[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 11:40.54 AM GMT ]
இலங்கை பற்றிய சரியான தகவல்களை உலகிற்கு முன்வைக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்கா மக்கள் தொடர்பு நிறுவனங்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய வங்கி தகவல்களை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து அமெரிக்கத் தலைவர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் தெளிவுபடுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போலிப் பிரசாரங்களை முறியடிக்கும் வெளிவிவகார அமைச்சின் முயற்சிக்கு மத்திய வங்கி உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான நாடுகளுக்கும், சர்வதேச நிறுவனங்களுக்கும் இவ்வாறு இலங்கை பற்றி தெளிவுபடுத்தும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போரின் பின்னர் முதலீடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் பிழையான தகவல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருவதாக மத்திய வங்கி குற்றம் சுமத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdep7.html
ஆனந்தசங்கரிக்கு எதிராக விரைவில் மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளேன்: சீ.யோகேஸ்வரன் எம்.பி
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 11:46.28 AM GMT ]
அண்மையில் இடம்பெற்ற மட்டக்களப்பு தொகுதி தமிழரசுக்கட்சி கிளை புனரமைப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இலங்கையில் இருந்த அரசாங்கங்களை எல்லாம் ஆட்டிப் படைத்த கட்சி. இக்காலத்தில் தமிழ் அரசுக்கட்சிக்கு ஒரு மதிப்பு இருந்தது.
அன்று தொடக்கம் இன்றுவரை தமிழரசுக் கட்சியின் பதிவில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. அந்தளவிற்கு எமது தமிழரசுகட்சியின் சிறப்பு இருந்தது. முன்னர் எமது வடகிழக்கு மண்ணில் தமிழரசுக்கட்சியில் இருந்தவர்கள் தங்களை விளம்பரம் செய்யும் போது தாம் தமிழரசுக் கட்சியில் இருந்தவர்கள் என்றுதான் கூறுவார்கள். அந்தளவிற்கு மக்கள் கட்சியாக இருந்தது.
எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களின் தந்திரோபாயத்தின் ஒரு கட்டமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் புளொட் அமைப்பும் 2011ம் ஆண்டு இணைக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இந்த இரண்டு கட்சிகளும் இணைக்கும் போது இதனை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் மூவரும் எதிர்த்தோம். இன்னமும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றோம். இனியும் எதிர்ப்போம். அதற்குப் பல காரணங்களை நாம் இதற்கு முன்னர் கூறியிருக்கின்றோம்.
அண்மையில் எங்கள் மூன்று பேருடன் செல்வம் அடைக்கலநாதனுடன் சேர்த்து கொலையாளி பட்டம் கொடுத்த சபாநாயகருக்கு ஆனந்தசங்கரி அவர்கள் கடிதம் எழுதியிருக்கின்றார். விரைவில் அதன் உண்மைத் தன்மை அறிந்ததும் நான் அவருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு மேற்கொள்ளவுள்ளேன்.
தற்போது எமது தமிழ் அரசுக் கட்சி எமது மக்கள் மத்தியில் மீண்டும் தனது அபிமானத்தைப் பெற்ற நிலையில் இருக்கின்றது. எனவே இதனை அழிக்க முடியாது. ஆனால் அதன் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு பல தீர்மானித்திருக்கின்றார்கள்.
எமது தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் அதரவினை எமது வடமாகாணசபைத் தேர்தல் காட்டியிருக்கின்றது.
எனவே எமது கட்சியின் தனித்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அமைக்கப்படும் கிளைகள் தற்துணிவுடன் உறுதியாக இருத்தல் அவசியம்.
எமது மக்களை நீங்கள் ஒன்று திரட்ட வேண்டும். நாம் ஆயுதம் ஏந்திய கட்சி அல்ல. நாம் ஜனநாயக கட்சி அஹிம்சைக் கட்சி. பிற உயிர்களுக்கு தீங்கு நினைக்கக்கூடாது என்று வளர்ந்த கட்சி. எமக்கு புலனாய்வாளர்கள் விட வேண்டிய அவசியம் இல்லை. எமது கட்சியை மக்கள் தேடி வருவார்கள் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdeqy.html
பாலியல் தொழிலை சட்டமாக்குமாறு அழுத்தம்: மகளிர் விவகார அமைச்சர் கவலை
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 11:50.57 AM GMT ]
குருணாகல் மாவட்டம் தம்பதெனி, நாராம்பல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெண்கள் பற்றி பேசும் போது சிறிய பிரச்சினை ஒன்று உள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைக்கும் சர்வதேச தொண்டர் அமைப்புகளில் பணியாற்றும் சிறிய தரப்பு பெண்கள் உள்ளனர்.
இவர்கள் பெண்களின் உரிமைகளை பற்றி பேசுகின்றனர். ஆனால் பாலியல் தொழிலை சட்டமாக்குமாறு கோருகின்றனர்.
அதேவேளை உங்கள் நாட்டில் பெண்கள் விவகாரங்களை கையாள பெண்கள் இல்லையா என வெளிநாட்டுத் தூதரங்கள் கேட்கின்றன.
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டமாக்குமாறு அவர்களும் என்னிடம் கோரிக்கை விடுத்தனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdeqz.html
சகோதரியை தப்பிக்க வைக்க உதவியதற்காக கடவுச்சீட்டு ரத்தான கனேடியர் வழக்கு தாக்கல்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 04:13.04 PM GMT ]
இலங்கையில் இருந்து தமது சகோதரி தப்பிச் செல்வதற்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி உதவிய குற்றத்துக்காக தமது கடவுச்சீட்டு ரத்துச் செய்யப்பட்டமையை எதிர்த்து கனேடிய பிரஜை ஒருவர் மேன்முறையீடு செய்துள்ளார்.
கல்கரி ஹெரால்ட் என்ற செய்தித்தாள் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையின் டச்சு பறங்கியர் இனத்தை சேர்ந்த குறித்த கனேடிய பிரஜை தற்போது வடகிழக்கு கல்கரியில் வசித்து வருகிறார்.
2013 ஆம் ஆண்டு தமது சகோதரியை இலங்கையில் இருந்து கனடாவுக்கு வரவைப்பதற்காக போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு ஜப்பானில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவருடைய கடவுச்சீட்டு ரத்துச் செய்யப்பட்டது.
இந்தநிலையில் அதனை எதிர்த்து குறித்த கனேடியர் வழக்கை தாக்கல் செய்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது குறித்த கனேடியரின் குடும்பம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து 2000ஆம் ஆண்டு குறித்த கனேடியர் (பறங்கியர்) முதலில் இலங்கையில் இருந்து துபாய்க்கு சென்று அங்கிருந்த கனடாவுக்கு சென்றார்.
இதன்பின்னர் அவருடைய பெற்றோரும் கனடாவுக்கு அகதிகளாக சென்றனர். எனினும் ஆசிரியையான சகோதரி மாத்திரம் இலங்கையில் தங்கியிருந்தார்.
அவரை ஜப்பான் ஊடாக கனடாவுக்கு வரவழைப்பதற்காக குறித்த கனேடியர், ஜப்பான் சென்றிருந்தபோது அவர் தடுக்கப்பட்டு மீண்டும் கனடாவுக்கு அனுப்பப்பட்டார்.
சகோதரி, கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்தநிலையில் குறித்த கனேடியரின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdery.html
Geen opmerkingen:
Een reactie posten