தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 augustus 2014

புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் 2ம் நிலைத் தலைவருக்கு அவுஸ்திரேலியா புகலிடம்!

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஆதிவாசிகளின் தலைவர் அதிருப்தி
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 04:48.58 PM GMT ]
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அதிவாசிகளின் தலைவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சர்வதேச ஆதிவாசிகள் தினத்தை சுயாதீனமான முறையில் நடாத்த திட்டமிட்டுள்ளோம் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.
ஆதிவாசிகள் தினத்திற்காக அரசாங்கம் பாரியளவில் செலவிடுகின்றது.
இவ்வாறு நிகழ்வுகளை நடாத்த பணத்தை செலவிடாது, அந்தப் பணத்தை எங்கள் மக்களின் நலன்புரிக்காக ஒதுக்கீடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆதிவாசிகளின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய பணம் வழங்கப்பட்டுள்ளதாக கலாச்சார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இதுவரையில் தமக்கு பணம் கிடைக்கவில்லை என ஆதிவாசிகளின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdmp4.html
புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் 2ம் நிலைத் தலைவருக்கு அவுஸ்திரேலியா புகலிடம்!
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 11:30.27 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் இரண்டாம் நிலைத் தலைவருக்கு அவுஸ்திரேலியா அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது.
விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான இரண்டாம் நிலைத் தலைவர் ஸ்வர்ணராஜா பூர்ணராஜா என்பவரை மலேசிய அதிகாரிகள் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தத் தீர்மானித்திருந்தது.
எனினும், குறித்த புலிகளின் தலைவரை நாடு கடத்துவதற்கு அவுஸ்திரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஸ்வர்ணராஜாவிற்கு அவுஸ்திரேலியா அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பிலான புலனாய்வுத் தகவல்களை திரட்டும் பணியில் ஸ்வர்ணா ஈடுபட்டிருந்தார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஸ்வர்ணராஜாவை கைது செய்த மலேசிய அரசாங்கம், இலங்கையிடம் ஒப்படைக்க இணங்கியிருந்தது.
எனினும், அரசியல் புகலிடம் வழங்கிய ஒருவரை இலங்கைக்கு நாடு கடத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலியா,  மலேசியாவிற்கு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து ஸ்வர்ணராஜாவை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் சிறந்த உறவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdmp5.html

Geen opmerkingen:

Een reactie posten