பிரான்ஸ் அணு நிலையம் மேல் பறந்த ஆளில்லா விமானம் அல்-கைடாவின் விமானமா ?
இன் நிலையில் இதனை சர்வசாதாரணமாக விட்டுவிட முடியாது என்று பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அல்-கைடா மற்றும் ஐ.எஸ் -ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் நிலைகள் மீது பிரான்ஸ் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதில் தாக்குதல் நடத்த இஸ்லாமிய தீவிரவாதிகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள அணு நிலைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்களா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1346.htmlவிண்வெளிக்கு மக்கள் செல்லலாம்: ஆனால் அதற்கான விமானம் வெடித்துச் சிதறியது !
ரிச்சாட் பிறான்சன் என்றால் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. லண்டனில் சாதாரணமாக ஒரு தள்ளு வண்டிலில் ஐகிரீம் விற்று திரிந்த நபர். பின்னர் சினிமா தியேட்டரில் சில படங்களை எடுத்து ஓடினார். அதில் வந்த காசை எடுத்து மியூசிக் ஆல்பங்களை விற்றார். இப்படியே படிப்படியாக முன்னேறி வேர்ஜின் நிறுவனத்தை ஆரம்பித்தார். பின்னர் அவர் விமானங்களை கூட சொந்தமாக வாங்கி வேர்ஜின் விமானசேவையினை முன்னெடுத்து பெரும் பணக்காரர் வரிசையில் இடம்பிடித்தார். பிரித்தானிய மகாராணியே அவரை அழைத்து "சர்" பட்டம் கொடுக்கும் அளவு அவரது வளர்ச்சி பிரமிக்கவைக்கும் வகையில் இருந்த்து. இவரது நீண்ட நாள் கனவு என்னவென்றால், சாதாரணம் மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வது தான்.
அதாவது விண்வெளிக்கு விஞ்ஞானிகள் மட்டுமே செல்லமுடியும், என்ற நிலை தற்போது காணப்படுகிறது. ஆனால் அதற்கு பொதுமக்களை அழைத்துச் சென்று திரும்புவதது என்று ஒரு திட்டத்தை தீட்டினார் ரிச்சாட் பிறான்சன். இதற்கு வேர்ஜின் கலக்டிக் என்று பெயர் வைத்து, பெரும் பணச் செலவில் ஒரு விண்வெளி சென்று திரும்பக் கூடிய விமானத்தை அவர் தயாரித்து வருகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களும் தமது வாழ்நாளில் புவியீர்பு விசையைக் கடந்ததே இல்லை. ஒரு சிலரைத் தவிர. புவியீர்ப்பு விசையைக் கடந்து விண்வெளிக்குச் சென்றால், அனைத்துப் பொருட்களும் மிதக்கும். நீரை கூற்றினால் கூட அது அந்தரத்தில் பறக்கும். இதுபோன்ற ஒரு அனுபவத்தை காண பலர் துடிக்கிறார்கள். இதனை வைத்து பெரும் பணத்தை சம்பாதிக்கலாம் என்பது ரிச்சாட் யோசனை.
ஒரு முறை இவ்வாறு விண்வெளிக்குச் சென்றுவர, சில பல கோடிகள் ஆகும். ஆனால் அதனை கட்டணமாகச் செலுத்தி சென்றுவர பல செல்வந்தர்கள் ஆர்வமாக உள்ளார்கள். இந்த திட்டத்தை ரிச்சாட் ஆரம்பித்த நாள் முதலே அவருக்கு பெரும் செல்வந்தர்களின் உதவியும் ஆதரவும் கிட்டியுள்ளது. ஆனால் இவர் வடிவமைக்கும் இந்த விமானம் பற்றி பல கருத்துகள் நிலவி வருகிறது. குறிப்பாக அதில் தகுந்த பாதுகாப்பு இலலையென்றும், விண்வெளி ஏஜன்சி சொல்லும் கட்டுப்பாடுகளை அவர்கள் பின்பற்றவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் நாசா போன்ற அனுபவம் மிக்க நிறுவனங்களிடம் ஆலோசனை பெறாமல் , ரிச்சாட் இதனை வடிவமைத்து வந்துள்ளார். இதுபோன்ற ஒரு மாதிரி விமானத்தை இவர்கள் கடந்த வெள்ளியன்று ஏவியுள்ளார்கள். ஆனால் அது 40,000 ஆயிரம் அடி உயரத்தில் வெடித்து சிதறிவிட்டது. இதனால் பல ஊடகங்கள் தற்போது இத்திட்டம் தொடர்பாக கவலை தரும் செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1353.html
லண்டனில் துப்பாக்கியோடு அலையும் குழுக்கள்: இது தமிழ் கடை உரிமையாளர்களுக்கும் பொருந்தும் !
