தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 augustus 2014

நாய் குட்டிகள் விற்பனைக்கு என்று நிமல்காவின் படத்தை போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள சிங்களவர்கள் !

கொழும்பு புகையிரத நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நாய்க்குட்டிகள் விற்பனைக்கு என்ற சுவரொட்டிகள் புதன்கிழமை நள்ளிரவு முதல் காணப்படுவதுடன் நாய்க்குட்டிகளை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசிகள் என குறிப்பிட்டு மனித உரிமை பணியாளா நிமல்ஹா பெர்ணாண்டோவினதும் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனில் ஜெயசேகரவினதும் தொலைபேசி இலங்கங்களை இனந்தெரியாத நபர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது இருவரையும் அவமானப்படுத்தும் துன்புறுத்தம் நடவடிக்கையின் ஒரு பகுதி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து நிமால்கா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளதாவது,
இன்று காலை கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து அழைத்த ஒருவர் நாய்க்குட்டிகள் விற்பனைக்குள்ளதா என கேட்டார். நான் யாரோ தொலைபேசியில் தொல்லை கொடுக்கும் நபர் என நினைத்து நான் நாய் வியாபாரம் செய்யவில்லை என குறிப்பிட்டேன். அதன் பின்னர் அவர், குறிப்பிட்ட பகுதியில் நாய்க்குட்டிகள் விற்பனைக்குள்ளதாக சுவரொட்டிகள் காணப்படுவதாகவும் அதில் தான் அழைத்த தொலைபேசிகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார். நான் மீண்டும் அவரை தொலைபேசியில் அழைத்து அவருக்கு நாய் வேண்டுமா என கேட்டேன்-
அதற்கு அவர் தனது பெயர் இந்திரஜித் - சுற்றாடல் பொலிஸை சேர்ந்தவர் எனவும் தான் வேலைக்கு வந்ததிலிருந்து கொழும்பு புகையிரத நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நாய்க்குட்டிகள் விற்பனைக்கு என்ற சுவரொட்டிகளை காண்பதாகவும் அவை சூழலிற்கு மாசு விளைவிப்பது என்பதால் தொலைபேசியில் அழைத்ததாகவும் குறிப்பிட்டார். அவர் அந்த சுவரொட்டியில் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்- நான் மற்றையதை அழைத்த போது அது சுனில் ஜெயசேகரவினுடையது என அறிந்துகொண்டேன் என குறிப்பிட்டார். வழமையாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் கொழும்பு புகையிரத நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலேயே இந்த சுவரொட்டிகளை காண முடிகிறது, இது குறித்து பொலிஸ்மா அதிபரிடம் முறையிடப்போகிறேன் என அவர் தெரிவித்தார்.
சுனில் ஜெயசேகரவும் தனக்கும் இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் தெரிவித்துள்ளதுடன் இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்- எங்களை துன்புறுத்துவதும் அல்லது நாய் வியாபாரிகள் என வர்ணிப்பது கூட நோக்கமாக இருக்கலாம் குறிப்பிட்ட பகுதியில் பொலிஸாருக்கு தெரியாமல் சுவரொட்டிகள் ஒட்டமுடியாது, ராஜபக்ச அரசின் கீழ் சுவரொட்டிகள் ஓட்டப்படுவது உண்ணிப்பாக அவதானிக்கப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/707.html

Geen opmerkingen:

Een reactie posten