[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 03:13.16 PM GMT ]
எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலின் பின் ஆளுங்கட்சியிலிருந்து விலகி, எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்றுவது தொடர்பில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இரகசிய செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பான இரகசிய தகவல்கள் உளவுத்துறை மூலம் ஜனாதிபதிக்கு கிட்டியுள்ளதாக வார இறுதி சிங்களப் பத்திரிகைகளான லக்பிம, திவயின போன்றவை முக்கிய செய்திகளாக வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தமது அணிமாறல் தொடர்பில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இரகசியமாக சந்தித்துக் கலந்துரையாடிய விடயம் ஜனாதிபதியை கடுப்பேற்றியுள்ளது.
இதனையடுத்து இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களிடமும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இரண்டு அமைச்சர்களையும் அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஜனாதிபதி காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் இதுபோன்றதொரு நாடகமொன்றை அமைச்சர் விமல் வீரவன்ச அரங்கேற்றியிருந்தார். அப்போது அவருடைய கட்சியுடன் ஐ.தே.க. சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த மையோன் முஸ்தபா எம்.பி.யை லஞ்சக் குற்றச்சாட்டிலும் சிக்க வைத்திருந்தார்.
இதன் காரணமாக இம்முறை அமைச்சர் விமலின் விடயத்தில் ஐ.தே.க. வெகு எச்சரிக்கையுடன் அணுகும் முடிவில் இருப்பதாக சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfrz.html
தமிழ் மொழியை புறக்கணித்த கல்வி அமைச்சு
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 03:40.40 PM GMT ]
2014 புலமைப் பரிசில் பரீட்சைக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள், விடைகள் மற்றும்
சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட இவ்வெளியீட்டின் தமிழாக்கத்தில் 2005-2013 வரையான வினாத்தாள்களும் விடைகளும் மாத்திரமே உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. எதிர்பார்க்கப்படும் வினாக்களின் தொகுப்பு தமிழ் மொழிப்பதிப்பில் இடம்பெற்றிருக்கவில்லை.
இதுகுறித்து கல்வி அமைச்சின் வெளியீட்டுப் பகுதியைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, மொழிபெயர்ப்பிற்கான வசதிகள் இன்மை காரணமாக அவற்றை மொழிபெயர்க்கவில்லை எனவும் பாடசாலைகள் தோறும் குறித்த சிங்கள மொழிமூல வினாத்தாள்களை மொழிபெயர்ப்பு செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது ஒரு பாரிய மொழி ரீதியான பாரபட்சத்தை எடுத்துக்காட்டும் விடயமாகும்.
மேற்படி விடயம் தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, வடக்கு - கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்களுக்கும், மத்திய அரசின் கல்வி அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், உடனடியாக தமிழ் மொழிபெயர்ப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் கிடைக்கச்செய்வது கல்வி அமைச்சின் பொறுப்பாகும் எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இதுதொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfr0.html
Geen opmerkingen:
Een reactie posten