின் மனைவி கயானி பிரியதர்சனி மற்றும் மாமியாரான கே.குணவதி ஆகியோரிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பாரிய போதைப்பொருள் வர்த்தக விநியோக நடவடிக்கைகளுடன் வெலோ சுதாவிற்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
மரத்தில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வியாபாரி - அநுராதபுரத்தில் சம்பவம்
அநுராதபுரம் நகரில் நடைபாதை வியாபாரி ஒருவர் மரம் ஒன்றில் ஏறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.
அநுராதபுரம் ஆயுர்வேத சுற்று வட்டத்தில் இருந்து நீதிமன்றம் சுற்று வட்டம் வரையுள்ள நடைபாதையில் வியாபாரம் செய்து வரும் நபரே, இவ்வாறு மரத்தில் ஏறி அமர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் அடிக்கடி நடைபாதை வியாபாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு எதிராகவே அவர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
ஆயுர்வேத மருந்து என்ற போர்வையில் மதுபானம் தயாரித்த நபர் கைது
ஆயுர்வேத மருந்து எனக் கூறி தயாரிக்கப்பட்ட மதுபான தொகையுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் குருணாகல் மஹாமுகலன்யாய பஹாவபோத்தவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புமதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மருந்து என்று கூறி, தேவைக்கு அதிகமாக எதனோல் கலந்து இந்த மதுபானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற் காண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgv1.html

இலங்கை பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் ஜெயலலிதாவை விமர்சித்த கட்டுரை நீக்கம்! இலங்கை மன்னிப்புக் கோர வேண்டும்:  ஜெ
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 09:16.53 AM GMT ]
இலங்கை பாதுகாப்புத் துறை இணையத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை பற்றி பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதுவதை கொச்சைப்படுத்தும் விதமாக தரக்குறைவாக விமர்சித்து, இலங்கை பாதுகாப்புத் துறை இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் அதில் ஜெயலலிதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இருக்கும் சர்ச்சைக்குரிய படம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
இந்த கட்டுரையின் தலைப்பில் ஜெயலலிதா குறித்து இடம்பெற்ற வாசகம் தொடர்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இப்பிரச்சினை இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இதனைத் தொடர்ந்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையத்தளத்தில் இடம்பெற்ற அந்த சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சர்ச்சைக்குரிய கருத்து வெளியானது குறித்து  இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும் என்றும் பிரதமரை அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி-
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgv2.html

Geen opmerkingen:

Een reactie posten