தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 augustus 2014

ஐ.நா விசாரணைக்குழு முன் நேரில் பார்த்த சாட்சியாளர்கள் சாட்சியமளிக்கவுள்ளனர்!

கச்சதீவு நோக்கி புறப்பட்ட 300 பேர் கைது- பிணை வழங்கிய நீதவானுக்கு எதிராக விசாரணை
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 06:30.36 AM GMT ]
இலங்கை சிறையில் உள்ள 94 மீனவர்களையும் 62 விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேர்க்கோடு கிறிஸ்தவ ஆலயம் முன்பு இருந்து மீனவர்கள் ஊர்வலமாக புறப்பட்டுள்ளனர்.
மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், தேவதாஸ், சேசு, எமரிட், ராமகிருஷ்ணா குடில்சாமி பிரணவானந்தா, பங்கு தந்தை சகாயராஜ் ஆகியோர் தலைமையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.
கச்சதீவுக்குள் அத்துமீறி நுழைந்தால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று என இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்.
பேரணி ஆரம்பமாகி சிறிது நேரத்தில் இராமேஸ்வரம் பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தி சுமார் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் இராமேஸ்வரம் பகுதியில் பதட்டம் .நிலவி வருவதனால் பாதுகாப்புக்காக அங்கு பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் விற்பனையாளருக்கு பிணை வழங்கிய நீதவானுக்கு எதிராக விசாரணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையார் ஒருவருக்கு பிணை வழங்கிய நீதவான் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதவான் எவ்வாறு ஹெரோயின் விற்பனையாருக்கு பிணை வழங்கினார் என்பது குறித்தே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்படும் சந்தேக நபருக்கு பிணை வழங்குவது குறித்து மேல் நீதிமன்ற நீதிபதிக்கு மாத்திரமே ஆராய்ந்து பார்க்க முடியும்.
இவ்வாறான நிலையில், சந்தேக நபருக்கு பிணை வழங்கும் அதிகாரத்தை முன்னாள் நீதவான் எப்படி பெற்றுக் கொண்டார் என்பதை கண்டறிய நீதி சேவைகள் ஆணைக்குழு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மாலினி குணரத்ன நியமித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய நீதி சேவைகள் ஆணைக்குழு செய்த முறைப்பாட்டை அடுத்தே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfo6.html
ஐ.நா விசாரணைக்குழு முன் நேரில் பார்த்த சாட்சியாளர்கள் சாட்சியமளிக்கவுள்ளனர்
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 06:32.55 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் சர்வதேச விசாரணைக்குழுவின் முன் நேரில் கண்ட சாட்சியாளர்கள் சிலர் சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரியவருகிறது.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை நேரில் பார்த்த சாட்சியாளர்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விசாரணையாளர்கள் முன் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் விசாரணைக்குழுவிற்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தவிர நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை விசாரணைக்குழுவிடம் வழங்கியுள்ளது.
அதேவேளை விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ள நேரில் பார்த்த சாட்சியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பிரதமர் உருத்திரகுமாரன் ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfo7.html

Geen opmerkingen:

Een reactie posten