தமிழீழ விடுதலைப் புலிகளை 72 மணித்தியாலங்களில் அழித்துவிட முடியும் என்று இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதி சுந்தர்ஜீ, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியிடம் உறுதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கேர்ணல் ஹரிகரன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா அமைதிகாக்கும் படையை அனுப்பி இருந்தமை தொடர்பில் தற்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கேர்ணல் ஹரிகரன், இலங்கைக்கு அமைதி காக்கும் படையினர் அனுப்பி வைக்கப்பட்டமையானதுஇ ராஜிவ் காந்தி உணர்ச்சிவசப்பட்டு மேற்கொண்ட தீர்மானம் என்று தெரிவித்துள்ளார்.
அவருடன் மற்றுமொரு உணர்ச்சிவசப்பட்டவரான இராணுவத் தளபதி சுந்தர்ஜீயும் இதற்கு ஒத்துழைத்துள்ளார். ஆனால் இந்த விடயத்தில் ஏனையோரின் அனுமதியையோ, ஆலோசனையையோ கேட்பதற்கு ராஜிவ் காந்திக்கு நேரம் இருக்கவில்லை.
அத்துடன் இலங்கையின் கள நிரவரங்கள் குறித்து எதனையுமே அறியாத இராணுவத் தளபதி சுந்தர்ஜீ, அமைதிகாக்கும் படையை அனுப்பி 72 மணித்தியாலத்தில் புலிகளை அழித்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார். முறையாக ஆராயப்படாத இந்த அவசர தீர்மானத்தின் விளைவையே வடக்கில் இந்திய அமைதிகாக்கும் படையினர் எதிர்நோக்கியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78418.html
Geen opmerkingen:
Een reactie posten