தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 augustus 2014

அவுஸ்திரேலியாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்திய “157”: டோனி அபோட் எச்சரிக்கை!

இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுப்பு- இலங்கைக்கு இந்தியா அழுத்தம்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 03:46.11 AM GMT ]
பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவின் நடவடிக்கைகளுடன் தமது உயர்ஸ்தானிகர அதிகாரி தொடர்பு கொண்டிருப்பதாக இந்தியா சுமத்திவரும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
2012 ஆம் ஆண்டு முதல் இந்த அதிகாரி, இந்தியாவினால் அவதானிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
அமிர் சுபைர் சித்தீக் என்ற அதிகாரியே இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் இதனை மறுத்துள்ள பாகிஸ்தானின் இலங்கை உயர்ஸ்தானிகரம் பாகிஸ்தானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலேயே இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரி மாற்றம் பெற்றுள்ளமை குறித்து தகவல் வெளியிட்ட உயர்ஸ்தானிகரக பேச்சாளர் ஒருவர், குறித்த அதிகாரியின் உடன்படிக்கை காலம் முடிவடைந்த நிலையிலேயே அவர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார் என்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம்
இலங்கைக்கு ஊடாக இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களை பாகிஸ்தானின் புலனாய்வுப்பிரிவான ஐஎஸ்ஐ திட்டமிட்டமை தொடர்பில் 25 விடயங்கள் தொடர்பில் தகவல்கள் தேவை என்று இலங்கைக்கு இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய உள்துறை அமைச்சு இது தொடர்பில் இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கு ஊடாக இலங்கையின் உள்துறை அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்காக பணியாற்றிய ஒரு இலங்கையர் மற்றும் ஏனைய இருவர் தொடர்பில் முழுமையான தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
இவர்கள் இந்தியாவுக்கு வியாபார ரீதியில் அடிக்கடி சென்று வந்துள்ளார்கள்.
இலங்கையர்களை பயன்படுத்தி பாகிஸ்தானிய புலனாய்வுப் பிரிவினர் இந்தியாவில் தாக்குதலுக்கு திட்டமிடுவது தொடர்பில் கடந்த மூன்று வருடங்களாக தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி பரஸ்பர சட்ட உதவிகளுக்கு இலங்கை பொறுப்புக் கூறவேண்டியுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவின் கோரிக்கை தொடர்பில் உள்துறை அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியை நாடியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcft6.html
அவுஸ்திரேலியாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்திய “157”: டோனி அபோட் எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 03:24.15 AM GMT ]
இலங்கை அகதிகள் 157 பேரையும் நௌரு தீவுகளில் தடுத்து வைத்திருப்பது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது தீவிரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
50 சிறுவர்கள் உட்பட்ட 157 இலங்கை அகதிகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நவுரு தீவுகளுக்கு அனுப்பியமை பொறுப்பற்ற செயல் என்று தொழில்கட்சியின் குடிவரவு பேச்சாளர் ரிச்சட் மார்லஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய அதிகாரிகளை சந்திக்க வைப்பதை காட்டிலும் அகதிகளை கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பியிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த 157 இலங்கை அகதிகளும் இந்திய அதிகாரிகளுடன் பேச மறுத்தமையை தொடர்ந்தே நவுரு தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அகதிகளின் சட்டத்தரணிகளே காரணம் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இருப்பினும் தாம் அகதிகளை இந்திய அதிகாரிகளுடன் பேசவேண்டாம் என்று கூறவில்லை என்று அகதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பல ஆண்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் பலவந்தமாக விமானத்தில் ஏற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் நவுரு தீவுக்கு சென்றுள்ள இந்த அகதிகள் அதிர்ச்சியடைந்தவர்களாக உள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நௌரு தகவல்களின்படி குறித்த 157பேரையும் தங்கவைக்க போதிய இடவசதிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நவுரு தீவில் ஏனைய நாட்டு அகதிகள் அமைதியான போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று சோமாலிய பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் எதிர்க்கட்சிகளை இந்த விடயத்தில் கண்டித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்,  நவுரு தீவில் குறித்த 157 அகதிகளும் குடியமர்த்தப்படுவர். அது வெற்றியளிக்காதுபோனால் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcft5.html

Geen opmerkingen:

Een reactie posten