தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 augustus 2014

அடைக்கலம் பெற்ற பாகிஸ்தானியர்கள் தொடர்பான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

பெண்கள் யாவரும் ஆண்களாக மறுபிறவி எடுக்கவேண்டும்: மைத்திரிபால மீது கடுப்பாகிய ரோசி
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 01:20.08 PM GMT ]
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் பொலநறுவையில் வெளியிட்ட கருத்து அமைச்சர் ஒருவருக்குரிய பொறுப்பான கருத்தாக கருதமுடியாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெண்கள் மாநாடு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் பெண்கள் யாவரும் ஆண்களாக மறுபிறவி எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அமைச்சரின் இந்தக்கருத்து அதிர்ச்சியளிப்பதாக ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்தக்கருத்து பெண்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆற்றி வரும் சேவைக்கு இழுக்கை ஏற்படுத்தும் கருத்தாகவே கருதப்படவேண்டும்.
நாட்டின் வருமானத்தில் பெண்களே இன்று பிரதான இடத்தை வகிக்கின்றனர்.
இந்தநிலையில் அமைச்சரின் கருத்து பாலியல் ரீதியான கருத்தாகவே கருதப்படவேண்டும்.
இதனை ஏன் குறித்த கூட்டத்தில் இருந்த பெண்கள் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் இல்லாது போனால் ஆண்கள் பிறந்திருக்கமாட்டார்கள் என்பது அமைச்சருக்கு தெரியாமல் போயுள்ளது என்றும் ரோசி சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அமைச்சர் இந்த கருத்து தொடர்பில் தமது மன்னிப்பை கேட்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmt6.html
கசினோ வர்த்தகரை செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: ரெயில்வே தொழிற்சங்கங்கள்
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 01:33.52 PM GMT ]
கசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ரெயில்வே தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
ரெயில்வே ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்குவதாக உறுதியளித்த செயலாளர், இதுவரை தீர்வு   நிறைவேற்றப்படவில்லை.  தம்மிக்க பெரேராவின் சேவை அமைச்சுக்கு தேவையில்லை என  தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிற்சங்கத்தினர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஒருநாள் கூட ஊடகங்களுக்கு முன்னால் வருவதில்லை.
அமைச்சு சம்பந்தமான விடயங்களை குறித்து அறிய செயலாளரை தொடர்பு கொள்ளவும் முடிவதில்லை என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, தனது செயலாளர் இலங்கையில் உள்ள மிகப் பெரிய கோடிஸ்வரன் எனவும் அது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmuy.html
அடைக்கலம் பெற்ற பாகிஸ்தானியர்கள் தொடர்பான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 01:35.41 PM GMT ]
இலங்கையில் அடைக்கலம் பெற்றுள்ள 200 பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை அனுமதியுடன், இந்த அகதிகள் இலங்கையில் அடைக்கலம் பெற்றுள்ளனா். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களில் பலரை இலங்கை அரசாங்கம் திருப்பி அனுப்பியுள்ளது.
எனினும் அடைக்கலம் பெற்றுள்ள பாகிஸ்தானிய கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா மற்றும் அஹமதி பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதை அனைத்து தரப்புக்களும் உறுதி செய்துள்ளன.
எனவே அவர்களை நாட்டுக்கு திருப்பிய அனுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மனுதாரர்களின் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்தே விசாரணையை உயர்நீதிமன்றம் 26ஆம் திகதிக்கு பரிந்துரைத்துள்ளது.
மனுதாரர் தரப்பில் சட்டத்தரணிகளான நிமல்கா பெர்ணான்டோ, மரியாஸ் ருக்ஸான், மாரிமுத்து சத்திவேலு உட்பட்ட ஆறு பேர் ஆஜராகினர்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmuz.html

Geen opmerkingen:

Een reactie posten