தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 augustus 2014

மொரிசன் தமது பிள்ளைகளை முகாம்களில் அடைப்பாரா?- அகதி அமைப்பு சீற்றம்!

அமைச்சர் மொரிசன் தனது பிள்ளைகளாக இருந்தால் இது போன்று மனிதாபிமானமற்ற முறையில் நடந்து இருப்பாரா என அகதிகள் அமைப்பு ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
கப்பலிலும், தடுப்பு முகாமிலும் [சிறை] சிறுவர்கள் படும் துன்பகரமான படங்கள் நாளுக்கு நாள் வெளியாகிய வண்ணம் உள்ள நிலையில், அந்த அமைப்பு மிகவும் கடுமையான தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
சிறுவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள், சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்களை சிறைக்கூடத்தில் வைத்து அரசியல் நடத்தும் இந்த அபொட் அரசாங்கம் மிகவும் பாரிய மனித உரிமை மீறலை செய்து வருகின்றது.
இதுவே தமது பிள்ளைகளாக இருந்தால் இப்படி அடைத்து வைத்து அரசியல் நடத்துவார்களா என்று மிகவும் கடுமையான தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள 75% மான மக்கள் படகில் வந்தவர்கள்தான், எதற்காக சிறுவர்களின் எதிர்காலத்தில் இந்த அரசாங்கம் அரசியல் நடத்துகிறது என்பது மிகவும் வியப்பாக உள்ளது என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdfxy.html

Geen opmerkingen:

Een reactie posten