பிரிட்டன் மான்செஸ்டர் பகுதியில் பிரகதி சிங் என்னும், இந்திய வம்சாவளி நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபர் 3 பிள்ளைகளின் தந்தை என்றும் அவரைப் அப்பகுதி மக்கள் சாளி என்றே அழைப்பார்கள் என்றும் மான்செஸ்டர் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். மான்செஸ்டரில் அவருக்கு சொந்தமாக ஒரு கடை உள்ளது. இரவுவேளை அவர் கடையை மூடிக்கொண்டு இருக்கும்வேளை, கடைக்குள் துப்பாக்கிகள் சகிதம் இருவர் புகுந்துள்ளார்கள். பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் அவர்கள், பிரகதி சிங்கை தாக்கியுள்ளார்கள். பின்னர் அவர்கள் பணத்தை எடுக்க முயற்சித்தவேளை இதனை தடுக்க முற்பட்டுள்ளார் சிங்.
இதனால் ஏற்பட்ட இழுபறி நிலையை அடுத்து, அவர்கள் துப்பாக்கியால் நெஞ்சிலும் வயிற்றிலும் சுட்டுள்ளார்கள். பொதுவாக லண்டனில் துப்பாக்கிகளின் பாவனை மிகவும் குறைவாகவே உள்ளது. அதிலும் பல கொள்ளைக் கோஷ்டிகள் போலித்துப்பாக்கியை வைத்தே கடைகளில் கொள்ளையடிப்பது வழக்கம். இதனால் பல கடை உரிமையாளர்கள், கொள்ளையர்கள் கொண்டுவந்து மிரட்டும் துப்பாகிகளை நம்புவது இல்லை. இதுவே பிரகதி சிங்கின் கொலைக்கும் காரணமாக அமைந்திருக்கலாம். கொள்ளையர் கைகளில் துப்பாக்கி இருக்கிறது என்று தெரிந்தும் அவர், ஏன் அவர்களோடு இழுபறி நிலைக்குச் சென்றார் என்று தெரியவில்லை.
மேலும் பிரான்ஸ், ஜேர்மன் , போலந்து போன்ற நாடுகளில் இருந்து அதிகளவான இளைஞர்கள் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்து உள்ளார்கள். இவர்கள் சிறிய ரக கைத்துப்பாக்கிகளை தமது வாகனங்களில் மறைத்து வைத்துக்கொண்டு அதனை லண்டனுக்குள் கடத்தி வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். எனவே தமிழ் கடை உரிமையாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாகும். யாராவது துப்பாக்கியோடு வந்தால் உங்கள் வீரதீர செயலைக் காட்ட அது நேரம் அல்ல. அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிட்டு, பின்னர் பொலிசில் அறிவித்து விட்டு, இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதே மேல். அத்தோடு உயிர் இருந்தால் தான் உங்கள் உறவுகளையும் நீங்கள் கவனித்துக்கொள்ள முடியும். பணம் இன்று இருக்கு நாளை வரும். ஆனால் உயிர் போனால் திரும்ப வராது !
http://www.athirvu.com/newsdetail/1352.html
Geen opmerkingen:
Een reactie posten