தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 augustus 2014

கொழும்பில் தந்தைக்கு எமனாக வந்த பேஸ்புக்!

புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின், நீதிமன்ற வளாகத்திற்குள் கத்தி குத்துக்கு உள்ளான சம்பவம் குறித்து பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிமுகமான யுவதியை கடத்திச் சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி நிர்வாண புகைப்படங்களை எடுத்தாக கூறப்படும் இளைஞர் கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசித்து வரும் கொழும்பில் உள்ள தமிழ்ப் பெண்கள் பாடசாலையில் பயிலும் 17 வயதான யுவதி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை சம்பந்தமாக கடந்த 19 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாடு தொடர்பில் மொறட்டுவ பிரதேசத்தில் வசித்து வரும் ஏ. நிரோஷன் என்ற 25 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டு கொழும்பு இலக்கம் 3 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபருக்கு நீதிமன்றம் இன்று காலை பிணை வழங்கியது.
பிணை வழங்கிய பின், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் போது, யுவதியின் தந்தையான 51 வயதான முத்தையா செல்வராஜ் என்பவர், இளைஞனின் தந்தையான 61 வயதான பீ.ஏ. ஜெயசீலன் என்பவரையும் இளைஞரையும் அவரது தங்கையான 23 வயதான திலிஸா என்பரையும் கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தி குத்துக்கு உள்ளான மூன்று பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதில் இளைஞனின் தந்தை உயிரிழந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய முத்தையா செல்வராஜ் வாழைத் தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இளைஞனும், யுவதியும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளனர்.
யுவதியை கடத்திச் சென்று நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்துள்ள இளைஞர், அவற்றை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய போவதாக தொலைபேசியில் அச்சுறுத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdeq0.html

Geen opmerkingen:

Een reactie posten