பெண் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம் கோரியமை தொடர்பிலான குற்றச்சாட்டை விசாரணை செய்ய ஆணைக்குழு?
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 10:16.26 AM GMT ]
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சில வீராங்கனைகள் அணியில் சேர்த்துக் கொள்ள தெரிவுக்குழு உறுப்பினர்கள் வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்வில் ஒரு ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்ததானந்த அளுத்கமகே உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் நிசாந்த ரணதுங்கவிற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதவான் ஒருவரின் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வீராங்கனைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் அதேவேளை, சர்வதேச ரீதியில் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடுமென அமைச்சர் அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiv4.html
ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டாம்!- ஜோன் அமரதுங்க
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 10:24.57 AM GMT ]
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்த வேண்டுமாயின் பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் பின்னர் ஜனாதிபதியை தேர்தலை நடத்தலாம்.
பாப்பரசர் இலங்கை விஜயம் செய்யும் போது ஜனாதிபதி தேர்தல் நடத்துவது கத்தோலிக்க மக்களுக்கும், பாப்பரசருக்கும் இழைக்கும் அநீதியாகும்.
எனவே கத்தோலிக்க மக்கள் பாப்பரசரை சுதந்திரமாக சந்திக்க ஏற்பாடுகள் செய்யும் வகையில் ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்.
எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது.
ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
தேர்தல் நடைபெறும் காலத்தைப் போன்றே தேர்தலின் பின்னர் ஒன்று இரண்டு வாரங்களுக்கு சற்று பதற்றமான நிலைமை நீடிக்கும் என்பது அனைத்து மக்களும் அறிந்ததே.
தேர்தல் காலங்களில் ஊரடங்குச் சட்டம் அவசரகால சட்டம்போன்ற அமுல்படுத்தப்படும்.
பாப்பரசரின் விஜயத்தின் போது இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
பாப்பரசரின் இலங்கை விஜயம் செய்து சில வாரங்களின் பின்னர் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையா அல்லது தனிப்பட்ட ரீதியில் விடுக்கப்பட்ட கோரிக்கையா என்பதனை அவர் குறிப்பிடவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiv5.html
மகாநாயக்க தேரர்களை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 10:48.54 AM GMT ]
இன்று கண்டிக்கு விஜயம் செய்த அவர், முதலில் அஸ்கிரிய மகாநாயக்கர் உடுகம ஸ்ரீபுத்தரக்கித்த தேரரை சந்தித்தார்.
இதன் போது உயர்ஸ்தானிகரிடம் பேசிய புத்தரக்கித்த தேரர், இலங்கை அரசாங்கம் இன மற்றும் மதங்களை அடக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை எனக் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை அடக்கி நாட்டுக்கு சமாதானத்தை கொண்டு வந்தமை தொடர்பில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் உண்மையை சரியான முறையில் புரிந்து கொள்ளவில்லை எனவும் மகாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் தலதா மாளிகைக்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுபட்ட உயர்ஸ்தானிகர் அதனையடுத்து மல்வத்து மகாநாயக்கர் ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து பேசினார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiv6.html
நான் என்ன பொய்யா சொல்கிறேன்?: ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பிய தாய்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 10:55.23 AM GMT ]
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட இரண்டாம் நாள் அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இன்றைய சாட்சியப் பதிவுக்காக ஆணைக்குழுவில் இருந்து கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 12 கிராம சேவகர் பகுதிகளில் இருந்து 57 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சாட்சியமளித்தவர்களில் பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் இராணுவத்திற்கு எதிராகவே அமைந்துள்ளன. அத்துடன் கடற்படை மற்றும் வெள்ளை வானில் கடத்தி சென்றவர்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆணைக்குழு முன்னால் பொய்யா சொல்லிக் கொண்டு இருக்கின்றோம் என மகனை காணாத தாயொருவர், ஆணைக்குழுவினர் எழுப்பிய கேள்விகளுக்கு இன்றைய தினம் கோபத்துடன் பதிலளித்திருந்தார்.
குறித்த தாய் தனது சாட்சியத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டிற்குள் இராணுவம் வந்ததும். எங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் இராணுவம் எடுத்துக் கொண்டது. அப்போது எனது மகன் ஜெபநேசன் காயமடைந்த நிலையில் இருந்தார்.
எங்களை ஓமந்தைக்கு 2009.04.21 ஆம் திகதி இராணுவம் கொண்டு சென்று அங்கு வைத்து மகனை எங்களிடம் இருந்து பிரித்துச் சென்றது.
அப்போது எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியே ஏற்றிச் சென்றவர்கள் தான் இன்றுவரை தகவல் எதுவும் மகன் பற்றித் தெரியாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர் மகனை இராணுவம் கொண்டு சென்றதைக் கண்டீர்களா? ஏன் பின் தொடரவில்லை? அங்கு என்ன நிலை இருந்தது? என்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டு சென்றனர்.
அதற்குப் பதிலளித்த குறித்த தாயார், கோபமடைந்தவராய் நாங்கள் பசி, பட்டினியுடன் போய்க் கொண்டிருக்கும் போது எப்படி எல்லாத்தையும் பார்ப்பது. அது ஓமந்தை என்று மட்டும் தெரியும். எப்படி இருந்தது என்று எல்லாம் தெரியாது.
அத்துடன் பிள்ளையை எங்களிடம் இருந்து பிரித்து சென்றதும் இராணுவம் கூட்டிச் சென்றதையும் நேரடியாக காணாமல், இங்கு வந்து என்ன பொய்யா சொல்லிக் கொண்டு இருக்கின்றேன் என்று மிகவும் விரக்தியுடன் சாட்சியமளித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXiv7.html
Geen opmerkingen:
Een reactie posten