100 வருடங்களுக்கு பழமை வாய்ந்ததாக நம்பப்படும் புரதான வாள் ஒன்றினை விற்பனை செய்ய முயன்ற 3 சந்தேக நபர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
மஸ்கெலியா பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு வீடு ஒன்றில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாக நம்பப்படும் புரதான வாள் ஒன்றினை (வெள்ளி மற்றும் பித்தளையாலும் கலந்து செய்யப்பட்ட வாள்) சுமார் 36 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்படுகையில் குறித்த சந்தேக நபர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சந்தேக நபர்களை நேற்று ஹட்டன் பொலிஸாரால் இரவு 7 மணியளவில் ஹட்டன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குறித்த வாளினை விற்பனை செய்யப் போவதாக இரகசிய தகவலை அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவில் ஆடையில் அவர்களுடன் வியாபாரி ஒருவரை போல குறித்த இடத்திற்கு சென்று பேரம்பேசி வாளினை கொள்வனவு செய்வது போல நடித்து மேற்படி சந்தேக நபர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் டிக்கோயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்களையும் தோண்டி எடுக்கப்பட்ட வாளினையும் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கு கிழக்கு மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்!– சுவாமிநாதன்
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக தங்களது காணிகளில் வசிக்காதவர்கள் எவ்வாறு ஆவணங்களை திரட்டிக்கொள்வார்கள்.
இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை மக்கள் மீளப் பெற்றுககொள்வதற்கான வழிமுறைகள் என்ன?
போர் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீளவும் நாடு திரும்பி, ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளும் போது ஏற்படக் கூடிய சிக்கல் நிலைமைகள் என்ன என்பது தெரியவில்லை.
காணிகளை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானதல்ல.
12 மாத காலப் பகுதிக்குள் ஆவணங்களைத்திரட்டி விண்ணப்பிக்க முடியாது.
உயிரைப் பாதுகாத்துக் கொள்ள சொத்துக்களை கைவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் மீள நாடு திரும்பி ஆவணங்களை திரட்டிக் கொள்ள போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என சுவாமிவாதன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ஊவாவில் வறுமையை ஒழிக்க கரு ஜெயசூரிய தலைமையில் குழு
ஊவா மாகாணசபை தேர்தல் பிரசாரங்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் தலைமைக்குழு தலைவர் கரு ஜயசூரியவின் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்தக்குழு குறித்த பிரசாரங்களை கண்காணிக்கும் பொறுப்பை கொண்டிருக்கும்.
இந்தக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவும் அடங்கியுள்ளார்.
இந்தக்குழு தேர்தல் பிரசாரம் மற்றும் அது தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கிறது.
ஊவாவில் இருந்து வறுமையை ஒழிப்போம் என்ற தலைப்பில் என்ற தொனிப்பொருளில் இந்த பிரசாரம் எதிர்வரும் 16 ம் திகதி முதல் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்; முன்னெடுக்கப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnv2.html
Geen opmerkingen:
Een reactie posten