தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 augustus 2014

இலங்கை தமிழர்கள் தமக்கென்று வெளியுறவுக்கொள்கை ஒன்றை வகுக்கவேண்டும்!- கஜேந்திரகுமார்!

ஹக்கீம் ஒபெக் நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்தமைக்கு அரசாங்கம் எதிர்ப்பு!
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 12:35.25 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், எரிபொருள் ஏற்றுமதியில் ஈடுபடும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் அமைப்பான ஒபெக்கின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் ஒபெக் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அரசாங்கத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
ஒபெக் நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் தனியான உறவுகளை பேணி வருகின்றது.
இவ்வாறான ஓர் நிலையில் ஒபெக்கின் பிரதிநிதிகளுடன், முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பு நடத்தியமைக்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
குறித்த அமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியமை குறித்து அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னரும் மத்திய கிழக்கு நாடுகளின் அமைப்பு ஒன்றுடன் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.
ஒபெக் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸுடன் நெருங்கிச் செயற்படும் வர்த்தகர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdfw3.html
ஜனாதிபதியின் சொந்த ஊரில் 2015 சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்தத் தீர்மானம்!
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 12:52.38 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சொந்த ஊரில் 2015ம் வருட தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி அம்பாந்தோட்டை, வீரகெட்டிய என்னும் இடத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.
வீரகெட்டியவில் சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்த அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதற்காக பிரதமர் டி.எம். ஜயரட்ன தலைமையிலான 12 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் சமால் ராஜபக்ச, அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஜோன் செனவிரட்ன, கெஹலிய ரம்புக்வெல்ல,  டி.பி. ஏக்கநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
30000 பேரின் பங்களிப்புடன் சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdfw4.html
இலங்கை தமிழர்கள் தமக்கென்று வெளியுறவுக்கொள்கை ஒன்றை வகுக்கவேண்டும்!- கஜேந்திரகுமார்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 12:57.05 AM GMT ]
இலங்கையின் அதிகாரங்களுக்கும் ஆட்சிகளுக்கும் உட்பட்ட தமிழர்கள் தமக்கென்று ஒரு வெளியுறவுக்கொள்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள அவர், நாடு ஒன்றை கொண்டிருக்காத போதும் ஒரு தேசியம் என்ற அடிப்படையில் வெளியுறவு கொள்கை ஒன்றை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக அரசியல் நிலை மாறிவருகின்ற நிலையில் தமிழகத்துடன் இலங்கை தமிழர்கள் ஒத்துழைப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
இந்தியாவை பொறுத்தவரை காங்கிரஸை விட பாரதீய ஜனதாக்கட்சிää தேசியத்துவத்துடன் கூடிய வகையில் தமிழர் பிரச்சினையை பார்க்கிறது என்றும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமிழ்நாட்டு அரசாங்கத்துடனும் தமிழக மக்களுடனும் ஒத்துழைப்புகளை இலங்கை தமிழர்கள் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று கஜேந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdfw5.html

Geen opmerkingen:

Een reactie posten