தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 augustus 2014

வத்தளை இளைஞரின் சடலம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் வைத்து மீட்பு !

வைரவபுளியங்குளத்தில் உள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் இருந்து, இளைஞர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு வத்தளையைச் சேர்ந்த எஸ்.சரவணன் என்ற 29 வயதுடைய இளைஞரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இம் மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வத்தளையைச் சேர்ந்த இளைஞர் ஏன் வவுனியா வரவேண்டும் என்றும், இவர் உடல் ஏன் மொட்டைமாடியில் இருந்தது என்றும் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை எனப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளதாக அதிர்வின் வவுனியா நிருபர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பிரேதத்தை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ள பொலிசார், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் விசாரணைகளையும் நடத்தி வருகிறார்கள். இளைஞர் இறந்துகிடந்த வீட்டில் அந்தவேளை யாரும் இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முடிக்கிவிட்டுள்ளார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten