தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 augustus 2014

புலம்பெயர் அமைப்புக்களின் போலிப் பிரச்சாரத்தை முறியடிக்க நடவடிக்கை!

புலி ஆதரவு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் போலிப் பிரச்சாரத்தை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை பற்றிய சரியான தகவல்களை உலகிற்கு முன்வைக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்கா மக்கள் தொடர்பு நிறுவனங்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய வங்கி தகவல்களை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து அமெரிக்கத் தலைவர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் தெளிவுபடுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும்  போலிப் பிரசாரங்களை முறியடிக்கும் வெளிவிவகார அமைச்சின் முயற்சிக்கு மத்திய வங்கி உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான நாடுகளுக்கும், சர்வதேச நிறுவனங்களுக்கும் இவ்வாறு இலங்கை பற்றி தெளிவுபடுத்தும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போரின் பின்னர் முதலீடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் பிழையான தகவல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருவதாக மத்திய வங்கி குற்றம் சுமத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdep7.html

Geen opmerkingen:

Een reactie posten