தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 augustus 2014

ராஜிதவிற்கு நஷ்ட ஈடா! ஐந்து சதமேனும் கொடுக்க மாட்டேன்!- ஞானசார தேரர்

2009 போரின் பின், வடஅயர்லாந்து பொலிஸாரின் ஏற்பாட்டில் இலங்கை- பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் சந்திப்பு- தெ காடியன்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 11:38.57 PM GMT ]
வட அயர்லாந்து பொலிஸார் 2009ம் ஆண்டு போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டவுடன் பிரித்தானிய அதிகாரிகளையும் இலங்கையின் இராணுவ ஆலோசகரையும் அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை இந்தக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை என்று தெ காடியன் தெரிவித்துள்ளது.
வட அயர்லாந்தின் பொலிஸ் சபை இந்த செய்தியை உறுதி செய்துள்ளது.
அயர்லாந்து அரசாங்கத்தின் சட்டத்தரணிகளின் தகவல்படி பெல்பெஸ்ட்டில் 2009ம் ஆண்டு ஜூன் 18ம் திகதியன்று இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் ஒத்துழைப்பு கண்காணிப்புக்குழு என்ற அமுக்கக்குழுவின் பிரதிநிதியான பில் மில்லர் என்பவர், இலங்கையில் போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு பிரித்தானியா கவலை கொள்கிறதா? அல்லது இலங்கையுடன் உறவு கொண்டிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே பெல்பெஸ்ட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
இதேவேளை பிரித்தானிய மனித உரிமைகள் குழுவின் பிரதிநிதி யஸ்மின் அஹ்மட், பெல்பெஸ்ட்டில் நடைபெற்ற கூட்டம் பற்றி பிரித்தானிய தகவல்களை வெளியிடவேண்டு;ம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdmp6.html
இலங்கையில் 2 லட்சம் பாடசாலை பிள்ளைகள் பெற்றோர் இன்றி வாழ்கின்றனர்!
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 12:10.21 AM GMT ]
இலங்கையில் சுமார் 2 லட்சத்து ஐயாயிரம் பாடசாலை சிறுவர்கள் பெற்றோர் இன்றி வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதார கல்வி பேரவையின் பணிப்பாளர் நீலாமணி ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள 4.1 மில்லியன் பாடசாலை சிறுவர்களுக்கு மத்தியிலேயே இந்த 2லட்சத்து ஐயாயிரம் பேர் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் திகதி வருவதை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நீலாமணி இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெரும்பாலான பெற்றோர் குறைந்த வருமானத்தை பெறுவதன் காரணமாக தமது பிள்ளைகளை பராமரிக்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmqy.html
ராஜிதவிற்கு நஷ்ட ஈடா! ஐந்து சதமேனும் கொடுக்க மாட்டேன்!- ஞானசார தேரர்
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 12:34.11 AM GMT ]
அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு ஐந்து சதமேனும் கொடுக்கப் போவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜித சேனாரட்ன நூறு கோடி ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தாலும், ஐந்து சதேனும் வழங்கப் போவதில்லை.
ராஜிதவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஆதாரங்கள் உண்டு.
பௌத்த சாசன அமைச்சு முக்கியமானது, செயற்திறன் மிக்க, 24 மணித்தியாலமும் கடமையாற்றக் கூடிய ஒருவரே பௌத்த சாசன அமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmq0.html

Geen opmerkingen:

Een reactie posten