தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 augustus 2014

வடகொரியா, சிரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளது: நியூயோர்க் டைம்ஸ் சாடல்!

யாழ்ப்பாணம் சென்று திரும்பிய வாகனம் விபத்து: 2 பேர் பலி - 7 பேர் காயம்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 01:40.18 AM GMT ]
யாழ்ப்பாணம் சென்று திரும்பிக்கொண்டிருந்த வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளனர். 
குறித்த வாகனம் மீது பின்னால் வந்த கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த வாகனம் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கையில், நீர்கொழும்பு மாபாகே பகுதியில் வைத்து பின்னால் வந்த கனரக வாகனத்தில் மோதுண்டுள்ளதால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdfw6.html
வடகொரியா, சிரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளது: நியூயோர்க் டைம்ஸ் சாடல்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 01:49.03 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்காமையின் அடிப்படையில், வடகொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
“நெகிழ்வு தன்மையன்ற இலங்கை” என்ற தலைப்பின் கீழ் நியூயோர்க் டைம்ஸ் ஆசிரியர் தலையங்கத்தில் இந்த விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்காமை காரணமாக இலங்கை, சிரியா மற்றும் வடகொரியா ஆகியவற்றின் வகுதிக்குள் வந்துள்ளது.
ஏற்கனவே இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்ட உள்ளுர் விசாரணை தோல்வி கண்டுள்ளதாக ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் போர்க்குற்ற விசாரணைகளின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத போது அந்த விசாரணைகளில் பொறுப்புக்கூறலை எதிர்ப்பார்க்க முடியாது. 
இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவின் உள்ளுர் விசாரணைகள் உண்மை நோக்கை கொண்டிருந்தால், நல்லிணக்கம், நீதி மற்றும் உண்மை என்ற எதிர்ப்பார்ப்பு இருக்குமானால் அவர் ஐக்கிய நாடுகளின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இந்த தன்மைகள் இல்லாத நிலையிலேயே சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன என்று நியூயோர்க் டைம்ஸ் ஆசிரியர்பீடம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdfw7.html

Geen opmerkingen:

Een reactie posten