தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 augustus 2014

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

கிழக்கு முதல்வர் தமிழ் மக்களுக்கு புறக்கணிப்பை மாத்திரமே பரிசாக வழங்கியுள்ளார்: பிரசன்னா இந்திரகுமார்
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 06:22.15 AM GMT ]
எமது நாட்டில் முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழ் மக்களுடன் சேர்த்து முஸ்லிம் மக்களையும் ஏமாற்றியதாகவே வரலாறுகள் காணப்படுகின்றன. அவர்கள் காலத்திற்கு காலம் கூறி வருகின்ற வார்த்தைகள் எல்லாம் நீர் மேல் எழுதிய எழுத்துப் போலவே இருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அமிர்தகழியில் ஞயிற்றுக்கிழமை இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் இருக்கும் முஸ்லிம் இனவாத அரசியல் வாதிகள் தங்கள் வாக்கு இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த அரசியல் மேடையில் எத்தகு நாடகங்களைப் போடுகின்றார்கள் என்று.
இந்நாட்டில் இருக்கும் முஸ்லிம் இனவாத அரசியல் தலைவர்கள் எமது வடகிழக்கு மண்ணைப் பிரித்து இந்த அரசாங்கத்துடன் சேர்ந்து வடக்கிற்கு என்று தனியாகவும் கிழக்கிற்கு என்று தனியாகவும் மாகாண சபைகளை அமைத்து இன்று கிழக்கு மாகாண சபையிலும், மாகாண அமைச்சுக்களிலும் கூடியளவு முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கத்தக்கதாகவும், தமிழ் மக்களை நாம் கைவிடமாட்டோம் அனைத்து மக்களுக்கும் ஒரே விதமான பாரபட்சமில்லாத ஆட்சியினை மேற்கொள்வோம் என்று கூறிக்கொண்டே இதுவரை எமது மக்களுக்கு புறக்கணிப்பினை மாத்திரமே பரிசாக வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
தங்களின் அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம் மக்களை ஏமாற்றி தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்பி ஆட்சியில் அமர்ந்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு மற்றும் ஏனைய பிரதிநிதித்துவங்களை அவர்களுக்கு கொடுக்க மறுத்து தமிழர்களை புறக்கணித்து தங்கள் அரசியல் நோக்கத்திற்காக முஸ்லிம் சமுகத்தினருக்கு அதிகளவான வேலைவாய்ப்புகளை கொடுத்து எமது தமிழ் சமூகத்தினரை ஓரம் கட்டுகின்றனர்.
அண்மையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் தெரிவித்தார், இந்த மாகாணம் மூவின மக்களும் வாழுகின்ற மாகாணம் இங்கு தமிழ் இனத்தைச் சேர்ந்தவரும் ஆளலாம், முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவரும் ஆளலாம், சிங்கள இனத்தைச் சேர்ந்தவரும் ஆளலாம். இங்கு பிரிவினை என்பது இல்லை. பாரபட்சம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். இவ்வாறு நுனி நாக்கில் சமத்துவத்தைப் பேசிவிட்டு பின்னர் இவர்கள் எமது மக்களுக்கு புறக்கணிப்பினை மாத்திரமே பரிசாக வழங்குகின்றனர்.
வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகம் இதனைப் பிரித்தாலும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியை நடாத்தும் இவ்வாறான இனவாத முஸ்லிம் அரசியல்வாதிகள் எமது தமிழ் மக்களை பசப்பு வார்த்தைகள் கூறி ஏமாற்ற நினைக்கின்றார்கள்.
முன்பு வட கிழக்கு மாகாண சபை இருந்த போது கல்வித் திறன், இன விகிதாசாரம் என்பவற்றின் அடிப்படையிலேயே அந்தந்த சமூகங்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.
ஆனால் இன்று சமப்படுத்தல் எனும் பெயரில் இன விகிதாசாரமும் இல்லை, கல்வித் திறனும் இல்லை வெறுமனே தமிழ் மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு சகோதர இனத்தவர்களுக்கே தொழில் வாய்ப்புகள் அதிகம் வழங்கப்படுகின்றன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் எமது கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருந்தார், இந்த கிழக்கு மாகாண சபையில் தமிழ் அமைச்சர் இல்லாத ஒரு குறையை நிவர்த்தி செய்யும் அளவிற்கு தான் தமிழ் மக்களுக்கான சேவையை மேற்கொள்வேன் என்றார். ஆனால் தமிழர்களின் வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு இடம்பெறும் போது முதலமைச்சர் கூட மௌனம் சாதித்தவராகவே இருந்தார். இவ்வாறு தான் காலத்திற்கு காலம் இனவாத முஸ்லிம் அரசியல் வாதிகளால் விடுக்கப்படுகின்ற வார்த்தைகள் அனைத்துமே நீர் மேல் எழுதப்பட்ட எழுத்துக்களாகவே இருந்து வருகின்றன.
எனவே எமது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் அரசியல் நோக்கத்திற்காக வருபவர்கள் பலவற்றைக் கூறுவார்கள் அதனால் நாம் எமது தாயக உணர்வை இழந்து அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பிவிடக் கூடாது. எமது சமுகத்தின் இனத்தின் தற்கால நிலைமை குறித்து ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் அப்போது தான் எமது இனத்திற்கான விடிவுப் பாதையை நாம் அடைய முடியும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceo3.html
பெண்கள் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும்: அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 06:31.52 AM GMT ]
நாட்டுக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச சதித்திட்டங்களை தோற்கடித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த பெண்கள் ஒரு சக்தியாக அணிதிரண்டு வருவதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
எகலியகொட நகரில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள அனைத்து பெண்களின் கைகளிலும் நாட்டின் உண்மையான தேசிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
30 வருடங்களாக இருந்து வந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் சந்தர்ப்பத்தில், நாட்டை மீண்டும் பின்நோக்கி நகர்த்த தேசிய மற்றும் சர்வதேச சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
இலங்கை பெண்கள் இந்த சதித்திட்டங்களுக்கு எதிராக முன்னோக்கி வருகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் தேசத்தை காப்பற்றி கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்துவது பெண்கள் கடமையாகும்.
2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை கடலிலும், நான்கில் மூன்று பகுதியை விடுதலைப் புலிகளுக்கும் எழுதி கொடுத்தார்.
அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே மாற்றி அமைத்தார் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceo4.html
வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 07:51.25 AM GMT ]
மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு அரச சேவைகள் ஆணைக்குழுவினாலேயே உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் எனவும் மாகாண முதலமைச்சருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
வடக்கு மாகாண முதமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தனது அடிப்படை உரிமையை மீறியதாக குற்றம் சுமத்தி, அந்த மாகாணத்தின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே. ஸ்ரீபவன், ரோஹித்த மாரசிங்க ஆகிய நீதியரசர்கள் அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
முதலமைச்சர் வெளியிட்ட சட்ட கோவை காரணமாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக பிரதம செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
எனினும் அந்த சட்ட கோவையை முதலமைச்சர் திரும்ப பெற்றுள்ளதன் காரணமாக அதில் உள்ளடங்கியுள்ள விடயங்களின் அடிப்படையில் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்க முடியாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் முன்னெடுக்க இருதரப்பும் நல்லுறவுடன் செயற்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முதலமைச்சர் சார்பில் ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், மாகாண அரச சேவை தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனை தவிர இந்த அடிப்படை உரிமை மனுவை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுப்பதில்லை எனவும் உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceo5.html

Geen opmerkingen:

Een reactie posten