குறித்த 4 பேரும் கைதானவுடன் ஏனையர்கள் பலர் தலைமறைவாகிவிட்டார்கள் என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். ஓங்கோல் கடற்கரையில் இருந்து செல்லும் சிறிய படகில், உள்ள ஈழத் தமிழர்களை பாரிய சரக்கு கப்பலில் ஏற்றி பின்னர் அக்கப்பலில் உள்ள கண்டேய்னர்களில் அவர்கள் அடைக்கப்படுவதாகவும். பின்னர் நாள் கணக்கில் அதனுள் அவர்கள் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்த பொலிசார் இறுதியாக அது அவுஸ்திரேலியா செல்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள். ஈழத் தமிழ் அகதிகள் பலர், படகுகளில் ஏறி அவுஸ்திரேலியா சென்றார்கள். அவர்களில் பலரை கடற்படையினர் பிடித்துவிடுவது வழக்கம். ஆனால் இப்படிச் சென்றால், அது நேரடியாக அவுஸ்திரேலிய துறைமுகத்திற்கு உள்ளே சென்றுவிடும் அல்லவா ?
இதனால் ஆபத்தான இப் பயணத்தை ஈழத் தமிழர்கள் மேற்கொண்டுள்ளார்கள். இதுபோக ஆந்திராவில் பெரிய ஒரு கும்பல் இத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளது. சென்னையில் இருந்து ஆந்திரா கொண்டுசெல்வதும், அங்கே சிறிய படகுகளை அரேஞ்செவது முதல், பாரிய சரக்கு கப்பலை இதற்காக தயார் செய்வது முதல் பல நெட்வேர்க் இவர்களுக்கு இருந்துள்ளது. பொதுவாக சர்வதேச சரக்கு கப்பலே இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மேலும் அறியப்படுகிறது. இவ்வளவு தூரம் இந்த ஆள் கடத்தல் நெட்வேர்க் ஆழமாக இருந்துள்ளது. ஈழத் தமிழர்களை வைத்து எவர் எவர் எல்லாம் பிழைப்பை நடத்துகிறார்கள் !
http://www.athirvu.com/newsdetail/864.html
Geen opmerkingen:
Een reactie posten