தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 augustus 2014

இலங்கையிடம் ஆஸி. ஒப்படைத்த தமிழர் மீது கடும் சித்திரவதையாம்!

தற்கொலைகளுக்கு ஊடகங்களே காரணமாம்! மகிந்தரின் புதிய கண்டுபிடிப்பு

சிறுவர்கள் இந்த நாட்டின் எதிர்காலம். அவர்கள் விடயத்தில் நாம் உணர்வு பூர்வமாக நடந்துகொள்ள வேண்டும். சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பில் ஊடகங்கள் வெளியிடும் செய்தியும் அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவமும் தற்கொலை செய்பவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக தன்னைச் சந்தித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நில்வள கங்கையில் சிறுமியொருத்தி தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னர் அந்தப் பகுதியில் இதுபோன்ற 5 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இவைகள் தூண்டுதல்களால் அல்லது ஊக்கப்படுத்தல்களால் நடந்திருப்பதாகவே தெரிகிறது.


தற்கொலைகள் எப்போதும் சடுதியாகத் தீர்மானிக்கப்படுபவை. ஏதாவது தூண்டல்கள் இருந்தால் தற்கொலைக்கு வழிகாட்டுவதாக அமைந்துவிடும். இவ்வாறு தொடர்ந்தால் இது பழக்க மாகிவிடும். சின்னவிடயங்கள் கூட தற்கொலைக்கு முயற்சிக்கலாம். ஆகவே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Maginta-Medeja
http://www.jvpnews.com/srilanka/78737.html

மஹிந்தவை மதிக்க வேண்டும்! அடிவாங்கி சுனையில்லாத ரிஷாத்! விக்கிக்கு கருத்து

இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண மக்களால் புறக்கணிக்கப்பட்ட மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த வட மாகாண சபைக்கு எவ்வித கடப்பாடும் இல்லை என்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கூற்று தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் வடக்கு முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அதில் உரையாற்றும்போது மேலும் தெரிவித்தவை வருமாறு:- வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றிய பொழுது அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டார்.
அதனை வரவேற்கின்றேன். எனினும், அத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்தியே செய்ய வேண்டியுள்ளது. வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது கணிசமான அளவு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அமோக வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள். இதனை கௌரவிக்கின்றோம்; இந்த மக்கள் ஆணையை மதிக்கின்றோம்.
அதேபோன்றுதான், மஹிந்த சிந்தனையை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நாடு பூராகவுள்ள மூவின மக்களில் அதி பெரும்பான்மையானோர் வாக்களித்து ஆணை வழங்கியுள்ளார்கள். அதாவது மஹிந்த சிந்தனையை இந்த மக்கள் ஏற்றுள்ளார்கள். இதனையும் நாம் மதிக்க வேண்டும்; கௌரவிக்கவேண்டும். வன்னி மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக தான் செயற்படுவது தொடர்பாக முதலமைச்சர் இங்கு கருத்து வெளியிட்டார்.
நாடு பூராகவுமுள்ள பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களாக எம்.பிக்களும் அமைச்சர்களுமே உள்ளனர். எனினும், வன்னி மாவட்டத்தின் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு இணைத் தலைவர்களாக வடக்கின் மாகாண அமைச்சர்களையும் வடக்கின் ஏனைய எம்.பிக்களையும் நியமனம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் நீங்கள் கோரிக்கை முன்வைத்து அதனை ஜனாதிபதி அமுல்படுத்தினால் நிச்சயமாக அதனையும் சந்தேசமாகவும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளேன். வன்னி மாவட்ட மக்களின் சுபீட்சமான வாழ்வும் மாவட்டத்தின் அபிவிருத்தியுமே எனது இலக்கு.
என்று தெரிவித்தார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன். தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வரும் பொது மக்களிடம் அரச அதிகாரிகள் கட்சி வேறுபாடு காட்டுகின்றார்கள் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டையும், மக்கள் பிரதிநிதிகளை அரச அதிகாரிகள் புறக்கணிக்கின்றார்கள் என்ற வடக்கு மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜயதிலகவினதும் குற்றச்சாட்டையும் செவிமடுத்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொதுமக்களிடம் அரச அதிகாரிகள் அரசியல் பேசக் கூடாது. அவ்வாறு செயற்படுவது பிழையான நடவடிக்கை.
இனிமேல் அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் அது குறித்து எழுத்து மூலம் முறைப்பாடு செய்யவேண்டும். மக்களின் பிரதிநிதிகளே அரசியல்வாதிகள் என்பதை அரச அதிகாரிகள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். – என்று கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/78745.html

இலங்கையிடம் ஆஸி. ஒப்படைத்த தமிழர் மீது கடும் சித்திரவதையாம்!

இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்ட செய்தித்தாள் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு ஆஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களில் தமிழர்கள் 4 பேரும் தனியாக பிரிக்கப்பட்டனர். நெல்சன் என அழைக்கப்படும் தமிழரின் முகத்தின் மீது அதிகாரி ஒருவர் தாக்கியதில் அந்த தமிழரின் முகத்திலிருந்து இரத்தம் கொட்டியது. அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் ஆவேசமாக கேள்வி கேட்டனர்.
“விடுதலைப் புலிகளுக்கு நீ பணம் கொடுத்தாயா? அவர்களை உனக்கு தெரியுமா?” – என கேட்டு தாக்கினர். காலால் உதைத்தனர். இன்னொருவர் தண்ணீர் போத்தலால் அவரது முகத்தில் அறைந்தார். தமிழர்களை பின்னர் ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று வரிசையாக இருக்குமாறு உத்தரவிட்டனர். பின்னர் இன்னொரு இடத்திற்கு கூட்டி வந்தனர். அதன் பின்னர் தொடர்ந்து கேள்விகளை கேட்டனர். நெல்சன் தனது வீட்டு முகவரியை தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அதே நாளில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தனது வீட்டுக் கதவை தட்டியதாக நெல்சன் மனைவி குறிப்பிட்டார். காலியில் நெல்சனை விசாரித்துக் கொண்டிருந்த அதிகாரிகளே அவர்களை இங்கு அனுப்பி இருந்தார்கள். அவ்வேளை அவர் தனது 14 வயது மகனுடன் வீட்டில் தனியாக இருந்தார். வீட்டுக்குள் வந்த நபர்கள் நெல்சன் எங்கே எனக் கேட்டனர்.
அதில் ஒருவர் மகன் முகத்தில் ஓங்கி அறைந்தார். அப்பா எங்கே எனக் கேட்டனர். நான் தெரியாது என சொன்னேன் என அந்த சிறுவன் தெரிவித்தான். நெல்சன் ஜூலை மாதம் 9 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார். அவர் தனது கிராமத்திற்கு திரும்பி உள்ளார். நெல்சனும் படகில் இருந்த ஏனைய 3 தமிழர்களும் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் தாங்கள் இன அடிப்படையில் துன்புறுத்தப்படுகின்றனர் எனத் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு தமிழரும் புலி ஆதரவாளர்களோ எனச் சந்தேகிக்கப்படுகின்றனர். நெல்சன் தான் நாடு கடத்தப்பட்ட பின்னர் தனது நிலைமை மோசமாகியுள்ளது என தெரிவிக்கிறார். “நான் அச்சமடைந்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டார் என ‘கார்டியன்’ மேலும் தெரிவித்துள்ளது. AUS -Boot
http://www.jvpnews.com/srilanka/78748.html

Geen opmerkingen:

Een reactie posten